3/15/2014

கடல் பட்டர்ஃப்ளை மிகவும் அழகாக இருக்கும், அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களில் இவை காணப்படும்.



இதன் இறக்கைகள் கண்ணாடி மாதிரி பளபளவென்று இருக்கும், இதன் நரம்புகள் பிங்க் கலரிலும், இறக்கைகள் ஆஷ் கலரிலும் கண்ணாடி போன்று இருப்பதால் இது கடலுக்குள் பறந்து செல்லும் போது இதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இவை கடல் நத்தைகள் குடும்பத்தை சேர்ந்தவை, தண்ணீருக்குள் மிகவும் அழகான, சீரான வேகத்தில் இவை பறக்கும்.

இந்த வகை பட்டர்ஃப்ளையில் உள்ள மற்றொரு வகைக்கு, ஓடுகள் உண்டு.

அழகாக ஜொலிக்கும் கடல் நத்தை குடும்பத்தை சேர்ந்த பட்டர்ஃப்ளை

             

அப்பிள் தயாரிப்புக்களான iPhone 5S மற்றும் 5C ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கு புதிய வயர்லெஸ் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Slimo எனும் இச்சாதனமானது மிகவும் சிறிய வடிவத்தினை உடையதாகக் காணப்படுவதோடு, விலையானது 43 பவுண்ட்களாகவும் காணப்படுகின்றது.
மேலும் இச்சாதனத்தை மேம்படுத்தும் திட்டமானது Kickstarter தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

              http://tech.lankasri.com/photos/full/2014/03/slimo_charger_001.jpg

ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்யும் வயர்லெஸ் சாதனம்

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்பட்ட புகைப்படங்களையும், சிறிய அளவிலான வீடியோக்களையும் பகிரும் தளமான Instagram பல மில்லின் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.



இத்தளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு Instagram Downloader எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1.3MB கோப்பு அளவுடைய இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களையும், ஸ்லைட் ஷோக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Instagram தளத்திலிருந்து புகைப்படங்களை தரவிறக்கம் செய்வதற்கு

ஹேம் விரும்பிகளை கட்டிப்போட்ட மிகவும் பிரபல்யமான ஹேமான Angry Birds இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட்டின் Windows Phone இயங்குதளத்திற்கான இப் புதிய பதிப்பில் 15 புதிய மட்டங்கள் (Levels) உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்புதிய மட்டங்களுடன் மொத்தமாக 45 மட்டங்களை கொண்ட இக்ஹேமினை Windows Phone store தளத்திலிருந்து தரவிற்ககம் செய்துகொள்ள முடியும்.
                       http://tech.lankasri.com/photos/full/2014/03/angry_birds_001.jpg





                                                              Download This File

Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வெளியீடு

க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது.


அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது.


நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் மற்றும் பிங் தேடல் தளங்களை, மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை நீங்கள் பிங் தளம் செல்லும்போதும், மைக்ரோசாப்ட் அதனைப் பதிவு செய்து கொள்கிறது.

ஒவ்வொரு முறை செல்வதற்கும் அதற்கான கிரெடிட்களைத் ("credits”) தருகிறது.

இவ்வாறு 100 கிரெடிட்கள் ஒருவரின் கணக்கில் சேர்ந்த பின்னர், அதனைப் பயன்படுத்தி அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளமான ஒன் ட்ரைவில், 100 ஜிபி இடம் ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கெனப் பரிசாகப் பெறலாம்.

இத்துடன், தங்கள் நண்பர்களை பிங் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பவர்களுக்கும் இந்த கிரெடிட் தரப்படும்.

இதே போல பிங் ரிவார்ட்ஸ் திட்டத்திற்கு நண்பர்களை அழைத்தாலும் கிரெடிட் உண்டு.

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் புதியதாக அக்கவுண்ட் தொடங்கும் அனைவருக்கும் 7 ஜிபி இலவச இடம் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒன்லைனில் 100GB இலவச சேமிப்பு இடம் வேண்டுமா?

