அறிவியல்பூர்வமாக நிரூபிக்காத வரை எதுவும் உண்மை இல்லை என்று சர்வதேச விஞ்ஞானிகள் ஒதுங்கி கொண்டாலும், வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய சந்தேக ஆராய்ச்சி மட்டும் நிற்கவில்லை.
பல நாடுகளில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் வேற்று கிரக மனிதனின் சடலத்தை தன்னுடைய வீட்டில் பாதுகாத்து வருகிறார் என்ற தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதற்கு ஆதாரமாக குறித்த சீன நபர் வெளியிட்ட படங்கள் இன்னும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
சீனாவில் உள்ளது பின்சூ ஷாங்டாங் மாகாணத்தின் வழியாக மஞ்சள் ஆறு ஓடுகிறது. இதன் கரையோரம் வசிப்பவர் தான் லீ.
இவர்தான் ஏலியனின் சடலத்தை வைத்துள்ளார். இவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் ஆற்றங்கரையோரம் செல்கையில், வானத்தில் மர்மமான முறையில் பறக்கும் தட்டுகள் சென்றன.
அதில் ஒன்று கீழே விழுந்ததில், மின்சார கம்பியில் பட்டு பற்றி எரிந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்த போது, மனிதன் மாதிரியே பிணம் கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளேன் என்கிறார்.
அத்துடன் ஏலியனின் சடலம், கை, கால்களை படங்கள் எடுத்து ஒன்லைனில் வெளியிட்டதால், அதை பார்த்த மக்கள் பரபரப்பு அடைந்தனர்.
இதனையடுத்து லீயின் வீட்டுக்கு சென்ற பொலிஸ் தீவிர விசாரணை நடத்தினர். இதன் பின் உண்மை வெளிவந்துள்ளது.
பொலிசார் கூறுகையில், வேற்று கிரக வாசி போன்று ரப்பரில் பொம்மை செய்து வைத்துள்ளார். இது கவலைப்பட வேண்டிய விடயமல்ல என விளக்கம் அளித்துள்ளனர்.
Post a Comment