2/28/2014

உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பாவனையாளர்களுக்காக இலவச இன்டர்நெட் வசதி..!

உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்பு�
உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம்
ஒன்றை செயல்படுத்த இருப்பதாக நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுக்க உள்ள தனது பயனாளிகளுக்கு இலவச இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்திருப்பதாக Mark Zuckerberg நேற்று பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவைகள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம்.
இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com