11/30/2013

தமிழ் இலக்கியங்களை டிஜிட்டல் மயமாக்கும் சிங்கப்பூர்

(கோப்புப் படம்)சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம் வரும் 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. அதற்குள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ இதழில் செய்தி வெளியாகி யுள்ளது. கடந்த 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட மற்றும் சிங்கப்பூர் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான பாடல்கள், கவிதை களும் டிஜிட்டல் மயமாக்கப்படு கின்றன.
இது தொடர்பாக திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் மகிழ்நன் கூறுகையில், “தமிழ் டிஜிட்டல் புராதனக் குழு, தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்கிறது. சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தப் படைப்புகளை எளிதில் கையாள முடியும். 1800 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழப் புத்தகங்கள் பதிப்பித்து வெளியிடப்படுகின்றன” என்றார்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com