Showing posts with label பணம் சம்பாதிக்க‌. Show all posts
Showing posts with label பணம் சம்பாதிக்க‌. Show all posts

1/26/2014

ஈபே (eBay) இணையதளம் 1995 ல் நிறுவப்பட்டது. இவ்விணையதளம் பொருட்களின் ஏல மற்றும் விற்பனை சந்தை போல் செயல்பட்டுவருகிறது. ஈபே மூலம் லட்சக்கணக்கான பொருட்கள் தினமும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, ebay ல் பொருட்களை விற்பதன் மூலம் விற்பனையாளர்கள் நிறைய லாபங்களை ஈட்டிவருகின்றனர். நீங்களும் இதில் சேர்ந்து பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. ஈபேயில் கிடைக்கும் வருமானம் உங்களுக்கு பகுதி நேர பணமாக (Part Time Cash) இருக்கலாம், ஏன் இதை நீங்கள் முயன்றால் முழு நேர தொழிலாகவும் (Full time Business) செய்ய முடியும்.
ஈபே ஒரு வணிக தளம், இதில் பொருட்களை விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பது வரை சரி. ஆனால் எப்படிப்பட்ட பொருட்களை விற்பது?, அதை எப்படி தயாரிப்பு நிறுவனங்களிடமோ அல்லது தனியாரிடமோ பெறுவது?. மேலும் அப்படி விற்க்கப்படும் பொருட்களின் மூலம் இதை எப்படி ஒரு தொழிலாக மாற்றி ஈபேயில் PowerSeller (PowerSeller என்பது விற்பனையாளர்களின் உயர் தகுதி ஆகும்) அந்தஸ்தை பெறுவது? போன்ற கேள்விகள் உங்களிடம் தோன்றலாம். அதற்க்கு விடைகான இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
உண்மையில் சொல்லபோனால், ஈபேயில் பணம் சம்பாதிக்க தொடங்குவதென்பது எளிதான காரியம் தான். உங்களுக்கான விற்பனையாளர் கணக்கை தொடங்கிய பின், உங்களிடமுள்ள பழைய அல்லது உங்களுக்கு தேவைப்படாத பொருள்கள் ஏதும் இருந்தால் அதனை விற்பதற்கான முயற்சியை செய்து பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி விற்க முற்படும் (start buying stock to resell) முன், இவ்வகையான அடிப்படை விற்பனையில் ஈடுபடும் பட்சத்தில் இது சிறந்த அனுபவங்களை தரலாம்.
நீங்கள் பொருட்களை வாங்கி விற்க்கும் (Reselling) முறையில், எந்த மாதிரியான பொருட்களை விற்க்கும் விற்பனையாளராக (seller) விரும்புகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் எந்த வகையான பொருட்களையும் விற்கமுடியும், ஆனால் ஒரு பெயர்பெற்ற (Famous) விற்பனையாளராக நீங்கள் மாற வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட வகையான பொருட்களை விற்பது தான் சிறந்ததாக இருக்கும்.
அதற்காக உங்களின் விற்பனை பொருட்கள் ஒரு குறுகிய வட்டத்தில் தான் இருக்கவேண்டும் என்பது அர்த்தமில்லை. நீங்கள் விற்பனை செய்வதாக இருக்கும் பொருள் பிரபலமாக மற்றும் அதிகமாக விற்பனையாக கூடியதாக இருக்கவேண்டும். இதை கண்டறிய ஈபேயின் மேம்ப்பட்ட தேடல் (ebay’s Advanced Search) வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வகை பொருள்களின் விற்பனை விகிதம் மற்றும் அதன் விலை நிர்ணயம் போன்றவற்றை தெரிந்து கொள்வது நல்லது.
உதாரணத்திற்க்கு நீங்கள் கணினி விளையாட்டு மென்பொருள்களை (computer Games) விற்க நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் வாங்கி விற்பதற்க்கு ஆயிரக்கணக்கான விளையாட்டு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் எவை உங்களுக்கு அதிகமாக விற்று லாபமீட்டி தரும் அல்லது எவை உங்களை நட்டப்படுத்தும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். நீங்கள் தவறான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்ய முடியாமல், பணத்தை இழக்க முடியாது. எனவே ஈபேயின் தேடுதல் மூலம் பட்டியலிட்டுள்ள பொருட்களில் எவை தொடந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது, மேலும் எவை உங்களுக்கு அதிக லாபம் பெற்று தரும் என்பதையும் அறிந்து கொள்வது சிறந்தது.
சரி, எந்த பொருட்களை விற்று லாபம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொண்டீருப்பீர்கள், இப்பொழுது அதை நீங்கள் எங்கே வாங்க வேண்டும் என்பதை பார்க்கலாம். விற்பனையாளர்கள் (sellers) யாரும் அவர்கள் எங்கே பொருட்களை வாங்கி விற்கிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்லமாட்டார்கள். அவ்வாறு சொல்வது அவர்களின் பணப்பெட்டியின் சாவியை உங்கள் கையில் கொடுப்பதை போன்றதாக கருதுவார்கள். அது தான் உண்மையும் கூட. எனவே நீங்கள் அதை தெரிந்து கொள்ள உங்கள் மூளைக்கும் கால்களுக்கும் சிறிது வேலைக்கொடுத்தாக வேண்டும்.
தயாரிப்பு பொருள்களை வாங்க நீங்கள் இரண்டு முக்கியமான இடங்களை நாட வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் (wholesalers) அல்லது dropshippers. இரண்டு வகையிலும் நீங்கள் பொருட்களை வாங்க அவர்களுக்கே உரித்தான சில விதிமுறைகள் உள்ளன. அதில் எதை நீங்கள் பின்பற்ற போகிறீர்கள் என்பது உங்களை பொருத்தது.
Dropshippers உங்களுக்கான பொருட்களின் கையிருப்பை (product stock) அவர்களே வைத்திருப்பார்கள். எனவே உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து (Customer) பணத்தை பெற்றபின், Dropshippers க்கு பணத்தை கொடுத்தால் போதுமானதாக இருக்கும். அதற்காக நீங்கள் அவர்களின் குறிப்பிட்ட சில திட்டங்களில் (scheme) ஒன்றில் இணைந்திருக்க வேண்டும்.

நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த விற்பனையாளர்கள் (wholesaler) தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு பொருட்களை வாங்கி வைக்க அறை (stock room), மற்றும் முன்கூட்டியே அதை வாங்க பணம் (Investment) வேண்டும். சில நேரங்களில் நீங்கள் வாங்கிய பொருளை விற்க இயலவில்லையெனில், இம்முறை உங்களை நட்ட படுத்த நேரிடலாம். அதனால் நான் ஏற்கனவே சொன்னதை போல் தேடல்களின் பட்டியல் முடிவை பொருத்து இதை தந்திரமாக செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் ரீஸ்க் குறையலாம்.
சரி, மீண்டும் தயாரிப்பு பொருட்களை எங்கே வாங்குவது என்பதிற்க்கு செல்வோம். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு பொருளை வாங்கி விற்க திட்டமிட்டு விட்டிர்களெனில், எளிமையான வழியென்னவெனில் அந்த பொருளின் pack ல் பெரும்பாலும் சப்ளையர் பெயரை பார்க்க முடியும். அதன் மூலம் அவர்களின் இணைய முகவரிக்கு சென்று மேலும் விவரங்களை திரட்ட முடியும்.
மற்றொரு எளிய முறை நீங்கள் Google இல் தேடுவது. இவ்வாறு தேடுவதன் மூலம் சில சிறந்த மொத்த விற்பனையாளர்களை கண்டறிய முடியும். காலப்போக்கில் நீங்கள் பொருட்களை பெற பல ஆதாரங்களை பெறுவதன் மூலம், ஒரு மொத்த விற்பனையாளரிடமிருந்து மற்றவரிடம் செல்ல நேரிடும். மற்றும் நீங்கள் விற்பனையில் வளர உங்கள் தயாரிப்பு அளவுகளையும் கட்டமைக்க முடியும்.
விற்பனை சேவை பற்றிய கருத்துகளை (feedback) தெரிந்து கொள்வது உங்கள் தொழிலை மேலும் வளர்க்க உதவும் முக்கியமான ஒன்று. கருத்துகளை(feedback) தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுவது உங்களை மேம்படுத்தப்பட்ட விற்பனையாளராக மாற்றும் என்பதில் ஐயமில்லை. மேலும் அவ்வாறாக செயல் படுவதன் மூலம் நீங்கள் ஈபேயில் powerseller என்ற தகுதியை பெற இயலும்.
PowerSeller சின்னம் என்பது பல வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் உங்களை மிகவும் தீவிரமான ஈபே விற்பனையாளராக காண்பிக்கும். இதில் ஐந்து நிலைகள் உள்ளன. நீங்கள் PowerSeller என்பதை அடைய ஒரு இலக்கை நிர்ணயித்தது இருக்கும் போது, உங்கள் தயாரிப்பு அளவு கட்டமைக்க மற்றும் படிப்படியாக உங்கள் விற்பனையை அதிகரிக்க வெறும் மூன்று மாதங்களில் அதை செய்ய முடியும் என்றே கருதுகிறேன்.
பல விற்பனையாளர்கள் ஈபேயில் தங்களுக்கென ஒரு தனி விற்பனை நிலையத்தையே (Own ebay shop) வைத்துள்ளனர். ஆனால் நீங்கள் முதன் முதலில் பொருட்களை விற்க்க துவங்கும் போது இது தேவையில்லை. ஏனேனில் உங்கள் விற்பனை நிலைய பக்கம் பொருட்களே இல்லாமல் வெறுமையாக இருக்கலாம். எனவே உங்கள் விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதற்க்கு பிறகு இவ்வகை தனி விற்பனை நிலையத்தையே (Own ebay shop) வைத்துக்கொள்ளலாம்.
கடைசியாக நீங்கள் சிந்திக்க வேண்டியது, எவ்வகை விலை வரம்பு (price range) பொருட்களை விற்க வேண்டுமென்பதை தான். மேலும் எந்த பொருட்களை நீங்கள் விரும்பி விற்க்க முடியும் என்பது மிக முக்கியமானது. அதிக விலை பொருட்கள் அதிக லாபத்தை தரலாம் என்ற காரணத்தால் மட்டும் அதை விற்க முடிவெடுக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்த மற்றும் உங்களுக்கு சரியானதாக எது இருக்கும் என்று தேர்வு செய்து அதில் கவனம் செலுத்தவும். அப்படி செலுத்தினால் அதில் உங்களுக்கு மிக பெரிய வெற்றி காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வெற்றிகரமான விற்பனை வணிகத்தை (selling business) உருவாக்க காலம் எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்க. – ஆனால் நீங்கள் ஈபேயில், உண்மையாக வெற்றியை அடைய தீர்மானித்துவிட்டிர்கள் என்றால், இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

