Showing posts with label தந்திரங்கள். Show all posts
Showing posts with label தந்திரங்கள். Show all posts

3/15/2014

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்பட்ட புகைப்படங்களையும், சிறிய அளவிலான வீடியோக்களையும் பகிரும் தளமான Instagram பல மில்லின் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.



இத்தளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு Instagram Downloader எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1.3MB கோப்பு அளவுடைய இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களையும், ஸ்லைட் ஷோக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Instagram தளத்திலிருந்து புகைப்படங்களை தரவிறக்கம் செய்வதற்கு

க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது.


அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது.


நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் மற்றும் பிங் தேடல் தளங்களை, மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை நீங்கள் பிங் தளம் செல்லும்போதும், மைக்ரோசாப்ட் அதனைப் பதிவு செய்து கொள்கிறது.

ஒவ்வொரு முறை செல்வதற்கும் அதற்கான கிரெடிட்களைத் ("credits”) தருகிறது.

இவ்வாறு 100 கிரெடிட்கள் ஒருவரின் கணக்கில் சேர்ந்த பின்னர், அதனைப் பயன்படுத்தி அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளமான ஒன் ட்ரைவில், 100 ஜிபி இடம் ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கெனப் பரிசாகப் பெறலாம்.

இத்துடன், தங்கள் நண்பர்களை பிங் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பவர்களுக்கும் இந்த கிரெடிட் தரப்படும்.

இதே போல பிங் ரிவார்ட்ஸ் திட்டத்திற்கு நண்பர்களை அழைத்தாலும் கிரெடிட் உண்டு.

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் புதியதாக அக்கவுண்ட் தொடங்கும் அனைவருக்கும் 7 ஜிபி இலவச இடம் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒன்லைனில் 100GB இலவச சேமிப்பு இடம் வேண்டுமா?

3/08/2014

இன்றைக்கு போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும்.
மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
ADVERTISEMENT
உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும்.
கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
மொபைல்களை பாத்து யூஸ் பண்ணுங்க....
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது.
நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.
பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.

மொபைல்களை பாத்து யூஸ் பண்ணுங்க....

 

இன்று அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், மிகப்பெரும் முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும்.
கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் ஆல்டா விஸ்டா(AltaVista), ஹாட்பாட்(Hotbot) ஆகிய தளங்கள் பெரிய அளவில் வளர்ந்து இருந்தன.

ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும் கீழே விழுந்துவிட்டனஎனலாம் இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட், தன் பிங் தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக நிறுவியது.
பணம் சம்பாதிக்கும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம்.

அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க முற்பட்டனர். கூகுள் மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன கோடிகோடியாய் சம்பாதித்தன.

இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கியது.

உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல; இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.
கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான கூகுள் சர்ச், அடுத்ததாக ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவையே நம் கண்களின் முன்னே விரிகின்றன.
 
இதன் குரோம் பிரவுசர் இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதுதான் இது நாமற்ந்ததே.
கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே. இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன.

இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம்.

அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.
இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால்,வேறு பலரோ, கூகுள் தரும் ஆக்கபூர்வமான செயல்முறைகளை வரவேற்கின்றனர்.
குறிப்பாக, Google Scholar, Google Maps மற்றும் Google Earth, ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன.ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே சேமித்து வைக்கிறது.


ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் தன்னிடம் சேமித்தே வைக்கின்றன.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லேப்டாப், டேப்ளட் எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்தன.

அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்தன.
இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.
இதுதாங்க இன்றைய கூகுளின் வளர்ந்த நிலை...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க...

இதபத்தி கூகுள் உங்ககிட்ட என்னைக்காவது சொல்லிருக்கா...?

3/07/2014

மின்னஞ்சல் மூலமாக பல்வேறு கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட கொள்ளளவு உடைய கோப்புக்களையே பகிர முடியும்.


எனினும் பெரிய அளவிலான கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு சில ஒன்லைன் இணையத்தள வசதிகள் காணப்படுகின்றன.

அவ்வாறே அப்பிளின் iOS இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனத்திலிருந்து 10GB வரையிலான கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறுஞ்செய்திகளுடன் இணைத்தும் பெரிய கோப்புக்களை பகிரும் இந்த வசதியில் Plus எனும் மற்றுமொரு கணக்கு காணப்படுகின்றது.

