2/28/2014

Google Fiber சேவை தொடர்பில் புதிய
கூகுள் நிறுவனமானது Google Fiber எனும் அதிவேக இணைய இணைப்பினை வழங்குவது தொடர்பான அறிவித்தலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு புதியதகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவில் 34 நகரங்களில் இச்சேவையினை முதன் முதலாக அறிமுகம் செய்யவுள்ள தகவலே அதுவாகும்.
சாதாரண இணைய வேகத்தினை விடவும் 100 மடங்கு வேகம் கொண்ட இந்த இணைய இணைப்பு சராசரியாக 1Gbps வேகத்தினை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது (வீடியோ இணைப்பு)

http://www.viyapu.com/images/news/large/swipe_keyboard_002-21022014.jpg
மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அவற்றில் கை அசைவு தொழில்நுட்பமான ஸ்வைப்(Swype) தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ் இயங்குதளமானது ஏப்ரல் 2ம் திகதியிலிருந்து 4ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சன்பிரான்ஸிஸ்கோவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Windows Phone 8.1 இயங்குதளத்தில் ஸ்வைப்(Swype) கீபோர்ட் (வீடியோ இணைப்பு)

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்(MWC) மொபைல் கணகாட்சியில் தற்போது ஏராளமான மொபைல்கள் வெளியாகி வருகின்றன.
இது பிப்பரவர் 24 முதல் 27 வரை நடைபெற இருக்கின்றது இந்த கண்காட்சி இதில் நிறைய மொபைல் மாடல்களை பெரிய கம்பெனிகள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
அப்படி இதுவரை வெளியான பெரிய மொபைல்களின் பட்டியலை பார்க்கலாமாங்க இதோ...

சாம்சங் கேலக்ஸி S5

5.1 Inch,
1080x1920 px display,
Super AMOLED
Android v4.4.2 (KitKat) OS
Quad core 2500 MHz processor
16 MP Primary Camera,
2.1 MP Secondary
3G, WiFi, NFC
16 GB Internal Memory,
128 GB Expandable
2 GB RAM
2800 mAh, Li-Ion battery

நோக்கியா X

 

முதன் முதலில் வந்திருக்கும் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல் இதன் சிறப்பம்சங்கள் 4.0 Inch,
480x800 px display,
IPS LCD
Android OS Dual core
1000 MHz processor
3 MP Primary Camera
3G, WiFi
4 GB Internal Memory,
32 GB Expandable
768 MB RAM
1500 mAh, Li-Ion battery

நோக்கியா Xi

5.0 Inch,
480x800 px display,
IPS LCD
Android OS Dual core
1000 MHz processor
5 MP Primary Camera
2 MP Secondary
3G, WiFi
4 GB Internal Memory,
32 GB Expandable
768 MB RAM
2000 mAh, Li-Ion battery

நோக்கியா X+

4.0 Inch,
480x800 px display,
IPS LCD
Android OS
Dual core 1000 MHz processor
3 MP Primary Camera
3G, WiFi
4 GB Internal Memory
32 GB Expandable
768 MB RAM
1500 mAh, Li-Ion battery

எல்.ஜி. G pro 2

5.9 Inch,
1080x1920 px display,
True HD IPS Plus LCD
Android v4.4.2 (KitKat)
Quad core 2260 MHz processor
13 MP Primary Camera,
2.1 MP Secondary
3G, WiFi, DLNA, NFC
16 GB Internal Memory,
64 GB Expandable
3 GB RAM
3200 mAh, Li-Ion battery

எல்.ஜி. G2 மினி

4.7 Inch,
540x960 px display,
IPS LCD
Android v4.4.2 (KitKat) OS
Quad core 1200 MHz processor
8 MP Primary Camera
1.3 MP Secondary
WiFi, DLNA
64 GB Expandable
1 GB RAM
2420 mAh, Li-Ion battery


எல்.ஜி L சீரிஸ்

இது ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ்ஸில் இயங்கக்கூடியதாகும் மேலும் இது விற்பனைக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகுமாங்க

எச்.டி.சி. டிஸைர் 816

5.5-inch display
1.6GHz quad-core processor
4G LTE connectivity and two powerful cameras a
13MP rear-facing camera
5MP front-facing camera
2600 mAh Battery