3/14/2014

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.
இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.
இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


                                                   Download This File

                                     http://tech.lankasri.com/photos/full/2014/03/opera_android_001.jpg

அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு

              

பிரித்தானியாவைச் சேர்ந்த Blocks எனும் நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் மும்முரமாக களமிறங்கியுள்ளது.
இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுவரும் இக்கடிகாரம் GPS வசதியினையும் கொண்டுள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கடிகாரம் தொடர்பான வீடியோ ஒன்றினை Blocks நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விரைவில் உலகை கலக்க வரும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரம் ...

               http://tech.lankasri.com/photos/full/2014/03/iphone_5s_001.jpg
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட் கைப்பேசியான அப்பிளின் iPhone காணப்படுகின்றது.
இந்நிறுவனம் தற்போது iPhone 6 எனும் A8 Processor இனைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியை விரைவில் அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது.
இந்நிலையில் Foxconn குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்காக முன்பதிவு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இதனை ஆரம்பித்து சில நாட்களினுள் 90 மில்லியன் வரையானவர்கள் பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவில் சாதனை படைத்தது iPhone 6

BSNL நிறுவனத்துடன் இணைந்து சாம்பியன் கம்ப்யூட்டர்ஸ் புதிய டேப்ளட் சாதனத்தை வெளியிட்டுள்ளது.


6.5 அங்குலம் திரைய அகலம் கொண்ட இந்த டேப்ளத் பிசியில் ஒரு Dualcore Processor, 32GB வரை micro SD card மூலம் மெமரியை அதிகபடுத்தும்ம வசதி, 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா, முகம் பார்த்து பேசும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள பயன்படும் 2 மெகா பிக்சல் முன்புற கேமரா, 3500mAh பேட்டரி, வைபை, புளூடூத், எட்ஜ், ஜிபிஆர்ஸ், 3ஜி, மைக்ரோ USB ஆகிய வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

ரூபாய் 6,999 விலையில் BSNL Champion DM6513 Tablet அறிமுகம்

               
உடலின் குருதி அமுக்கம், ஒட்சிசன் போன்ற அளவுகளை கண்காணிப்பதற்கு iPhone கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Wello எனப்படும் விசேட சிப் மற்றும் சென்சார்களைக் கொண்ட இந்த iPhone வெளிக் கவரினை Azoi எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றின் மூலம் இதயத்துடிப்பு வீதம், சுவாச வீதம், உடல் வெப்பநிலை, குருதி அமுக்கம், குருதியில் ஒட்சிசனின் மட்டம் போன்றவற்றை நாள்தோறும் இலகுவாக கண்காணிக்க முடியும்.
iPhone 5 மற்றும் iPhone 5S இல் செயற்படக்கூடிய இந்த கவர் ஆனது புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் விலையானது 199 டொலர்கள் ஆகும்.

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினை விரைவில் வெளியிடவுள்ளது.



பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தில் WiFi Sense தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் 
வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


WiFi Sense தொழில்நுட்பம் பயன்படுத்தும் முறை தொடர்பில் வீடியோ ஒன்று மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

3/13/2014

           http://tech.lankasri.com/photos/full/2014/03/samsung_tab_001.jpg

Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குல அளவும், 2560 x 1600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.3Ghz வேகத்தில் செயற்படவல்ல Quad Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட்

                   
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக திகழும் ZTE விரைவில் புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
ZTE Grand S EXT எனும் இக்கைப்பேசியானது தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் முதன் முறையாக உலோகம், பிளாஸ்டிக்கினால் ஆன வெளியமைப்பைக் கொண்ட NMT (Nano Molding Technology) அறிமுகப்படுத்தப்படுகின்றது.

       

ZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

           

பூமியில் 126 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய வகை சின்னஞ்சிறு முதலை இனத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வைட் தீவிலேயே இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
         
இவற்றின் இருவேறு பாகங்கள் வெவ்வேறு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலையின் மண்டையோட்டின் பின் அரைப்பகுதி வைட் தீவில் சாள்ட்டவுன் எனும் இடத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் டியனி திரேவர்தன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதன்பின் மூன்று மாதங்கள் கழித்து, ஆஸ்ரின் மற்றும் பின்லி நாதன் என்பவர்களால் மண்டையோட்டின் மற்றொரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறுகையில், 126 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலை இனத்தின் எச்சமாக இருக்கலாம் என்றும், 2 அடி நீளம் மட்டுமே இருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.


126 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய முதலை இனம் கண்டுபிடிப்பு

கடல் பட்டர்ஃப்ளை மிகவும் அழகாக இருக்கும், அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களில் இவை காணப்படும்.
இதன் இறக்கைகள் கண்ணாடி மாதிரி பளபளவென்று இருக்கும், இதன் நரம்புகள் பிங்க் கலரிலும், இறக்கைகள் ஆஷ் கலரிலும் கண்ணாடி போன்று இருப்பதால் இது கடலுக்குள் பறந்து செல்லும் போது இதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
இவை கடல் நத்தைகள் குடும்பத்தை சேர்ந்தவை, தண்ணீருக்குள் மிகவும் அழகான, சீரான வேகத்தில் இவை பறக்கும்.
இந்த வகை பட்டர்ஃப்ளையில் உள்ள மற்றொரு வகைக்கு, ஓடுகள் உண்டு.

