அண்மையில் vBulletin-Softonic வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி கணனிக்கான மிகச்சிறந்த Anti-Virus Guard மென்பொருள்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
- தீங்கு விளைவிக்கும் நச்சு நிரல்களை கண்டறியும் திறன்.
- நிறுவப்பட்டு இயங்கும் போது கணனியின் செயல்திறன்.
- பயனர்களுக்கு ஏற்ற இடைமுகம்.
இவ்வாறு AVAST! AVIRA, PANDA CLOUD, MICROSOFT, AVG, BAIDU, QIHOO, BITDEFENDER போன்ற இலவச Anti-Virus Guard மென்பொருள்கள் உட்பட KASPERSKY, BULLGAURD, ESET, F-SECURE, G DATA மற்றும் NORTON போன்ற கட்டண மென்பொருள்களும் சோதிக்கப்பட்டது.
இதன் படி 8.69 எனும் அதிகூடிய புள்ளியை பெற்று NORTON Anti-Virus Guard முதலிடத்திலும் 8.47 புள்ளிகளை பெற்ற ESET Anti-Virus Guard இரண்டாவதாகவும் 8.39 புள்ளிகளை பெற்ற Kaspersky Anti-Virus Guard மூன்றாவது இடத்துக்கும் தெரிவு செய்யப்பட்டது.
மேலும் 8.30 புள்ளிகளுடன் AVG Free Anti-Virus Guard நான்காவது இடத்திலும் உள்ளது.
அத்துடன் விசேட திறன்கள் அடிப்படையில் பின்வரும் மென்பொருள்கள் தெரிவு செய்யப் பட்டன.
- ஆண்டுக்கான மிக வலிமையான Anti-Virus Guard மென்பொருள் - G DATA
- ஆண்டுக்கான புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதும் சிறந்த பெறுபேறுகளை தரக்கூடியதுமான (promising) Anti-Virus Guard மென்பொருள் - BAIDU
- வேகமான Anti-Virus Guard மென்பொருள் - ESET
- அதிக வசதிகளைக் கொண்ட இலவச Anti-Virus Guard மென்பொருள் - AVAST!
- ஆண்டுக்கான ஏமாற்றத்தை அளித்த Anti-Virus Guard மென்பொருள் - MICROSOFT (MSE)
Post a Comment