2/28/2014

பேஸ்புக் லுக்பேக் வீடியோ 100 கோடி பேர் பார்த்தனர்...!

கடந்த பிப்ரவரி 4ல் தன் 10 பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
ஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது.
ADVERTISEMENT
இந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் பதிவு செய்து மகிழ்ந்தனர். இது என் படம். உங்களுடையது இங்கு உள்ளது என அதற்கான லிங்க் தரப்பட்டது.
ஒவ்வொருவரும் பேஸ்புக்கில் லாக் இன் செய்த பின்னர் look back என்ற முகவரியில் உள்ள பக்கத்திற்குச் சென்றால், அவர்களுக்கான வீடியோ கிளிப் கிடைக்கும். பிப்ரவரி 4, பேஸ்புக் பிறந்த நாள் அன்று இவை வெளியிடப்பட்டன.
              பேஸ்புக் லுக்பேக் வீடியோ 100 கோடி பேர் பார்த்தனர்...!
இவை ஒரு மாதத்திற்கு இந்த தளத்தில் கிடைக்கும். இதனை எடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் டைம் லைன் பக்கத்தில் பதிந்து வைத்தால், தொடர்ந்து எப்போதும் இடம் பெறும்.
நூறு கோடி மக்களுக்கும் மேலானவர்கள் இந்த படத்தைப் பெற்றனர் என்பது டிஜிட்டல் வரலாற்றில் ஒரு புதிய தகவலாகும்.
பேஸ்புக் கூட சரியாக எத்தனை வீடியோக்கள் இதுபோல உருவாக்கப்பட்டன என்று கணக்கு சொல்ல இயலவில்லை. ஆனால், பல கோடிப் பேர் பெற்றனர் என்று உறுதியாகத் தெரியவந்துள்ளது.
இவற்றைப் பெறுவதில் மக்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்த பேஸ்புக், தொடர்ந்து இவற்றை எடிட் செய்வதற்கான டூலையும் வெளியிட்டது. தாங்கள் விரும்பும் படத்தினை இணைக்கவும், விரும்பாதவற்றை நீக்கவும் வசதி செய்யப்பட்டது. அல்லது, தாங்களே தயாரித்த படத்தினை பதிந்து கொள்ளவும் அனுமதி தரப்பட்டது.
தங்களுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்ட பேஸ்புக் தளத்தில் சேர்ந்தது முதல் நாம் என்ன செய்தோம் என்பதனை அறிந்து கொள்வது நம்மை நாமே ரெப்ரெஷ் செய்து கொள்வது போல் இருந்தது எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com