அழகாக ஜொலிக்கும் கடல் பட்டர்ஃப்ளை ...

3/08/2014

இன்றைக்கு மொபைல் உலகில் ஆண்ட்ராய்டின் வளர்ச்சியானது யாருமே சிறிதும் எதிர்பார்க்காத அளவுக்கு உள்ளது.
தற்போது ஆண்ட்ராய்டின் புதிய அப்டேட் எது என்று கேட்டால் அது கிட்கேட் தான் இது நாம் அறிந்ததுதாங்க.
சரி இப்ப கிட்கேட் ஓ.எஸ் உடன் வரப்போகும் மொபைல்களை பற்றி ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க இதோ அவை..

சாம்சங் கேலக்ஸி S5

5.1 Inch,
1080x1920 px display,
Super AMOLED 142x72.5x8.1 mm Dimensions
145 grams
Android v4.4.2 (KitKat)
Quad core 2500 MHz processor
16 MP Primary Camera,
2.1 MP Secondary
3G, WiFi, NFC
16 GB Internal Memory
128 GB Expandable Memory
2 GB RAM
2800 mAh, Li-Ion battery

சோனி எக்ஸ்பீரியா Z2

5.2 Inch,
1080x1920 px display,
IPS LCD 146.8x73.3x8.2 mm Dimensions
158 grams
Android v4.4.2 (KitKat)
Quad core 2300 MHz processor
20.7 MP Primary Camera,
2.2 MP Secondary
3G, WiFi, DLNA
16 GB Internal Memory
64 GB Expandable Memory
3 GB RAM
3000 mAh, Li-Ion battery

எல்.ஜி.ஜி2 மினி

4.7 Inch,
540x960 px display,
IPS LCD 129.6x66x9.8 mm Dimensions
Android v4.4.2 (KitKat)
Quad core 1200 MHz processor
8 MP Primary Camera,
1.3 MP Secondary
WiFi, DLNA
64 GB Expandable
1 GB RAM
2420 mAh, Li-Ion battery

நோக்கியா Xl

5.0 Inch,480x800 px display, IPS LCD 141.4x77.7x10.9 mm Dimensions 190 grams Android v4.4.2 (KitKat) Dual core 1000 MHz processor 5 MP Primary Camera, 2 MP Secondary 3G, WiFi 4 GB Internal Memory, 32 GB Expandable 768 MB RAM 2000 mAh, Li-Ion battery


நோக்கியா X ப்ளஸ்

4.0 Inch,
480x800 px display,
IPS LCD 115.5x63x10.4 mm Dimensions
128.7 grams
Android v4.4.2 (KitKat)
Dual core 1000 MHz processor
3 MP Primary Camera
3G, WiFi 4 GB Internal Memory
32 GB Expandable Memory
768 MB RAM
1500 mAh, Li-Ion battery

எல்.ஜி.ஜி ப்ரோ 2

5.9 Inch,
1080x1920 px display,
True HD IPS Plus LCD 157.9x81.9x8.3 mm Dimensions
172 grams
Android v4.4.2 (KitKat)
Quad core 2260 MHz processor
13 MP Primary Camera,
2.1 MP Secondary
3G, WiFi, DLNA, NFC
16 GB Internal Memory
64 GB Expandable Memory
3 GB RAM
3200 mAh, Li-Ion battery


HTC Desire 816

5.5 Inch,
720x1280 px display,
LCD 156.6 x 78.7 x 8 mm Dimensions
165 Grams
Android v4.4.2 (KitKat)
Quad core 1600 MHz processor
13 MP Primary Camera,
5 MP Secondary
3G, WiFi, DLNA
8 GB Internal Memory
64 GB Expandable
1.5 GB RAM
2600 mAh, Li-Polymer battery

எல்.ஜி. எல்70

4.5 Inch,
400x800 px display,
IPS LCD 127.2x66.8x9.5 mm Dimensions
Android v4.4.2 (KitKat)
Dual core
1200 MHz processor
5 MP Primary Camera,
0.3 MP Secondary
3G, WiFi
4 GB Internal Memory
32 GB Expandable Memory
1 GB RAM
2100 mAh, Li-Ion battery

ZTE Grand Memo II LTE

எல்.ஜி எல்40 டூயல்

3.5 Inch,
320x480 px display,
IPS LCD 109.4x59.0x11.9 mm Dimensions
Android v4.4 (KitKat)
Dual core
1200 MHz processor
3 MP Primary Camera
3G, WiFi
4 GB Internal Memory 32 GB Expandable Memory
512 MB RAM
1540 mAh, Li-Ion battery