எச்.டி.சி டிஸைர் 610

4.7-inch qHD Display having resolution of 720 x 1280 pixels Android 4.3 Jelly Bean 1.2GHz quad-core Qualcomm Snapdragon 400 CPU 8MP Rear Camera and 1.3MP Front Camera 1GB RAM Connectivity: 2G, 3G, 4G support, Bluetooth 4.0 and Wi-Fi 8GB Internal Storage Expandable up to 64GB


சோனி எக்ஸ்பீரியா Z2

5.2 Inch,
1080x1920 px display,
IPS LCD
Android v4.4.2 (KitKat)
Quad core 2300 MHz processor
20.7 MP Primary Camera,
2.2 MP Secondary
3G, WiFi, DLNA 16 GB Internal Memory,
64 GB Expandable
3 GB RAM
3200 mAh, Li-Ion battery

சோனி எக்ஸ்பீரியா Z2 டேப்லட்

A 10.1-inch full-HD TRILUMINOS display
Google Android 4.4 (Kitkat) OS
Quad-core Powered by a
2.3GHz quad-core Qualcomm Snapdragon 801 processor
8.1 MP Rear Camera
2.2-megapixel front-facing camera
3 GB Of RAM
16GB inbuilt storage
Expandable up to 64GB via microSD card.


எக்ஸ்பீரியா M2

4.8 Inch,
540x960 px display,
TFT Android v4.3 (Jelly Bean)
Quad core 1200 MHz processor
8 MP Primary Camera,
0.3 MP Secondary
3G, WiFi, DLNA, NFC
8 GB Internal Memory,
32 GB Expandable
1 GB RAM
2300 mAh, Li-Ion battery

நோக்கியா ஆஷா 230

A 2.8-inch QVGA touch screen
1.3-megapixel rear camera
Bluetooth 3.0
32GB and packs 1020 mAh battery

லினோவா யோகா டேப்லட் 10

A 10.0 Inch,
1200x1900 px display,
IPS LCD
Android v4.3 (Jelly Bean)
Quad core 1600 MHz processor
8 MP Primary Camera,
1.6 MP Secondary
3G, WiFi 16 GB Internal Memory,
64 GB Expandable
2 GB RAM
9000 mAh, Li-Ion battery

லினோவா S660

4.7-inch HD capactive touch screen display 1.3 GHz quad-core MediaTek MT6582m processor Android 4.2 (Jelly Bean) Dual SIM 8MP rear camera with LED Flash 0.3MP (VGA) front-facing camera 1GB RAM 8GB internal memory expandable memory up to 32GB with micro SD 3G, WiFi 802.11 b/g/n


லினோவா S850

5-inch HD capactive touch screen display
1.3 GHz quad-core MediaTek MT6582 processor with PowerVR SGX544 GPU
Android 4.2 (Jelly Bean)
8.2 mm thick
Dual SIM 3.5mm audio jack, FM Radio
13MP rear camera with LED Flash
5MP front-facing camera
1GB RAM
16GB internal memory

லினோவா S860

A 5.3-inch (1280 x 720 pixels)
HD capactive touch screen display
1.3 GHz quad-core MediaTek MT6582 processor
Android 4.2 (Jelly Bean)
Dual SIM (GSM + GSM)
8MP rear camera with LED Flash
1.5MP front-facing camera
2GB RAM,
16GB internal memory
3G, WiFi 802.11 b/g/n,
Bluetooth, GPS/A-GPS
4000 mAh battery


சாம்சங் கீர் 2

1.63 inch Super AMOLED (320 x 320) 1.0 GHz Dual Core Processor Tizen based wearable platform

சாம்சங் கேலக்ஸி கீர் பிட்

1.84" Curved Super AMOLED (432x128) Display 23.4 x 57.4 x 11.95 mm, 27g Dimensions Bluetooth v4.0 LE IP67 Dust and Water Resistant Standard Battery 210mAh


















நோக்கியா ஆண்ட்ராய்டு மற்றும் கேலக்ஸி S5 வெளியான ஷோ இதுதான்..

