12/28/2013

Gmail -ல் தமிழ் டைப் செய்வது எப்படி?

http://www.viyapu.com/images/news/large/google-translit1-300x235.png
இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் ஜிமெயில் தான். கூகிள் வழங்கும் இச்சேவையான உலக மக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்துகின்றனர்.
காரணம் ஜிமெயில் வழங்கும் எளிமையான, பயனர் இடைமுகம் மற்றும், எளிமையான தோற்றும், பயன்படுத்துவதில் எந்த சிரமும் இன்றி எளிமையாக இருப்பது, கூடுதல் மின்னஞ்சல்களை சேமிக்கும் வசதி, ஒவ்வொரு மின்னஞ்சலையும் வகைப்படுத்தும் வசதி, தேவையில்லாத மின்னஞ்சல்கள் நம்மை அடையாமல் தடுக்கும் வசதி இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஜிமெயில் சேவையில் மின்னஞ்சல் அனுப்ப தமிழ் மொழி உட்பட அந்தந்த பிராந்திய மொழிகளையும், அந்தந்த நாட்டு மொழிகளையும் பயன்படுத்த முடியும்.
இம்மொழிகளைப் பயன்படுத்த, அந்தந்த மொழிகளின் தட்டச்சு முறைகளை (Typing Methods) கற்றுத் தேர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. Google Tranlitration என்ற முறையை பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களை அந்த மொழிகளில் உள்ள வார்த்தைகளுக்கேற்ப தட்டச்சிடும்பொழுது, அந்த மொழியை அப்படியே Tranlitration செய்து கொடுக்கிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி தமிழில் எழுத முடியும்.

உதாரணமாக Amma= அம்மா என நமக்கு கிடைக்கும்.
இவ்வாறு தமிழ்த் தட்டச்சு தெரியாதவர்கள் கூட எளிமையாக தமிழில் தட்டச்சிட்டு மின்னஞ்சல் அனுப்ப முடியும்.
இந்த வசதியை ஜிமெயில் பெற Settings செல்லுங்கள்.
அதில் உள்ள Enable Transliteration என்பதில் தமிழைத் தேர்வு செய்துவிடுங்கள்.
பிறகு அதை மூடிவிட்டு, கீழிருக்கும் Save Changes எனும் பொத்தானை அழுத்தி செய்த மாற்றத்தை உறுதிப்படுத்திக்கொண்டு செட்டிங்ஸ்லிருந்து வெளியேறிவிடுங்கள்.
இனி நீங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் தட்டச்சிடும்பொழுது, ஆங்கில எழுத்துக்களைக்கொண்டு, தமிழில் மொழியை தட்டச்சிட்டு, தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்ப முடியும்

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com