இதில் 50GB வரையான கோப்புக்களை பகிர முடிவதுடன் மாதம் ஒன்றிற்கு 10 டொலர்களும், வருடத்திற்கு 120 டொலர்களும் செலுத்தி இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் IPhone இல் மிகப்பெரிய கோப்புக்களை பகிர iOS மென்பொருள்!

நாம் பயன்படுத்தும் யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் ப்ளக் அன்ட் ப்ளே வகையைச் சேர்ந்த சாதனங்கள்.


நாம் பயன்படுத்தும் யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் ப்ளக் அன்ட் ப்ளே வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.

ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.

பெரும்பாலும், இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை, அவற்றை மீண்டும் பார்மட் செய்வதன் மூலம், தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழியை மேற்கொண்டால், உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும்.

இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும். இதற்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.

யு.எஸ்.பி. ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் "Device Manager" என டைப் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் "Hardware and Sound," என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு கிடைக்கும் "Device Manager" என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய "Universal Serial Bus" என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் "Uninstall" என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.

இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக, மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, "Scan For Hardware Changes." என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை, ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல் படுத்திப் பார்க்கவும்.

Pendrive கரெப்ட் ஆகிடுச்சா கவலை விடுங்க...!

நாம் பயன்படுத்தும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.
மேலும், டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+ கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும்.
இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
விண்டோஸில் சில டிப்ஸ்கள்..!
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
இன்டர்நெட் தளங்களில் உலா வருகை யில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம்.
அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள்.
நேரடியாக இன்டர் நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும்.
மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.

விண்டோஸில் சில டிப்ஸ்கள்..!

3/04/2014


              

அண்மையில் vBulletin-Softonic வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி கணனிக்கான மிகச்சிறந்த Anti-Virus Guard மென்பொருள்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
இவைகள் பிரதானமாக பின்வரும் அம்சங்களை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த Anti-Virus Guard மென்பொருள் எது என தீர்மானிக்கப்பட்டது.
  • தீங்கு விளைவிக்கும் நச்சு நிரல்களை கண்டறியும் திறன்.
  • நிறுவப்பட்டு இயங்கும் போது கணனியின் செயல்திறன்.
  • பயனர்களுக்கு ஏற்ற இடைமுகம்.

இவ்வாறு AVAST! AVIRA, PANDA CLOUD, MICROSOFT, AVG, BAIDU, QIHOO, BITDEFENDER போன்ற இலவச Anti-Virus Guard மென்பொருள்கள் உட்பட KASPERSKY, BULLGAURD, ESET, F-SECURE, G DATA மற்றும் NORTON போன்ற கட்டண மென்பொருள்களும் சோதிக்கப்பட்டது.

இதன் படி 8.69 எனும் அதிகூடிய புள்ளியை பெற்று NORTON Anti-Virus Guard முதலிடத்திலும் 8.47 புள்ளிகளை பெற்ற ESET Anti-Virus Guard இரண்டாவதாகவும் 8.39 புள்ளிகளை பெற்ற Kaspersky Anti-Virus Guard மூன்றாவது இடத்துக்கும் தெரிவு செய்யப்பட்டது.


மேலும் 8.30 புள்ளிகளுடன் AVG Free Anti-Virus Guard நான்காவது இடத்திலும் உள்ளது.


அத்துடன் விசேட திறன்கள் அடிப்படையில் பின்வரும் மென்பொருள்கள் தெரிவு செய்யப் பட்டன.
  • ஆண்டுக்கான மிக வலிமையான Anti-Virus Guard மென்பொருள் - G DATA
  • ஆண்டுக்கான புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதும் சிறந்த பெறுபேறுகளை தரக்கூடியதுமான (promising) Anti-Virus Guard மென்பொருள் - BAIDU
  • வேகமான Anti-Virus Guard மென்பொருள் - ESET
  • அதிக வசதிகளைக் கொண்ட இலவச Anti-Virus Guard மென்பொருள் - AVAST!
  • ஆண்டுக்கான ஏமாற்றத்தை அளித்த Anti-Virus Guard மென்பொருள் - MICROSOFT (MSE)

கணனிக்கான மிகச்சிறந்த Anti-Virus Guard மென்பொருள்கள் ...