ஈபேயில் (eBay) பணம் சம்பாதிப்பது எப்படி?

மென்பொருள் வேலைகள் செய்யவதன் மூலம் பணமீட்டுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ”வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்ய?” என்று இந்த பதிவின் தலைப்பு இருந்தாலும், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களும் இத்தகைய வேலைகளை செய்யலாம். இதற்கு மென்பொருட்களை பற்றிய அறிவு இருந்தால் போதும்.
நீங்கள் குறிப்பிட்ட ஒரு மென்பொருள் பயன்படுத்தி வேலைகள் செய்வதில் திறமைசாலியாக இருப்பின் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உதாரணத்திற்கு Adobe photoshop, Flash, Dreamweaver, WordPress, php, java, .net, html, 3D max போன்ற எதாவது ஒரு மென்பொருள் வேலைகள் செய்வதில் நீங்கள் வல்லவர்களாக இருந்தால் போதும், இதில் சிறந்து விளங்க முடியும்.
சரி, இந்த வேலைகளை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம், வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்ய நினைப்பவர்களுக்காகவே (freelance job seekers) நிறைய இணையதளங்கள் உள்ளன. இதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதில் வேலைகளை கொடுப்பவர்களும், வேலைகளை வேண்டுபவரும் கலந்தே இருப்பார்கள். நிரந்தர பணியாளர்கள் தேவையல்லாமல் இருக்கும் மென்பொருள் வேலைகளை வைத்திருப்பவர்கள், இந்த இணையதளங்களில் வேலைகள் குறித்த விளக்கங்களும் அதற்கு அவர்களின் budget டும், வேலை முடிக்க கால அவகசமும் கொடுத்திருப்பார்கள். குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட budget ல் முடிக்க முடியும் என நீங்கள் நினைத்தால், உங்களின் நிலையை நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு தான் இந்த இணைய தளங்கள் வேலை செய்கின்றன.
அப்படியேனில், இத்தகைய இணைய தளங்களை நடத்துபவர்களுக்கு என்ன லாபம்? என நீங்கள் நினைக்கலாம். வேலையை கொடுப்பவர்கள் மற்றும் வேலை பெற விருப்புபவர்கள் இருவரும் இந்த இணைய தளங்களில் தங்களுக்கான கணக்குகளை உருவாக்க சிறிது கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வேலைக்கும் நீங்கள் ஈட்டும் பணத்திற்கு ஒரு கமிஷன் தரவேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் திறமையானவரெனில் இது உங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல, இதை விட நீங்கள் பன்மடங்கு அதிகம் பணமீட்ட முடியும். அதனால் இந்த கட்டணங்களை பற்றி நீங்கள் கவலை பட தேவையில்லை. இருப்பினும் நிறைய வேலைகள் பதிவு செய்யப்படும் இனையதளத்தில் இனைவது மிக அவசியம். இத்தகைய freelance இணையதளங்களின் பட்டியல் விரைவில் பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான பணத்தை உங்களது இணைய கணக்கிற்கு வந்துவிடும், அங்கிருந்து paypal லிற்க்கோ அல்லது உங்கள் Bank acccount ற்க்கோ சுலபமாக நீங்கள் பெறலாம்.
முதலில் இத்தகைய முறையில் வேலைகளை பெறுவது கடினம் தான் ஆனால் சில வேலைகளை நீங்கள் முடித்துபின் உங்களுக்கு இவை சுலபமாகி விடும்.

வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய?

Job Bidding Sites
இந்த இணையதளங்கள் bidding முறையில் வேலை செய்பவை, ஒரு வேலைக்கு பலர் bidding செய்யலாம். வேலை தருபவர் தகுந்தவரை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இதில் எனக்கு பிடித்த இணையதளங்கள் GetAFreelancer, eLance மற்றும் ScriptLance.


  • GetAFreelancerGENERAL WEBDEVELOPERSSEODESIGNANYWHERE



  • eLanceGENERAL WEBWRITERSDESIGNERSDEVELOPERSGENERALANYWHERE



  • iFreelanceGENERAL WEBILLUSTRATORSWRITERSDESIGNERSANYWHERE



  • FreelanceWorkGENERAL WEBDEVELOPERSANYWHERE



  • RentACoderGENERAL WEBDEVELOPERSANYWHERE



  • ScriptLanceGENERAL WEB, DEVELOPERSANYWHERE
  • GetACoderGENERAL WEB, DEVELOPERSANYWHERE



  • ProjectSpringGENERAL WEBDEVELOPERSANYWHERE



  • AgaveBlueANYWHERE
  • ContractedWorkALL TYPESANYWHERE



  • FreelanceAuctionDEVELOPERSANYWHERE



  • PowerLanceALL TYPESANYWHERE



  • Freelancers.netALL TYPESANYWHERE



  • Project4HireALL TYPESANYWHERE



  • Mac FreelancerALL TYPESMACANYWHERE



  • OnforceCOMPUTER REPAIRON SITEITANYWHERE
  • ஃப்ரிலான்ஸ் இணையதளங்களின் பட்டியல்

    நீங்கள் பணம் சம்பாதிக்க உங்களுக்கென்று தனி இணையத்தளம் ஒன்றை முதலில் உருவாக்கவேண்டும். இவ்விணையதளம் ஒரு குறிப்பிட்ட அல்லது பல்வேறு வகையான தகவல்களை கொண்டதாகவும் இருக்கலாம்.  உங்கள் இணையத்தளம்,  இலவசமாக வலைப்பூ சேவையை தரும் blogspot அல்லது wordpress போன்ற மற்ற இணையதளங்களின் உதவியோடு உருவாக்கபட்டிருப்பினும் கூட  இவ்வழிமுறையில் சம்பாதிக்கலாம்.
    இவ்வாறு உருவாக்கபட்ட உங்கள் இணையதளத்தை முதலில் நீங்கள் Ad Networks எனப்படும் விளம்பர நிறுவன இணையத்தளத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். உங்கள் இணையத்தின் தரம் மற்றும் செயலை பொருத்து உங்களுக்கான Publisher கணக்கு தரப்படும். உங்கள் கணக்கிற்கான விண்ணப்பத்தினை பதியும் முன் Ad Networks ன் Terms and condition பக்கங்களை தவறாமல் படித்து கொள்ளவும். பெரும்பாலான Ad Networks தீவிரவாத மற்றும் பாலியல் தொடர்பான பதிவுகள் உள்ள இணையத்திற்கு Publisher கணக்கினை  தருவதில்லை.  இவ்வாறு தரப்படும் Publisher கணக்கினுள், உங்களின் இணையதிலுருந்து நீங்கள் பெறப்பட்ட தின மற்றும் மாத வருவாய், உங்கள் இணையத்தில் போட வேண்டிய விளம்பரங்களின் விபரங்கள் மற்றும் பல உங்கள் வசதிக்காக கொடுக்கபட்டிருக்கும்.
    இவ்வழிமுறையில் உங்களின் வருமானம் என்பது பெரும்பாலும் உங்களின் இணைய வாசகர்களின் எண்ணிகையை பொறுத்தே அமையும். இதில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு. ஒன்று, CPC எனப்படும் Cost per Click (ஒருமுறை விளம்பரம் கிளிக் செய்யப்படும் வருவாய்) வகை. இது உங்களின் இணையத்திலுள்ள விளம்பரதாரர்களின் விளம்பரத்தினை உங்கள் இனைய வாசகர்கள் கிளிக் செய்யும் போது உங்களுக்கு கிடைக்கும் வருவாய்.  மற்றொன்று CPM எனப்படும் Cost per Impression (ஆயிரம் வாசகர்களுக்கு விளம்பரங்களை கண்பிற்பதர்கான வருவாய்). இவ்வகையில் உங்கள் வாசகர்கள் விளம்பரங்களை கிளிக் செய்யாவிடிலும் உங்களுக்கு வருவாய் நிச்சயம். ஆனால் CPC வகைகளே அதிகமான  Ad Networks நமக்களிகின்றன.
    முக்கிய அறிவிப்பு : இம்முறையில் உங்களது இணைய விளம்பரங்களை நிங்களே கிளிக் செய்யும் பட்சத்தில் உங்கள் Publisher கணக்கு துண்டிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
    சில முக்கியமான Ad Networks இணையதள முகவரி உங்களுக்காக, Google AdsenseAxilclicksorAdbride