கூகுளில் தகவல்களை தேடுவதற்குகூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு-ட்யூப், இ-பே போன்ற பிற தளங்களிலும் ஏதாவது ஒரு தகவலை தினமும் தேடிக் கொண்டிருப்போம்.
இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும்.
இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும்.
இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம்.
தேடல் முறைகளில் சில வேகமான வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.
குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட :
உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா? அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும்.
உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள்.
அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf எனத் தர வேண்டும்.
இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும்.
இதே போல் ps, doc, ppt, xls, rtf ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம்.
இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.
முடிவுகளை விலக்க :-
சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை.
அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம்.
எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள்.
அப்போது ஐ-பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad என அமைக்க வேண்டும்.
இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com என்றும் Apple -iPad -PDF எனவும் பயன்படுத்தலாம்.
உள்ளூர் தகவல் மட்டும் :-
சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai] என டைப் செய்து தேடவும்.
சீதோஷ்ண நிலை அறிய weather [madurai] என டைப் செய்திடலாம்.
அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம்.

கூகுளில் தகவல்களை தேடுவதற்கு சிறந்த வழிகள்..!

   

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சாம்சங்கின் கேலக்ஸி S5 யை சாம்சங் நேற்று ஸ்பெயினில் வெளியிட்டது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து இது அனைத்து ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்றும் நேற்று சாம்சங் அறிவித்துள்ளது.
இதில் இதன் திரை 5.25 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கலாம். இந்த போனை வடிவமைப்பதில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த போனில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் சாப்ட்வேர் தொகுப்பின் புதிய பதிப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும்.
இதில் முக்கியமாக விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும். இதன் கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும்.
இதன் பிராஸஸர் 2.5GHz ஸ்நாப்ட்ரேகன் 800 கொண்டுள்ளது இதனால் இதன் வேகமும் நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம்.
மேலும் இதன் ரேம் மெமரி 3 ஜிபி க்கு உள்ளது அதனுடன் இதன் பேட்டரி 2800mAh திறனுடன் இருக்கிறது மற்ற மொபைல்களுடன் இதை ஒப்பிடுகையில் இது சற்று குறைவுதான்.
ஏனென்றால் லினோவாவில் 4000mAh பேட்டரி திறன் கொண்ட மொபைல்களே வந்துவிட்டது ஆனால் இவர்கள் 2800mAh தான் கொடுத்துள்ளனர்.
சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் காலக்ஸி S4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது.
அந்த பெயரை இது தகர்க்குமா அல்லது தோல்வி அடையுமா என்பதை ஏப்ரல் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெளியானது சாம்சங்கின் கேலக்ஸி S5...!

யூடியூப் வீடியோக்களை GIF
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றுவதற்கு Gifff.fr (http://gifff.fr/) எனும் தளம் உதவி புரிகின்றது.
இத்தளத்திற்கு சென்று நீங்கள் GIF கோப்பாக மாற்றவேண்டிய வீடியோவின் யூடியூப் URL இனை உட்புகுத்தி Enter கீயினை அழுத்த வேண்டும்.
அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் தேவையான பகுதிகளை தேர்ந்தெடுக்கும் வசதி காணப்படுகின்றது.
அதேபோல செட்டிங்ஸ் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.
இவற்றினை தெரிவு செய்ததன் பின்னர் Make it So என்பதனை அழுத்தி செயன்முறை முடிந்த பின்னர் Download Now என்பதனை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்