3/03/2014

            

கணணி என்கின்ற தகவல் தொழில்நுட்ப சாதனையும் இணையம் என்கின்ற அதன் பாய்ச்சலும் இணைந்து உலகை உள்ளங்கைக்குள் சுருக்கி அறிவையும் தகவல்களையும் அனைவருக்கும் பொதுவாக்கி வரும் அற்புதத்தை நாம் நாளாந்தம் அனுபவித்து வருகின்றோம் என்றால் மிகையாகாது.
இதன் விளைவாக இன்று நாம் எமது ஏராளமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இணையத்தையே நம்பி நிற்கின்றோம். இன்று இணைய வங்கி முறை அனைவராலும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பொருட்களை கொள்வனவு செய்ய உறவினர் நண்பர்களுடன் தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள என இன்றைய தொழில்நுட்பம் பரந்து விரிந்து கிடக்கின்றமை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.


வலிமையான கடவுச்சொல்
எனவே இவற்றுக்கெல்லாம் திறவுகோலாக அமைவது நமது கடவுச்சொற்களே ஆகும்.
இந்த கடவுச்சொல்லானது ஒருவேளை இன்றைய நவீன திருடர்கள் என வர்ணிக்கப்படும் துருவிகளின் (Hackers) கையில் கிடைத்துவிட்டால் அந்தோ பரிதாபம்! நமது கதி அதோ கதிதான்.
இதனால் நாம் எமது கடவுச்சொல்லை பாதுகாப்பானதாக அமைத்திடுவது முக்கியத்துவம் பெறுகிறது

● பாதுகாப்பான கடவுச்சொல் என்றால் என்ன?


உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்தி கொள்ளக்கூடியதும் ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான கடவுச்சொல் பாதுகாப்பான கடவுச்சொல் எனலாம்.

● பாதுகாப்பான கடவுச்சொற்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது?


நீங்கள் உங்களுக்கென சிறியதொரு விதி ஒன்றினை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எத்தனை கடவுச்சொற்களையும் இலகுவில் ஞாபகப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைத்திடலாம்.

● என்ன அந்த விதி?


முதலில் நாம் அடிப்படை கடவுச்சொல் ஒன்றினை தெரிவு செய்து அதனுடன் குறிப்பிட்ட தளத்தின் பெயரையும் சேர்த்துக் கொள்வதாகும். உதாரணமாக Facebook தளத்துக்கு நாம் கடவுச்சொல்லை அமைக்கையில் எமது அடிப்படை கடவுச்சொல் XYZ என வைத்துக்கொண்டால் XYZFACEBOOK என அமைக்கலாம்.

இதனை இன்னும் வலுவானதாக அமைக்க அடிப்படை கடவுச்சொல்லான XYZ உடன் உங்களை கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து அதனை மாற்றிவிடலாம். உதாரணத்திற்கு XYZ12FACEBOOK என அமைத்துக் கொள்ளலாம். இதனை மேலும் வலுப்படுத்த அடிப்படை கடவுச்சொல்லுடன் நீங்கள் கடவுச்சொல்லை தெரிவு செய்யும் தளத்தின் முதல் ஆங்கில எழுத்தை Capital இலும் ஏனையவற்றை Simple Letters இலும் இடலாம். உதாரணத்திற்கு XYZ12Facebook என அமையும்.

● சரி இந்த அடிப்படை கடவுச்சொல்லை எவ்வாறு தெரிவு செய்வது?


ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள் அடிப்படை கடவுச்சொல்லாக தெரிவு செய்யலாம். உதாரணமாக Why This Kola Veri எனும் பாடல் எழுத்தின் முதல் எழுத்துக்களை கடவுச்சொல்லாக தெரிவு செய்தால் உங்கள் அடிப்படை கடவுச்சொல் WTKV என அமையும். கடவுச்சொல் நினைவிலிருக்க நீங்கள் பாட்டை பாடினாலே போதும்.

அல்லது ஏற்கனவே காணப்படும் Keyboard இன் Key களின் அமைவிடத்தின் நிலைகளை ஞாபகப்படுத்தலாம். உதாரணமாக DFGH, VBNM போன்றன.

● குறிப்பு: உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களை கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.

