12/30/2013

பிறரது கணினிகளில் நாம் உபயோகித்த தடயங்களை அழிக்க என்ன செய்வது???


       
சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது, அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர், நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள், நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி?



வழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால், கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதனை தரவிறக்கி CleanAfterMe.exe என்ற கோப்பை ரன் செய்தால் போதுமானது, நீக்க வேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து Clean Selected Items பட்டனை க்ளிக் செய்து உங்கள் தடயங்களை அந்த கணினியிலிருந்து நீக்கி விடலாம். இந்த மென்பொருள் கோப்புகளை அழிப்பதற்கு முன்பாக அவற்றில் Zero க்களை நிரப்பி விடுவதால் வேறு எந்த Undelete மென்பொருள் கருவியைக் கொண்டும் மறுபடி மீட்டெடுக்க இயலாது என்பது இதனுடைய சிறப்பம்சம்.

                                                       DOWNLOAD

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com