12/28/2013

30 மணிநேரம் கம்ப்யூட்டரில் தொடர்ச்சியாக வேலை செய்த இளம்பெண் அதிர்ச்சி மரணம்.


  



30 மணிநேரம் கம்ப்யூட்டரில�
தொடர்ச்சியாக 30 மணிநேரங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்த இந்தோனேஷிய இளம்பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Mita Duran என்ற 24 வயது இளம்பெண், இந்தோனேஷியாவில் உள்ள ஒரு விளம்பர நிறுவனமான Young & Rubicam என்ற நிறுவனத்தி காப்பிரைட்டராக பணிபுரிந்து வந்தார். மூன்று ஷிப்டுகள் தொடர்ச்சியாக அந்த அலுவலகத்தில் பணிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்,. இந்த அலுவலகத்தில் Mita Duran தொடர்ச்சியாக 30 மணிநேரங்கள் வேலை செய்வதாகவும், தன்னை தன்னுடைய மேலதிகாரி கொடுத்த வேலையை முடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு போக வேண்டும் என்று கட்டளையிட்டதால் தான் இவ்வாறு வேலை செய்வதாக இறப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பணிகளுக்கிடையே இவர் சரியாக உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. குளிர்பானங்களை மட்டுமே அருந்தியுள்ளார். தனக்கு சாப்பிட யாராவது உணவு கொண்டு வாருங்கள் என்று இவர் கேட்டுக்கொண்டபோதும் இவருக்கு யாரும் உணவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. உணவு இன்றி ஓய்வும் இன்றி தொடர்ச்சியாக பணிபுரிந்த இவர் மறுநாள் தனது கேபினில் மரணம் அடைந்திருப்பதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தோனேஷிய போலீஸார் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். Mita Duran இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தெரியும் என்றும், அந்த அறிக்கைக்கு பின்னர் அவர் பணிபுரிந்த அலுவலக நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றும், காவல்துறையினர் தெரிவித்தனர்

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com