    உங்களது இணையதளத்தின் மூலம் சம்பாதிக்க?

    வீட்டிலிருந்த படி இணையத்தில் சம்பாதிப்பது எப்படி?
    நீங்கள் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புபவரா?. இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற இந்த தகவல்களை தேடி நீங்கள் மிகவும் சோர்ந்திருக்கக் கூடும். உங்களுக்கான சரியான விபரங்களை திரட்டி இங்கே அளித்திருக்கிறேன்.
    பெரும்பாலான மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள், ஏன்? பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கூட இத்தகைய ஓய்வு நேர அல்லது பகுதி நேர வேலையை விரும்புகின்றனர், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போகிறது, அல்லது பெரும்பாலான வழிகாட்டுதலுக்கு பணம் முதலிடாக தேவைபடுகிறது, இலவசமாக கிடைக்கும் வழிகாட்டுதல்கள் தவறாகவே இருக்கிறது.அப்படி நாம் பணம் தர தயாராக இருக்கும் பட்சத்தில் கூட சரியான மற்றும் எளிதான வழிகாட்டுதல் இல்லாமல் தான் போகிறது. இவ்வித பிரச்சனைகளுக்கு தீர்வாகவே இந்த பதிவை உருவாக்கியுள்ளேன்.
    இணையத்தளத்தில் இருக்கிறது என்பதால் மட்டுமே ஒரு செய்தி உண்மையாகாது?, இங்கு யார் வேண்டுமானாலும் இணைய தளம் (websites) அல்லது வலைப்பூ (Blog) போன்றவற்றை உருவாக்கலாம். இதற்கு கொஞ்சம் நேரம் மட்டுமே செலவாகும். இவ்வாறு நான் கூறுவதற்கு காரணம், நம்மில் பலர் இணையத்தில் வரும் போலியான சில “Online Money Making” விளம்பரங்களை கண்டு ஏமார்ந்து அதை வாங்கி முயற்சி செய்து தோல்வியடைந்து விட்டு முயற்சியை கைவிட்டுவிடுவோம். அதனால் யோசித்து செயல்படுவதே நன்று. இணையத்தில் இருக்கும் அனைத்து “Online Money Making” விளம்பரங்களையும் நான் குறை கூறவில்லை. அவற்றில் சில உபயோகமானதாக தான் இருக்கும், ஆனால் அதுவும் நம்மை பொறுத்தே செயல்படும். அதாவது நம்முடைய முயற்சி மற்றும் செயல்படும் திறன் இவற்றை பொறுத்தே அமைகிறது.
    பெரும்பாலும் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், இவ்வாறு வருமானம் ஈட்டுவது சுலபம் என்று நினைகிறார்கள். உண்மை அதுவல்ல. இவ்வாறு இவர்களை நினைக்கவைப்பது ” வீட்டிலிருந்த படி இணையத்தில் Rs.50000/- சம்பாரிக்க “, “வீட்டிலிருந்தபடி ஒரு மணி நேரத்தில் ₨46,845.06 சம்பாதிக்கலாம்” என்ற இதுபோன்ற விளம்பரங்கள் தான். உண்மையில் சொல்ல போனால் நீங்கள் இந்த துறைக்கு (Online Money Making) புதியாவரானால், நாளொன்றுக்கு ஒருமணிநேரம் செலவழித்து ₨468.45 சம்பாதிக்கவே நிறைய நாட்கள் ஆகும். இவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் இதை நன்கு அறிவார்கள்.
