1/30/2014

இணையத்தில் பரிசுப் பொருட்களை அனுப்புவதற்கு மிகச்சிறந்த வழி

http://www.redeemedreader.com/wp-content/uploads/2013/11/gifts.jpg
இணையத்தளம் வழியாக நண்பர்களுக்கு பரிசுகளை அனுப்புவதற்கு ஒரு புதுவிதமான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது Toy Say Hello என்ற இணையம்.
புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை கிவிப்ஸ் என்ற இணையத்தளம் வழங்குகிறது.
இந்த சேவையை போல பரிசுப் பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளோடு குரல் பதிவை இணைத்து அனுப்பும் வசதியை வழங்குகிறது டு சே ஹலோ இணையதளம்.
உதாரணமாக கைப்பட எழுதப்பட்ட வாழ்த்தை பார்க்கும் போது அதில் அனுப்பியவரின் அன்பை காணலாம். அதே போல தான் கைபேசியில் வாழ்த்து சொல்வதை காட்டிலும் நேரிலேயே சென்று கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு வருவது.
இணையத்தை பொருத்தவரை பலவித அணுகூலங்கள் இருந்தாலும் இந்த தனிப்பட்ட டச்சை காண்பிப்பது கொஞ்சம் கடினம் தான்.
வாழ்த்து அட்டை, பரிசு பொருள் போன்றவற்றை இணையத்திலேயே தெரிவு செய்வது சுலபமானது தான். ஆனால் பரிசளிப்பவரின் தனிப்பட்ட அக்கறையை அவற்றில் பிரதிபலிக்க செய்வது எப்படி?
டு சே ஹலோ தளம் இந்த வசதியை தான் தருகிறது. வாழ்த்து அட்டைகள் மற்றும் இணைய பரிசு பொருட்களுடன் குரல் மூலம் வாழ்த்து செய்தியை பதிவு செய்து இணைத்து அனுப்ப இந்த தளம் உதவுகிறது.
இந்த தளத்தில் உள்ள பரிசு பொருட்களை தெரிவு செய்து விட்டு அதனுடன் வாழ்த்தாக சில வார்த்தைகள் பேசி, அதன் ஒலி பதிவை இணைத்து அனுப்பலாம். பரிசை பெறுபவர்களுக்கு நீங்களே பேசி வாழ்த்து சொல்லி பரிசளித்தது போல நெகிழ்ச்சியாக இருக்கும்.
இணையத்தள முகவரி

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com