● அவதானம்: எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு கடவுச்சொல்லை நீங்கள் பயன்படுத்துவீர்களானால் உங்கள் கடவுச்சொல்லை யாரும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகள் தொடர்பிலும் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும். ஒரு கடவுச்சொல்லையே எல்லாவற்றிற்கும் பாவித்தால் அதிகளவான பிரச்சினைகளை அது உண்டுபண்ணி தரும். என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

SplashData இன் அறிக்கையின் படி 2013 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான கடவுச் சொற்களாக பின்வரும் கடவுச் சொற்கள் பட்டியல் படுத்தப் பட்டுள்ளது.

    1. 123456
    2. password
    3. 12345678
    4. qwerty
    5. abc123
    6. 123456789
    7. 111111
    8. 1234567
    9. iloveyou
    10. adobe123
    11. 123123
    12. Admin
    13. 1234567890
    14. letmein
    15. photoshop
    16. 1234
    17. monkey
    18. shadow
    19. sunshine
    20. 12345
    21. password1
    22. princess
    23. azerty
    24. trustno1
    25. 000000

மிகவும் வலிமையான கடவுச் சொற்களை அமைத்துக் கொள்வது எவ்வாறு?

ஜி மெயிலில் இருக்கும் ஷார்ட் கட்ஸ்...!
இன்று அனைவராலும் பயன்படுத்தும் மெயில் எது என்றால் அது நிச்சயம் ஜி மெயில் தான். நாம் மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். 
 c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம். 
 Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்
/<(Search): உங்களுடைய கர்சரை சர்ச் பாக்ஸில் கொண்டு சென்று வைத்திடும். ஜி மெயிலில் இருக்கும் ஷார்ட் கட்ஸ்...! 
k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும். 
 j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு - இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும். 
 n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். 
 p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும். 
 o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும்.
 u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். 
 e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும். 
s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது. 
 !:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது.
 r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்.
 a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும் ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய விண்டோவில் உருவாக்கப்படும். 
 f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத்தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும்.

ஜி மெயிலில் இருக்கும் ஷார்ட் கட்ஸ்...!

3/02/2014

http://tamil.gizbot.com/img/300x99/img/2014/03/01-vbnm.jpg
இன்றைக்கு மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. கார்ட்களே. மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம். மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது. ADVERTISEMENT அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம். இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம். பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வியை முதலில் காணலாம். இந்த கார்டுகளில் உள்ள டேட்டாவினைக் காந்தக் கதிர்கள் அழிக்குமா? அல்லது சிதைக்குமா? என்பதுதான். காந்தக் கதிர்கள் எளிதில் அழிக்கும் அளவிற்கு ப்ளாஷ் மெமரி கார்டுகள் செயல்படுவதில்லை. காந்தக் கதிர்கள் டேட்டாவினை அழிக்கும். ஆனால், அதனைச் சாதாரணமாக நாம் வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தும் காந்தங்கள் அழிப்பதில்லை. மிக மிக சக்தி வாய்ந்த காந்தத் தகடுகளால் மட்டுமே, இந்தக் கார்டுகளில் உள்ள டேட்டாவினைச் சிதைக்க முடியும். எனவே, காந்தம் அருகே கொண்டுபோனதால், நம் எஸ்.டி. கார்ட் கெட்டுப் போய்விட்டது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம். இருப்பினும், பல்வேறு காரணங்களினால், நம்மால் சில வேளைகளில் எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். கீழே இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவோர் சந்திக்கும் ஆறு வகையான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது

மெமரி கார்டு பார்மேட் ஆகலையா...!

3/01/2014

இன்றைக்கு உலக அளவில் 36 சதவிகிதம் பேர் மிகவும் வலிமை குறைந்த பால்வேர்டுகளை தான் பயன்படுத்துகின்றனர்.



அதில் பலபேர் 123456 மற்றும் qwerty ஆகியவற்றை தான் தங்களது பாஸ்வேர்டுகளாக பயன்படுத்துகின்றனர் இன்னும் சிலர் பாஸ்வேர்டாக "password" என்பதையே பயன்படுத்துகின்றனர்.

இவைகள் ஹேக்கர்களால் மிக மிக எளிதாக கண்டுபிடிக்கப்படும் பாஸ்வேர்டுகளாகும். இதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள்.

மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம். தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.

இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.

பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.

பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம் ramesh என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை ra_me12sh என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.

பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.
32463245

நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டு வலிமையானதா...?

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி.


முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம்.

இருப்பினும், இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன. இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு காட்டப்படுகின்றன.