யூடியூப் வீடியோக்களை GIF கோப்பாக மாற்றுவதற்கு

கடந்த பிப்ரவரி 4ல் தன் 10 பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
ஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது.
ADVERTISEMENT
இந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் பதிவு செய்து மகிழ்ந்தனர். இது என் படம். உங்களுடையது இங்கு உள்ளது என அதற்கான லிங்க் தரப்பட்டது.
ஒவ்வொருவரும் பேஸ்புக்கில் லாக் இன் செய்த பின்னர் look back என்ற முகவரியில் உள்ள பக்கத்திற்குச் சென்றால், அவர்களுக்கான வீடியோ கிளிப் கிடைக்கும். பிப்ரவரி 4, பேஸ்புக் பிறந்த நாள் அன்று இவை வெளியிடப்பட்டன.
              பேஸ்புக் லுக்பேக் வீடியோ 100 கோடி பேர் பார்த்தனர்...!
இவை ஒரு மாதத்திற்கு இந்த தளத்தில் கிடைக்கும். இதனை எடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் டைம் லைன் பக்கத்தில் பதிந்து வைத்தால், தொடர்ந்து எப்போதும் இடம் பெறும்.
நூறு கோடி மக்களுக்கும் மேலானவர்கள் இந்த படத்தைப் பெற்றனர் என்பது டிஜிட்டல் வரலாற்றில் ஒரு புதிய தகவலாகும்.
பேஸ்புக் கூட சரியாக எத்தனை வீடியோக்கள் இதுபோல உருவாக்கப்பட்டன என்று கணக்கு சொல்ல இயலவில்லை. ஆனால், பல கோடிப் பேர் பெற்றனர் என்று உறுதியாகத் தெரியவந்துள்ளது.
இவற்றைப் பெறுவதில் மக்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்த பேஸ்புக், தொடர்ந்து இவற்றை எடிட் செய்வதற்கான டூலையும் வெளியிட்டது. தாங்கள் விரும்பும் படத்தினை இணைக்கவும், விரும்பாதவற்றை நீக்கவும் வசதி செய்யப்பட்டது. அல்லது, தாங்களே தயாரித்த படத்தினை பதிந்து கொள்ளவும் அனுமதி தரப்பட்டது.
தங்களுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்ட பேஸ்புக் தளத்தில் சேர்ந்தது முதல் நாம் என்ன செய்தோம் என்பதனை அறிந்து கொள்வது நம்மை நாமே ரெப்ரெஷ் செய்து கொள்வது போல் இருந்தது எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் லுக்பேக் வீடியோ 100 கோடி பேர் பார்த்தனர்...!

உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்பு�
உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம்
ஒன்றை செயல்படுத்த இருப்பதாக நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுக்க உள்ள தனது பயனாளிகளுக்கு இலவச இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்திருப்பதாக Mark Zuckerberg நேற்று பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவைகள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம்.
இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பாவனையாளர்களுக்காக இலவச இன்டர்நெட் வசதி..!

இன்றைக்கு குறிப்பிட்ட சில இன்டர்நெட் யூஸர்ஸ் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது மொத்தத்தில் 26% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன.
ADVERTISEMENT
இவர்களில் 18.7% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர்.
8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கின்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர்.

              பிரவுசர்களிடம் சிறிது ஜாக்கிரதையாக இருங்கள்..!

ஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
ஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எந்த இடத்தின் தவறைத் தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர். அவற்றைப் பயன்படுத்தி தங்கள் நாச வேலைக்கு அடித்தளம் அமைக்கின்றனர்.
நிறுவனங்களில், அதன் ஊழியர்கள், புதிய பிரவுசருக்கு மாறுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதி அளிப்பதில்லை.
சில காலத்திற்குப் பின்னரே, மிகத் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும்.
இது போல பழைய பிரவுசர்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது, நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கும், அவற்றில் உள்ள விலை மதிப்பில்லா டேட்டா பைல்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.

பிரவுசர்களிடம் சிறிது ஜாக்கிரதையாக இருங்கள்..!

இறுதியில் வந்தாச்சுங்க நோக்கியாவிலும் ஆண்ட்ராய்டு. ஆமாங்க, இன்று ஸ்பெயினில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் நோக்கியா தனது மூன்று ஆண்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்தியது.
அதன் பெயர்கள் நோக்கிய X, X+, மற்றும்XL என்பது ஆகும் மைக்ரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு அதை முன்னோக்கி கொண்டு வர எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது எனலாம்.
ADVERTISEMENT
அதில் ஒன்றுதான் இது, காலத்திற்கேற்ப்ப நாமும் மாற வேண்டும் என்பதை மைக்ரோசாப்ட் நன்கு அறிந்து வைத்திருக்கிறது அதனால் தான் இன்று உலகின் பணக்கார கம்பெனியாக வலம் வந்து கொண்டிருக்கிறது எனலாம்.
          நோக்கியாவிலும் ஆண்ட்ராய்டு வந்தாச்சுங்க...!
இந்த சூட்சமத்தை தெரியததால் தான் அன்று நோக்கியா தனது நிறுவனத்தை மைக்ரோசாப்டிடம் விற்றது.
இன்று வெளியான இந்த மொபைல்கள் நிச்சயம் சந்தைகளில் பெரிய வெற்றி பெறும் என்று நாம் கூறலாம்.
இதன் விலைகள் முறையே ரூ14000 முதல் ரூ.18604 வரை இருக்கும் என நோக்கியா கூறியுள்ளது.

