2/28/2014

கூகுளில் தகவல்களை தேடுவதற்கு சிறந்த வழிகள்..!

கூகுளில் தகவல்களை தேடுவதற்குகூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு-ட்யூப், இ-பே போன்ற பிற தளங்களிலும் ஏதாவது ஒரு தகவலை தினமும் தேடிக் கொண்டிருப்போம்.
இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும்.
இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும்.
இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம்.
தேடல் முறைகளில் சில வேகமான வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.
குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட :
உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா? அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும்.
உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள்.
அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf எனத் தர வேண்டும்.
இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும்.
இதே போல் ps, doc, ppt, xls, rtf ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம்.
இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.
முடிவுகளை விலக்க :-
சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை.
அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம்.
எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள்.
அப்போது ஐ-பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad என அமைக்க வேண்டும்.
இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com என்றும் Apple -iPad -PDF எனவும் பயன்படுத்தலாம்.
உள்ளூர் தகவல் மட்டும் :-
சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai] என டைப் செய்து தேடவும்.
சீதோஷ்ண நிலை அறிய weather [madurai] என டைப் செய்திடலாம்.
அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com