விண்டோஸ் கீயுடனான சில ஷார்ட் கட்கீ செயல்பாட்டினை பார்க்கலாம்.

விண்டோஸ் கீயுடன்

+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும், இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் டெஸ்க் டாப்பிற்கு மாறி மாறி கொண்டு செல்லும்.

+ I: செட்டிங்ஸ் பேனல் (Settings Panel) திறக்கப்படும். இந்த ஷார்ட் கட் கீ , Control Panel, Personalization menu, Power menu (sleep, shut down, or restart) எனப் பல வசதிகளை உங்களுக்கு அளிக்கும்.

+ X: அட்வான்ஸ்டு விண்டோஸ் செட்டிங்ஸ் (Advanced Windows Settings) மெனு திறக்கப்படும். System, Device Manager, Command Prompt, மற்றும் பல வசதிகளை இதன் மூலம் பெறலாம்.

+ F: பைல்களைத் தேடும் வசதி கிடைக்கும். இந்த வசதி, குறிப்பாக பைல்களைத் தேடிப் பெறத் தரப்படுகிறது.

+ Period (“.”): அப்ளிகேஷன்களை ஒதுக்குகிறது. திரையின் வலது பக்கத்திற்கு அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். இதனால், மீதம் உள்ள விண்டோவின் இடத்தில், பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். Windows Key + Shift + Period அழுத்தினால், அப்ளிகேஷன் இடது புறம் ஒதுக்கப்படும்.

+ E: கம்ப்யூட்டர் திறக்கப்படும். உங்கள் பைல்களையும், அடிக்கடி நீங்கள் திறந்து பயன்படுத்தும் போல்டர்களையும் இதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.

+ L: ஸ்கிரீன் லாக் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பணியிலிருந்து நீங்கள் உடனே விலகிச் செல்ல எண்ணினால், இந்த ஷார்ட் கட் கீ, ஸ்கிரீனில் உங்கள் செயல்பாடு லாக் செய்யப்படும். இதே கீயினை, பயனாளர் மாற்றிச் (switch users) செயல்படவும் பயன்படுத்தலாம்.

+ left arrow (and right arrow): அப்போதைய விண்டோவினை மூடும் அல்லது மாற்றும். இடது அம்புக் குறியுடன் செயல் படுத்தினால், அப்போதைய விண்டோ, திரையின் இடது புறமாக பெரிதாக்கப்படும். வலது அம்புக் குறி, வலது புறமாக இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும்.

+ 0 - 9: டாஸ்க் பாரில் உள்ள அப்ளிகேஷன் களையும் புரோகிராமினையும் இயக்கத் திற்குக் கொண்டு வரும். டாஸ்க் பாரில் ஏற்கனவே பின் அப் செய்யப்பட்ட புரோ கிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.இந்த எண், அவற்றின் வரிசை எண்ணைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 3 என்ற கீயுடன் செயல்படுத்தினால், மூன்றாவதாக உள்ள அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.

+ PrintScreen: ஸ்கிரீன் ஷாட் எடுக்க இதனைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எடுக்கப்படும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை, நீங்கள் தனியே பெயிண்ட் போன்ற ஒரு இமேஜ் புரோகிராமில் ஒட்டிப் பயன்படுத்த வேண்டியதில்லை. தானாகவே, அது Pictures என்னும் போல்டரில் சேவ் செய்யப்படும்.

Windows 8 ஷார்ட் கட் கீ தொகுப்புக்கள்

2/28/2014

கூகுளில் தகவல்களை தேடுவதற்குகூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு-ட்யூப், இ-பே போன்ற பிற தளங்களிலும் ஏதாவது ஒரு தகவலை தினமும் தேடிக் கொண்டிருப்போம்.
இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும்.
இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும்.
இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம்.
தேடல் முறைகளில் சில வேகமான வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.
குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட :
உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா? அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும்.
உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள்.
அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf எனத் தர வேண்டும்.
இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும்.
இதே போல் ps, doc, ppt, xls, rtf ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம்.
இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.
முடிவுகளை விலக்க :-
சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை.
அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம்.
எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள்.
அப்போது ஐ-பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad என அமைக்க வேண்டும்.
இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com என்றும் Apple -iPad -PDF எனவும் பயன்படுத்தலாம்.
உள்ளூர் தகவல் மட்டும் :-
சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai] என டைப் செய்து தேடவும்.
சீதோஷ்ண நிலை அறிய weather [madurai] என டைப் செய்திடலாம்.
அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம்.