நோக்கியாவிலும் ஆண்ட்ராய்டு வந்தாச்சுங்க...!

2/27/2014

      

இன்றைக்கு ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா?
அதே வேளையில், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா?
ADVERTISEMENT
அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்
முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும்.
குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "Tools" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், "Report an issue" என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது புதிய "Feedback" என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக "Tell us what is happening (required)" என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும்.
குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்த வகையான தேடல் என்றும் குறிப்பிடவும். உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதனையும் தர வேண்டாம்.
ப்ளக் இன் புரோகிராம் பயன்படுத்தும் போது கிராஷ் ஏற்படுகிறதா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட டேப்பில் கிளிக் செய்திடுகையில் ஏற்படுகிறதா என்பதனையும் விளக்கிக் கூறவும். "Include this URL" மற்றும் "Include this screenshot" ஆகியவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
குரோம் பிரவுசரில் தேடல் பகுதியில், டெக்ஸ்ட் அமைக்கையில், பிரவுசர் தன் குக்கீகளிடமிருந்து எந்த வகையான டெக்ஸ்ட் அமைக்கப்படலாம் என சிலவற்றைக் காட்டும். இந்த வசதியை நீக்கிவிடலாம்.
ஏனென்றால், பெரும்பாலான இடங்களில், இந்த வசதி பயனற்றதாகவே உள்ளது. இதனை நீக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.
பின்னர் அதில் செட்டிங்ஸ் ("Settings") என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய "Settings" டேப் கிடைக்கும். அல்லது chrome://chrome/settings/ எனவும் டைப் செய்து இதனைப் பெறலாம். இங்கு "Search" என்பதற்குக் கீழாக உள்ள "Enable Instant for faster searching" என்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
   
இதனை அடுத்து விண்டோவின் கீழாக உள்ள "Show advanced settings" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று, "Privacy" என்ற இடத்தில் உள்ள "Use a prediction service to help complete searches and URLs typed in the address bar" என்பதில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.இவற்றை முடித்த பின்னர், "Settings" டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர், தன் மாறா நிலையில், தரவிறக்கம் செய்யப்படும் பைல்களை C:UsersName Downloads என்ற டைரக்டரியில் பதிந்து வைக்கும். இதில் Name என்பது,யூசரின் பெயர் ஆகும்

இதற்குப் பதிலாக, நாம் தரவிறக்கம் செய்யப்படும் பைல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை வெவ்வேறு டைரக்டரி அல்லது போல்டர்களில் பதிந்து வைக்க விரும்புவோம். எனவே, தரவிறக்கம் செய்திடும் முன், பிரவுசர் நம்மிடம், எந்த இடத்தில் தரவிறக்கம் செய்திட வேண்டும் எனக் கேட்பது நமக்கு வசதியைத் தரும். இதற்குக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.முன்பு கூறியது போல, செட்டிங்ஸ் பக்கம் செல்லவும்.

செட்டிங்ஸ் டேப் திறந்தவுடன், "Show advanced settings என்பதில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று "Downloads" என்பதன் கீழே, "Ask where to save each file before downloading" என்பதில் டிக் செய்து அமைக்கவும். முடிந்தவுடன் settings டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர் தொடங்குகையில், எந்த இணையப் பக்கத்துடன் தொடங்க வேண்டும் என்பதனை, இங்கு எப்படி அமைக்கலாம் என்பதனைக் காணலாம்.மாறா நிலையில், குரோம் பிரவுசர் தொடங்குகையில், "New Tab" பக்கம் காட்டப்படும்.