6.0 Inch, 720x1280 px display, IPS LCD 161.5x83x7.2 mm Dimensions Android v4.4.2 (KitKat) Quad core 13 MP Primary Camera, 5 MP Secondary 3G, WiFi, DLNA 16 GB Internal Memory, 32 GB Expandable 2 GB RAM 3200 mAh, Li-Ion battery







ஆண்ட்ராய்டு கிட்கேட் உடன் வெளிவரும் மொபைல்கள் இவைதான்...!

http://www.viyapu.com/images/news/large/news_27196.jpg
அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் டேப்லட் என பல புரட்சிகளை செய்துவரும் அப்பிள் நிறுவனம் தற்போது சூரிய கலத்தில் இயங்கக்கூடிய மடிக்கணினிகளை உருவாக்கவுள்ளது. மடிக்கணினிகளின் மேற்பகுதியை சூரிய படலங்ளைக் கொண்டு வடிவமைத்து அதன் மூலம் மின்கலத்தில் மின்சக்தியை சேமிப்பதுடன் தொடுகை உணரிகளிலும் (Touch Sensors) மின்சக்தியை சேமிக்கக்கூடியவாறு வடிவமைக்கவுள்ளது. இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் டேப்லட், கைப்பேசி போன்ற ஏனைய சாதனங்களிலும் இத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்த முடியும் என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் அதிரடி சூரிய கலத்தில் இயங்கும் மடிக்கணினிகள் உருவாக்கம்!

கடந்த மாதம் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் எத்தனையோ மொபைல்கள் வெளியாகின அவைகள் இந்த மாதத்தில் இருந்து ஸ்டோர்ஸூக்கு வந்துவிடும் எனலாம்.
அந்தவகையில் இந்த மாதம் கடைகளில் கிடைக்க இருக்கும் அந்த மொபைல்களை பற்றி ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க.
இதோ அந்த பட்டியல்ங்க...

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் நியோ

5.0 Inch, 480x800 px display, TFT
Android v4.3 (Jelly Bean)
Quad core 1200 MHz processor
5 MP Primary Camera, 0.3 MP Secondary
3G, WiFi, DLNA
16 GB Internal Memory, 64 GB Expandable
1 GB RAM
2100 mAh, Li-Ion battery

சோனி எக்ஸ்பீரியா C

Android v4.2.2 (Jelly Bean)
5 Inch, 540x960 px display, TFT
Quad core 1200 MHz processor
8 MP Primary Camera, 0.30 MP Secondary
3G, WiFi
32 GB Expandable
1 GB RAM
2390 mAh, Li-Ion battery

எச்.டி.சி. டிஸைர் 500

4.3 Inch, 480x800 px display, TFT
Android v4.2.2 (Jelly Bean)
Quad core 1200 MHz processor
8 MP Primary Camera
3G, WiFi, DLNA, NFC
64 GB Expandable
1 GB RAM
1800 mAh, Li-Polymer battery


சோலோ LT900

4.3 Inch, 720x1196 px display, IPS LCD
Android v4.2.2 (Jelly Bean)
1500 MHz processor
8 MP Primary Camera, 0.3 MP Secondary
3G, WiFi
1 GB RAM
1810 mAh Lithium-ion Battery

மைக்ரோமேக்ஸ் டர்போ A250

Android v4.2.1 (Jelly Bean)
5 Inch, 1080x1920 px display, IPS LCD
Quad core 1500 MHz processor
13 MP Primary Camera, 5 MP Secondary
3G, WiFi
2 GB RAM
2000 mAh, Li-Ion battery

எல்.ஜி. ஜி.ப்ரோ

5.5 Inch, 540x960 px display, IPS LCD Android v4.1.2 (Jelly Bean) Dual core 1000 MHz processor 8 MP Primary Camera, 1.3 MP Secondary 3G, WiFi, DLNA 32 GB Expandable 1 GB RAM 3140 mAh, Li-Ion battery

கேலக்ஸி S4 மினி

4.30 Inch, 540x960 px display, Super AMOLED Android v4.2 (Jelly Bean) Dual core 1700 MHz processor 3G, WiFi, DLNA 5 Internal Memory, 64 GB Expandable 1.50 GB RAM 1900 mAh, Li-Ion battery

ஜியோனி E6

5 Inch, 1080x1920 px display, IPS LCD Android v4.2.2 (Jelly Bean) Quad core 1500 MHz processor 13 MP Primary Camera 5 MP Secondary Camera 3G, WiFi 2 GB RAM 2000 mAh, Li-Ion battery







இந்த மாதம் வெளிவர இருக்கும் அசத்தல் மொபைல்கள்..!

அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வள ரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள்நிறுவனம், அளப்பரிய முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும். எந்த அரசும் அதனை எதிர்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் AltaVista, Hotbot, or Lycos ஆகிய தளங்கள் கோலோச்சி இருந்தன.
ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும், கூகுள் முன் சுருண்டு விழுந்தன. இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட், தன் பிங் தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக ஊன்றியது.
பணம் தேடும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம்.
அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க முற்பட்டனர். கூகுள் மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன.
இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் எந்நேரமும் சிதறிக் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கியது.
உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல; இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான கூகுள் சர்ச், அடுத்ததாக ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவையே நம் கண்களின் முன்னே விரிகின்றன. ஆனால், கூகுள் தன் சேவை வர்த்தகத்தில் 160க்கும் மேற்பட்ட சேவைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இதன் குரோம் பிரவுசர் இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதாகும்.
கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே. இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன.
இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம். அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.
இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால்,வேறு பலரோ, கூகுள் தரும் ஆக்கபூர்வமான செயல்முறைகளை வரவேற்கின்றனர்.
குறிப்பாக, Google Scholar, Google Maps மற்றும் Google Earth, ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன.
ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே பதிந்து வைக்கிறது.
ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் பதிந்தே வைக்கின்றன. கூகுள் மட்டும் இதில் தனியொரு நிறுவனமாக இல்லை. எனவே, வேறு வழியின்றி இதனை அனுமதிக்கலாம் என்றே மக்கள் கருதுகின்றனர்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. ஆனால், அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்ததனால், லேப்டாப், டேப்ளட் எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்தன.
அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. எதிர்ப்பினால், லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்தன.
இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் (பழ நெடுங்காலமாக உள்ள நூல்கள் உட்பட) தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.
ஒரே ஒரு நிறுவனத்திடம், மனித இனம் கண்டறிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டு, அதிலிருந்து வரும் நல்லது மற்றும் அல்லாதது ஆகிய இரண்டையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது இந்த உலகை ஒரு திறந்த வெளியாக, யார் வேண்டுமானாலும், எந்த ஒரு வளத்தையும் அணுகிக் கொள்ள முடியும் என்ற நிலையில் வைக்கலாமா? இதற்குக் காலம் தான் பதில் சொல்ல முடியும்.

உலகின் அசைக்க முடியாத சக்தியாக மாறிய கூகுள்..!

இன்றைக்கு போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும்.
மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
ADVERTISEMENT
உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும்.
கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
மொபைல்களை பாத்து யூஸ் பண்ணுங்க....
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது.
நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.
பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.

மொபைல்களை பாத்து யூஸ் பண்ணுங்க....

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.



இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.

இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.

இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அன்ரோயிட் சாதனங்களுக்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera

 

இன்று அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், மிகப்பெரும் முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும்.
கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் ஆல்டா விஸ்டா(AltaVista), ஹாட்பாட்(Hotbot) ஆகிய தளங்கள் பெரிய அளவில் வளர்ந்து இருந்தன.

ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும் கீழே விழுந்துவிட்டனஎனலாம் இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட், தன் பிங் தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக நிறுவியது.
பணம் சம்பாதிக்கும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம்.

அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க முற்பட்டனர். கூகுள் மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன கோடிகோடியாய் சம்பாதித்தன.

இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கியது.

உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல; இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.
கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான கூகுள் சர்ச், அடுத்ததாக ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவையே நம் கண்களின் முன்னே விரிகின்றன.
 
இதன் குரோம் பிரவுசர் இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதுதான் இது நாமற்ந்ததே.
கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே. இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன.

இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம்.

அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.
இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால்,வேறு பலரோ, கூகுள் தரும் ஆக்கபூர்வமான செயல்முறைகளை வரவேற்கின்றனர்.
குறிப்பாக, Google Scholar, Google Maps மற்றும் Google Earth, ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன.ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே சேமித்து வைக்கிறது.


ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் தன்னிடம் சேமித்தே வைக்கின்றன.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லேப்டாப், டேப்ளட் எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்தன.

அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்தன.
இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.
இதுதாங்க இன்றைய கூகுளின் வளர்ந்த நிலை...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க...

இதபத்தி கூகுள் உங்ககிட்ட என்னைக்காவது சொல்லிருக்கா...?

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com