கூகுளில் தகவல்களை தேடுவதற்கு சிறந்த வழிகள்..!

யூடியூப் வீடியோக்களை GIF
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றுவதற்கு Gifff.fr (http://gifff.fr/) எனும் தளம் உதவி புரிகின்றது.
இத்தளத்திற்கு சென்று நீங்கள் GIF கோப்பாக மாற்றவேண்டிய வீடியோவின் யூடியூப் URL இனை உட்புகுத்தி Enter கீயினை அழுத்த வேண்டும்.
அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் தேவையான பகுதிகளை தேர்ந்தெடுக்கும் வசதி காணப்படுகின்றது.
அதேபோல செட்டிங்ஸ் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.
இவற்றினை தெரிவு செய்ததன் பின்னர் Make it So என்பதனை அழுத்தி செயன்முறை முடிந்த பின்னர் Download Now என்பதனை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்

யூடியூப் வீடியோக்களை GIF கோப்பாக மாற்றுவதற்கு

2/27/2014

      

இன்றைக்கு ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா?
அதே வேளையில், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா?
ADVERTISEMENT
அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்
முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும்.
குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "Tools" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், "Report an issue" என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது புதிய "Feedback" என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக "Tell us what is happening (required)" என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும்.
குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்த வகையான தேடல் என்றும் குறிப்பிடவும். உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதனையும் தர வேண்டாம்.
ப்ளக் இன் புரோகிராம் பயன்படுத்தும் போது கிராஷ் ஏற்படுகிறதா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட டேப்பில் கிளிக் செய்திடுகையில் ஏற்படுகிறதா என்பதனையும் விளக்கிக் கூறவும். "Include this URL" மற்றும் "Include this screenshot" ஆகியவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
குரோம் பிரவுசரில் தேடல் பகுதியில், டெக்ஸ்ட் அமைக்கையில், பிரவுசர் தன் குக்கீகளிடமிருந்து எந்த வகையான டெக்ஸ்ட் அமைக்கப்படலாம் என சிலவற்றைக் காட்டும். இந்த வசதியை நீக்கிவிடலாம்.
ஏனென்றால், பெரும்பாலான இடங்களில், இந்த வசதி பயனற்றதாகவே உள்ளது. இதனை நீக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.
பின்னர் அதில் செட்டிங்ஸ் ("Settings") என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய "Settings" டேப் கிடைக்கும். அல்லது chrome://chrome/settings/ எனவும் டைப் செய்து இதனைப் பெறலாம். இங்கு "Search" என்பதற்குக் கீழாக உள்ள "Enable Instant for faster searching" என்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
   
இதனை அடுத்து விண்டோவின் கீழாக உள்ள "Show advanced settings" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று, "Privacy" என்ற இடத்தில் உள்ள "Use a prediction service to help complete searches and URLs typed in the address bar" என்பதில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.இவற்றை முடித்த பின்னர், "Settings" டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர், தன் மாறா நிலையில், தரவிறக்கம் செய்யப்படும் பைல்களை C:UsersName Downloads என்ற டைரக்டரியில் பதிந்து வைக்கும். இதில் Name என்பது,யூசரின் பெயர் ஆகும்

இதற்குப் பதிலாக, நாம் தரவிறக்கம் செய்யப்படும் பைல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை வெவ்வேறு டைரக்டரி அல்லது போல்டர்களில் பதிந்து வைக்க விரும்புவோம். எனவே, தரவிறக்கம் செய்திடும் முன், பிரவுசர் நம்மிடம், எந்த இடத்தில் தரவிறக்கம் செய்திட வேண்டும் எனக் கேட்பது நமக்கு வசதியைத் தரும். இதற்குக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.முன்பு கூறியது போல, செட்டிங்ஸ் பக்கம் செல்லவும்.

செட்டிங்ஸ் டேப் திறந்தவுடன், "Show advanced settings என்பதில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று "Downloads" என்பதன் கீழே, "Ask where to save each file before downloading" என்பதில் டிக் செய்து அமைக்கவும். முடிந்தவுடன் settings டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர் தொடங்குகையில், எந்த இணையப் பக்கத்துடன் தொடங்க வேண்டும் என்பதனை, இங்கு எப்படி அமைக்கலாம் என்பதனைக் காணலாம்.மாறா நிலையில், குரோம் பிரவுசர் தொடங்குகையில், "New Tab" பக்கம் காட்டப்படும்.