இதில், பயனாளர், அடிக்கடி பார்க்கும் இணையதளப் பக்கங்களின் காட்சி காட்டப்படும். இது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குத் தேவையான, தாங்கள் அடிக்கடி செல்லும் இணையதளப் பக்க படத்தின் மீது கிளிக் செய்து, அதனைப் பெற்று பணி தொடங்கலாம்.சிலருக்கு இது பிடிக்காது. அவர்கள், தாங்கள் விரும்பும் இணையதளம் மட்டும் தானாகத் திறக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள்.அல்லது எந்த இணையப் பக்கமும் இல்லாமல், காலியாக உள்ள பக்கமே காட்டப்பட வேண்டும் என விரும்புவார்கள்.இதனை அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.

ரென்ச் (wrench) பட்டனைக் கிளிக் செய்திடவும். பின்பு ஆப்ஷன்ஸ்(Options) தேர்ந்தெடுக்கவும். இப்போது "Options" டேப் காட்டப்படும். இனி இடதுபக்கம் உள்ள "Basics" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். On startup என்ற பிரிவில், "Open the following pages" என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். குரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்கு "Add" பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு "Add page" என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும். அப்போதுதான் திறக்கப்பட்ட இணைய தளத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Use current pages" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

காலியாக உள்ள பக்கத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Add page" என்ற டயலாக் பாக்ஸில், about:blank என டைப் செய்திடவும். பின்னர், "Add" பட்டனில் அழுத்தி, டயலாக் பாக்ஸை மூடவும்

 

உங்க கூகுள் குரோம் அடிக்கடி கிராஷ் ஆகுதா?

   

இன்றைக்கு இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை.
புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது.
ADVERTISEMENT
இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.
ஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது.
இருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 33 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 35 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 130 கோடியைத் தாண்டிவிட்டது.
கூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 35 கோடியாக இருந்தனர்.கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல.

     
கூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது.
புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுகிறது இதுமேலும் சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுக்கிறது கூகுள் வீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன.
  
மேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து எளிதில் அதன் இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது

வேகமாக வளர்ந்து வரும் கூகுள் ப்ளஸ்...!

ஒவ்வொரு ஆண்டும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்(Mobile world congress) MWCஎன்கிற டெக் ஷோ உலக அளவில் ரொம்ப பிரபலம்ங்க அதன் சிறப்பம்சம் என்னவென்றால் மொபைல் கம்பெனிகள் அனைத்தும் தங்களது புதிய மொபைல்களை இங்கு தான் வெளியிடுவார்கள்.
இந்த ஆண்டும் MWC யானது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் இன்று கோலகலமாக தொடங்கியுள்ளது இன்று இந்த விழாவில் தாங்க சாம்சங்கின் S5 மற்றும் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு கொண்டு வெளிவரும் மொபைலான நார்மாண்டி ஆகியவை வெளிவர இருக்கின்றன.
இன்று அந்த விழாவில் வெளிவர இருக்கும் அந்த மொபைல்களை பற்றி ரவுன்ட் பார்க்கலாமாங்க...

சாம்சங் கேலக்ஸி S5

இதன் சிறப்பம்சங்கள் 5.2 Inch,
1440x2560 px display,
Super AMOLED Android v4.4.2 (KitKat)
2000 MHz processor
16 MP Primary Camera,
3.2 MP Secondary
3G, WiFi, NFC
64 GB Expandable
3 GB RAM
3200 mAh, Li-Ion battery

நோக்கியா X நார்மாண்டி

இதன் சிறப்பம்சங்கள்
4.0 Inch, 480x854 px display, TFT Android v4.4.2 (KitKat) Dual core 1000 MHz processor 5 MP Primary Camera 3G, WiFi 4 GB Internal Memory, 32 GB Expandable 512 MB RAM 1500 mAh, Li-Ion battery

சோனி எக்ஸ்பீரியா G

இதன் சிறப்பம்சங்கள்
4.8-inch screen (most probably HD: 720p x1280p) Android KitKat (or at least v4.3 Jelly Bean) 1GB Of RAM 8GB Internal Memory 8.0-megapixel camera with LED flash

