10/30/2013

இதுதான் வைரஸ் வந்ததுக்கான அறிகுறிகள்...!

        http://tips21.com/images/pc%20virus.jpg
நாம் எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் நமது கம்பியூட்டரில் வைரஸ் வருவது என்பது தடுக்க முடியாத ஒன்று ஆகும். நாம் மற்றவர்களின் பென்டிரைவ் பயன்படுத்தும் போது தான் இந்த வைரஸ் பிரச்சனை முதலில் ஆரம்பமாகிறது எனலாம். மேலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விஷியங்களை தெரிந்து கொள்கிறோம் அப்படி இன்டர்நெட்டில் நாம் உலவும் போது கூட நம் கம்பியூட்டரில் வைரஸ் வர அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும், அவசரத்தில் நாம் பென்டிரைவை ஸ்கேன் செய்யமால் போட்டு விடுவோம். அதன் பிறகு தான் நமக்கே தெரியும் அதில் வைரஸ் இருந்தது என்று அதன் பிறகு மொத்த கம்பியூட்டரையே நாம் ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை வரும். மேலும் ஒரு சில வைரஸ்கள் நீங்கள் இணையத்தில் இருந்து ஏதாவது டவுன்லோட் செய்யும் போது வந்துவிடும் இது தவிர்க்க முடியாத ஒன்று தான், உங்களது கம்பியூட்டரில் வைரஸ் வந்து விட்டது என்றால் கீழ்காணும் செயல்கள் உங்கள் கம்பியூட்டரில் நடைபெறும். இந்த வைரஸ்கள் வந்ததை உங்களது ஆன்ட்டி வைரஸால் கூட கண்டுபிடிக்கமுடியாததாக இருக்கலாம்....
 
முதலில் உங்கள் கம்ப்யூட்டர் ஹாங் ஆகும் இதுதான் வைரஸ் உங்களது கம்பியூட்டருக்கு வந்துவிட்டது என்பதற்கு முதல் அறிகுறியாகும்..
ஒரே ப்ரொகிராம் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருக்கும்..
உங்களது அனைத்து முக்கிய பைல்களுக்கு உள்ளே எக்ஸ்டராவாக ஒரு பைல் இருக்கும்...
உங்கள் பைல்கள் ஒவ்வொன்றாக டேலிட் ஆக ஆரம்பிக்கும்.
இப்படி வந்தால் உடனே நாம் கம்பியூட்டரை ஸ்கேன் செய்வது தான் நலம்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com