12/31/2013

இறப்புக்குப் பின் தகவல்களை அழிக்கும் கூகுளின் புதிய வசதி!

logo-googleஒருவரது இறப்புக்குப் பின் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை அழித்திடும் ‘புதிய’ வசதியை ஜி-மெயில், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட சேவைகளில் ஏற்படுத்தி, இணையத் தொழில்நுட்ப உலகில் பரபரக்க வைத்திருக்கிறது கூகுள்.
ஒரு கணக்கைச் செயலிழக்க வைப்பதற்கான தேதி குறிக்கும் உணர்வுப்பூர்வமான விஷயத்தை கூகுள் நிறுவனம் செயல்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு வசதியை ஏற்படுத்திய முதல் முன்னணி நிறுவனம் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறது கூகுள் நிறுவனம்.
தன் வாழ்நாளுக்குப் பிறகு, தன்னுடைய மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும் என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. அந்த டேட்டாக்களை அழித்துவிடுவதற்கான வசதியைத்தான் கூகுள் இப்போது செய்திருக்கிறது.
இதற்கு இரண்டு விதமான வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. ஒரு பயனாளி தனது அக்கவுண்டை முழுமையாக டெலிட் செய்யும் தேதியை தேர்ந்தெடுத்துக்கொள்வது என்பது முதல் வாய்ப்பு. அல்லது, தனக்கு நம்பகமான ஒரு நபரை முன்கூட்டியே பரிந்துரைத்து, தன் மறைவுக்குப் பிறகு அந்த நபரால் தனது அக்கவுண்டை டெலிட் செய்துவிடுவது இரண்டாவது வாய்ப்பு.
ஒரு பயனாளியின் டேட்டாக்கள் எப்போதும் ரகசியமாகப் பாதுகாப்பதற்கு, இந்தப் புதிய வசதி வழிவகுக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரைத் தயக்கம் காட்டி வந்த ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்களும், கூகுளின் இந்தப் புதிய வசதிக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, தனது முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுளின் ‘தேதி குறித்தல்’ தொடர்பான வசதி பற்றி முழுமையாக அறிய – http://googlepublicpolicy.blogspot.co.uk/2013/04/plan-your-digital-afterlife-with.html

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com