இதில், பயனாளர், அடிக்கடி பார்க்கும் இணையதளப் பக்கங்களின் காட்சி காட்டப்படும். இது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குத் தேவையான, தாங்கள் அடிக்கடி செல்லும் இணையதளப் பக்க படத்தின் மீது கிளிக் செய்து, அதனைப் பெற்று பணி தொடங்கலாம்.சிலருக்கு இது பிடிக்காது. அவர்கள், தாங்கள் விரும்பும் இணையதளம் மட்டும் தானாகத் திறக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள்.அல்லது எந்த இணையப் பக்கமும் இல்லாமல், காலியாக உள்ள பக்கமே காட்டப்பட வேண்டும் என விரும்புவார்கள்.இதனை அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.

ரென்ச் (wrench) பட்டனைக் கிளிக் செய்திடவும். பின்பு ஆப்ஷன்ஸ்(Options) தேர்ந்தெடுக்கவும். இப்போது "Options" டேப் காட்டப்படும். இனி இடதுபக்கம் உள்ள "Basics" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். On startup என்ற பிரிவில், "Open the following pages" என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். குரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்கு "Add" பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு "Add page" என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும். அப்போதுதான் திறக்கப்பட்ட இணைய தளத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Use current pages" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

காலியாக உள்ள பக்கத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Add page" என்ற டயலாக் பாக்ஸில், about:blank என டைப் செய்திடவும். பின்னர், "Add" பட்டனில் அழுத்தி, டயலாக் பாக்ஸை மூடவும்

 

உங்க கூகுள் குரோம் அடிக்கடி கிராஷ் ஆகுதா?

இன்றைக்கு நமது கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம்.
அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம்.
உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.
இந்த புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டால் செய்தவுடன் முதல் முறையாக இயக்கப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காட்டுகிறது.


ஹார்ட் டிஸ்க் டிப்ஸ்...!

ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ தேர்ந்தெடுத்து, இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டது குறித்தும், காலியாக இருப்பது குறித்தும் அதனை ஆய்வு மேற்கொள்ளச் செய்திடலாம்.
ஆய்வு முடிந்தவுடன் எத்தகைய பைல்கள் உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்து அமர்ந்துள்ளன என்று வண்ணங்களைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்படும்.
இந்த இடத்திலிருந்தே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை நீக்கலாம். அவற்றின் இடம் குறித்து நிர்வகிக்கலாம்

ஹார்ட் டிஸ்க் டிப்ஸ்...!

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றுவதற்கு Gifff.fr (http://gifff.fr/) எனும் தளம் உதவி புரிகின்றது.
இத்தளத்திற்கு சென்று நீங்கள் GIF கோப்பாக மாற்றவேண்டிய வீடியோவின் யூடியூப் URL இனை உட்புகுத்தி Enter கீயினை அழுத்த வேண்டும்.
அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் தேவையான பகுதிகளை தேர்ந்தெடுக்கும் வசதி காணப்படுகின்றது.
அதேபோல செட்டிங்ஸ் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.
இவற்றினை தெரிவு செய்ததன் பின்னர் Make it So என்பதனை அழுத்தி செயன்முறை முடிந்த பின்னர் Download Now என்பதனை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

யூடியூப் வீடியோக்களை GIF கோப்பாக மாற்றுவதற்கு

2/26/2014

Avast Internet Security 2014 புதிய வெர்சனில் கணினியின் வைரஸ், ஸ்பாம், ஸ்பைவேர் போன்ற அனைத்தையும் தேடி அழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவாஸ்ட் தளம் அறிவித்துள்ளது. ரியல் டைம் ஸ்கேன் மிக சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே 1000 days வேலிடிட்டி கொண்ட லைசன்ஸ்  இணைக்கப்பட்டுள்ளது. 
                                                              Download it here

avast internet security 2014 மென்பொருள் 1000 நாள் validityயுடன்

2/25/2014

உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும்.

                     இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
                        அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.தமிழில் தேடும் வசதி உள்ளது. ''



சரிபார்க்க http://www.elections.tn.gov.in/eroll/

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com