எச்.டி.சி ஒன் 2

  http://tamil.gizbot.com/img/2014/02/24-1393225656-4.jpg

 

இதன் சிறப்பம்சங்கள்
5.0 Inch, 1080x2048 px display, S-LCD 3 Android v4.4.2 (KitKat) Quad core 2300 MHz processor 5 MP Primary Camera, 2.1 MP Secondary 3G, WiFi, NFC 2 GB RAM


 

 

 

 

 

 

 

 

 

 சோனி எக்ஸ்பீரியா Z2

இதன் சிறப்பம்சங்கள்
5.2 Inch, 1080x1920 px display, IPS LCD Android v4.4 (KitKat) Quad core 20.7 MP Primary Camera, 3.5 MP Secondary 3G, WiFi 64 GB Expandable 3 GB RAM 3200 mAh, Li-Ion battery

நோக்கியா லூமியா 1525

இதன் சிறப்பம்சங்கள்
6.0 Inch, 1440x2560 px display, IPS LCD Windows Phone v8 Quad core 3G, WiFi 32 GB Internal Memory 3 GB RAM 3400 mAh, Li-Ion battery

பிளாக்பெர்ரி ஜகார்தா

இதன் சிறப்பம்சங்கள் 5inch 540 x 960 pixels, 24-bit color LCD display 8 GB application storage and 1.5 GB RAM 1.2 GHz dual-core processor 2650 mAh non-removable battery 5MP rear-facing camera with Autofocus and flash, 5x digital zoom 1.1 MP front-facing camera with 3x digital zoom

எல்.ஜி G3

இதன் சிறப்பம்சங்கள் 5.2 inch + 1440x2560 pixels QHD display 2 GB of RAM 16 megapixels Camera Octa core 2200 MHz processor

நோக்கியா லூமியா 1820

இதன் சிறப்பம்சங்கள் 6.0 Inch, 1080x1920 px display, IPS LCD Windows v8.1 20 MP Primary Camera 5 MP Secondary WiFi, NFC 32 GB Internal Memory 64 GB Expandable 2 GB RAM


ZTE கிராண்ட் மெமோ

இதன் சிறப்பம்சங்கள் 6.0 inches full HD Screen 2.3GHz Processor 3GB of RAM Android 4.4









உலகின் மிகப்பெரும் மொபைல் ஷோ தொடங்கியது...!

இன்றைக்கு நமது கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம்.
அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம்.
உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.
இந்த புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டால் செய்தவுடன் முதல் முறையாக இயக்கப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காட்டுகிறது.


ஹார்ட் டிஸ்க் டிப்ஸ்...!

ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ தேர்ந்தெடுத்து, இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டது குறித்தும், காலியாக இருப்பது குறித்தும் அதனை ஆய்வு மேற்கொள்ளச் செய்திடலாம்.
ஆய்வு முடிந்தவுடன் எத்தகைய பைல்கள் உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்து அமர்ந்துள்ளன என்று வண்ணங்களைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்படும்.
இந்த இடத்திலிருந்தே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை நீக்கலாம். அவற்றின் இடம் குறித்து நிர்வகிக்கலாம்

ஹார்ட் டிஸ்க் டிப்ஸ்...!


  

கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Samsung Galaxy S5 தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இக்கைப்பேசியானது இதுவரை அறிமுகமான கைப்பேசிகள் கொண்டிராத புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.
அதாவது 2.5GHz Quad-Core Processor, 2GB RAM என்பனவற்றுடன் 16 மற்றும் 32GB சேமிப்பு நினைவகங்களைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளிவருகின்றது.
இவை தவிர 5.1 அங்குல அளவுடைய பெரிய திரை, 1920 x 1080 Pixel Resolution கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய வினைத்திறன் கூடிய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
Android 4.4.2 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 142.0 x 72.5 x 8.1mm அளவிடையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 145g நிறையை உடையதாக காணப்படுகின்றது.
அத்துடன் வெள்ளை, கறுப்பு, நீலம், தங்க நிறங்களில் இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com