12/31/2013

மொபைல் டிப்ஸ்

mobiles* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.
* ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.
* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள்.
* செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களை தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com