    என்னை தொடர்பு கொண்ட ஒரு நண்பர், சில Online Money Making விளம்பர பக்கங்களில் வரும் பயனீட்டாளர்கள் உரைகளை (testimonials) பார்த்துவிட்டு அவற்றை பற்றி என்னிடம் கூறி அந்த வழிகாட்டி புத்தகத்தை வாங்கலாமா? (அதன் விலை இந்திய மதிப்பில் 4000 ரூபாய்) என வினவினார். பெரும்பாலும் இந்த பயனீட்டாளர்கள் உரைகள் அனைத்தும் சரியானதாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. அவ்வாறு உண்மை எனினும் அந்த பயனிட்டளர் ஏற்கனவே இணையத்தில் நன்றாக வருமானமீட்டக் கூடியவராக இருப்பார், இந்த புத்தகத்திலுள்ள சில புதிய தகவல்கள் அவருக்கு மேலும் வருமானத்தை உயர்த்திக்கொள்ள உதவியாக இருக்கும். புதிதாக வருபவரை நாம் ஏற்கனவே இணைய தொழிலில் (Online Business) இருபவருடன் ஒப்பிட முடியாது என்பதையும், அவ்வாறு வரும் விளம்பரங்களை தவிர்த்துவிடுமாறும் கூறினேன்.
    நான் இந்த பதிவை பதிவதற்கு காரணம், ஒன்றை உங்களுக்கு தெளிவாக கூறவே. இணையமல்லாத மற்ற தொழில் மற்றும் வியாபாரங்களில் குறைந்த நேரத்தில் அதிக வருமானம் ஈட்டுவதற்கு என்று secret இருப்பதுண்டா?. இல்லை அல்லவா?. அதே போல் இணையத்தில் வருமானம் ஈட்டுவதற்கு என்று தனியாக secret எதுவும் இல்லை. இதுவும் ஒரு முழுமையான வியாபாரம்.
    அப்படியானால், இணையத்தில் வருமானம் ஈட்டவே முடியாதா? என்று அந்த நண்பர் மட்டுமல்ல, நிங்களும் கேட்பது புரிகிறது. உண்மையில் இந்த பதிவை எழுதுவது இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புவர்களுக்கான ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. மற்ற படி இணையத்தில் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. அதில் குறிப்பிட்டு நான்கு வகையை கூறலாம்.
    அவை,
    1. உங்களது இணையதளத்தின் மூலம் பணமீட்டுதல்.
    2. பொருள்களை உருவாக்குவது மற்றும் விற்பது
    3. மற்ற நிறுவனங்களின் பொருட்களை commission க்காக விற்பது
    4. மென்பொருள் வேலை மூலம் பணமீட்டுதல்

    இவற்றை பற்றிய முழுமையான தகவல்களை இந்த இணையதளத்தின் பகிர்ந்து வருகிறோம், இவ்விணைய தள பக்கங்களை தொடர்ந்து படியுங்கள்.
    சரியான வழியில் உங்கள் நேரத்தை செலவு செய்தால், வெற்றி நிச்சயம்.

    வீட்டிலிருந்த படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    1/25/2014

    இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது ஏதோ மிகவும் சுலபமானது என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், அதை தூக்கி எறிந்துவிட்டுங்கள். மற்ற அனைத்து வேலைகளில் இருக்கும் சிரமங்களை போல், ஏன் அதை விட அதிகமாகவே இது கடினம் தான். ஆனால் இவ்வகை இணையவேலைகளில் சில நன்மைகளும் உண்டு. நமக்கு தகுந்த நேரத்தில் வேலைகளை செய்து கொள்வது, யாருக்கும் கட்டுபட்டு இருக்கும் அவசியம் இல்லாதது, இன்னும் சொல்லபோனால் முழு நேர வேலைகளை விட அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு போன்ற சில நன்மைகள் தான் அவற்றில் ஒரு சில. இதனால் தான் சிலர் தனது முழுநேர வேலையில் இருக்கும் போதே இவ்வகை இணையத்தில் சம்பாதிக்கும் வழியை தேடிவருகின்றனர்.
    என்னை பொருத்தவரை இணையத்தில் சம்பாதிப்பதை இரண்டு வகையாக பிரிப்பேன். அதில் முதலாவது ஆன்லைன் வேலைகள் (Online Jobs), மற்றொன்று ஆன்லைன் பிஸினஸ் (Online Business). இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லாததை போல் தோன்றும், ஆனால் இரண்டிற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. எப்படி என்றால் ஒருவர் வேலைக்கு செல்வதற்கும் தொழில் செய்வதற்க்கும் உள்ள வேறுபாட்டை போன்றது தான் அது.
    ஆன்லைன் வேலைகள் (Online Jobs)
    ஆன்லைன் வேலைகள் (Online Jobs) என்பதை இணையத்தில் மற்றவர்களுக்காக வேலை செய்யும் முறை என்றும் சொல்லலாம். இம்முறை என்பது அலுவலகத்திற்க்கு செல்லாமல் மற்றபடி அலுவலக வேலைகளை போன்றதே, இதில் உங்கள் திறமைகளுக்கேற்ப, நீங்கள் அறிந்து வைத்திருக்கும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, வேலைகளை தரும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடமிருந்து வேலைகளை பெற்று அதை தகுந்த முறையில் செய்து பணம் ஈட்டுவது. இதை நீங்கள் முறைபடுத்துவதன் மூலம் இதனை உங்களின் தொழிலாகவும் ஆக்க முடியும். இந்த வகையில் நீங்கள் செய்யும் வேலைகளின் திறன் மற்றும் வேலை செய்யும் நேரம் போன்றவற்றை முறையிட்டு அதன் அடிப்படையில் உடனுக்குடன் அல்லது குறிப்பிட்ட காலத்திற்க்குள் அதற்கான வருமானத்தை பெறலாம்.
    ஆன்லைன் பிஸினஸ் (Online Business)
    ஆன்லைன் பிஸினஸ் என்பது, மற்ற பிஸினஸ் போலவே தான், எப்படி ஒரு தொழிலில் நீங்கள் செய்யும் நேரத்தை பொருத்து அதன் வருமானத்தை தீர்மானிக்க முடியாதோ அதை போலவே இதில் நேரம் மட்டும் முக்கியமானதல்ல, நீங்கள் செய்யும் வேலையின் தன்மை மற்றும் அதன் சாதனைகள் தான் முக்கியம். இம்முறையில் உங்களின் உழைப்பின் பயனை அடைய சிறிது காலம் ஆகலாம், ஏன் அடைய முடியாமலும் போகலாம், ஒரு தொழிலில் எப்படி லாபம் நஷ்டம் சகஜமோ அதை போலவே ஆன்லைன் பிஸினஸிலும். ஆனால் இதில் நஷ்டம் என்பது பெரும்பாலும் நீங்கள் அதற்கு செலவு செய்த நேரமாக இருக்கலாம். ஆனால் இம்முறையில் சாதிக்கும் பட்சத்தில், நீங்கள் தூங்கும் போதும், இத்தொழில் உங்களுக்காக பணமீட்டி கொண்டிருக்கும் என்பதையும் சொல்லவிரும்புகிறேன்.
    உதாரணத்திற்க்கு சொல்லவேண்டுமென்றால்,
    ஒருவர் ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனி நபர் ஒருவருக்கோ இணையத்தில் அவர்களுக்கு தேவையான வேலையை செய்து கொடுத்து அதன் மூலம் சாம்பதிக்கலாம் இதனை ஆன்லைன் வேலை என்கிறோம். இதில் செய்யும் வேலையின் கால அளவு அல்லது வேலையின் அளவை பொருத்து உங்களுக்கான வருமானம் இருக்கும்.


    ஒருவர் ஒரு இணையதளத்தை அமைத்து அதனை பிரபலப்படுத்தி, அதில் விளம்பரங்களை பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம். இதில் விளம்பர வருமானம் பெற இணையதளத்தை அமைக்கவேண்டும், அதை பிரபல படுத்த வேண்டும், விளம்பரத்தை பெற வேண்டும், இவை அனைத்தும் செய்து வருமானம் பெறுவதால் இதை ஆன்லைன் பிஸினஸ் எனலாம்.
    ஆன்லைன் வேலை மற்றும் தொழிலை இப்படியும் சொல்லலாம். அதாவது, தேவைக்களுக்கு (requirement) ஏற்ப வேலை செய்து தருவதை ஆன்லைன் வேலைகள் எனவும், வேலையை செய்துவிட்டு அதனை கொண்டு பணம் சம்பாதிக்கும் முறையை ஆன்லைன் பிஸினஸ் எனவும் கூறலாம்.
    இவ்விரண்டு முறையிலும் பல்வேறு வகையில் பணமீட்ட வழிகள் உள்ளன.

    இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். இது ஒரு எளிய வழி. இதன் மூலம் உங்கள் கூடுதல் செலவிற்கு தேவையான பணத்தை நீங்கள் சம்பாதிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால் இது ஒரு வேடிக்கையான வழியும் கூட. இவ்வாறு சம்பாதிக்க உங்களின் ஓய்வு நேரமே போதுமானது. சில நிமிடங்கள் அல்லது ஒரு சில மணி நேரம் தேவைப்படலாம்.
    உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் சம்பாதிக்க முடியும் என்றவுடனே உங்கள் மனதில் சில கேள்விகள் தோன்றியிருக்கலாம். என் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் எப்படி சம்பாதிக்க முடியும்?. என் கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவது யார்?. அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?. இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றியிருக்குமேயானால் விடைகாண தொடர்ந்து படியுங்கள்.
    மிக பெரிய சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்கள் தீவிரமாக, நுகர்வோர் தேவை என்ன? என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தையில் புதிய தயாரிப்புகளை கொண்டுவரவும் ஏற்கனவே அவர்கள் கொண்டுவந்த தயாரிப்புகளின் மதிப்பு அதை பற்றி மக்களின் எண்ணத்தையும் அறியவும் விரும்புகிறார்கள். இதை மேற்கொள்ளும் சந்தை ஆராய்ச்சிகாகவே (market research)  ஒரு பெரும் முதலீட்டை செய்கிறார்கள்.
    ஆனால் அவர்களுக்கு அதில் ஒரு பெரிய முட்டுகட்டையுள்ளது. அது எப்படி உங்களை (அதாவது நுகர்வோரை) அடைவது என்பது தான். அது அவ்வளவு சுலபமில்லை. அதனால் அவர்கள் தங்கள் தயாரிப்புகளை பற்றி நுகர்வோர் என்ன நினைக்கிறார்கள் என அறியவும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான பொருட்கள் விற்பனைக்கு வர வேண்டும் என நுகர்வோர் விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவும் ஆய்வு நிறுவனங்களை (Survey Companies) நாடுகின்றனர்.
    இதை போன்ற ஆய்வு நிறுவனங்களின் (Survey Companies) இணையதளங்களில் பதிவு செய்து கொள்வதன் மூலம் நீங்களும் உங்கள் கருத்துக்களை தெரிவித்துக்கொள்ளமுடியும்.
    இதை போல் ஆய்வு நிறுவன இணையதளங்களில் சேர்வதன் மூலம் சில சுவாரஸ்யங்களையும் அனுபவிக்க முடியும். உதாரணத்திற்க்கு, ஒரு தயாரிப்பு, (Product) கடைகளில் கிடைக்கும் முன்பே அதை பற்றி முழுவிவரங்களும் தெரிய பெற்றிருக்கலாம் அல்லது ஒரு கணினி விளையாட்டு மென்பொருள் (Computer Game Software) வெளி வருவதற்க்கு முன்பே அதை பற்றி தெரிந்துகொள்ள விளையாடி பார்க்க நேரிடலாம் அல்லது ஒரு திரைப்படம் வெளிவருவதன் முன்பே அதன் முக்கியமான காட்சிகளை பார்த்து அதற்க்கு கருத்துக்களை தெரிவிக்கவேண்டி வரலாம். எல்லாவற்றையும் விட இதை செய்வதற்கு உங்களுக்கு பணம் கிடைக்கபெறுவீர்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
    உங்களிடமிருந்து (நுகர்வோர்) தேவையான தகவல்களை மற்றும் கருத்துக்களை பெற ஒரு நிறுவனத்தின் அதிவேக மற்றும் எளிதான வழி தான் இந்த சர்வே முறை. மற்ற நுகர்வோர் தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பெறும் முறைகளை காட்டிலும் இந்த முறையே சிறந்தது மற்றும் செலவு குறைவானது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது தான் உண்மை.
    எனவே கணக்கெடுப்புகள் (Survey) ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அதன் பிழைப்பிற்க்கும் (survival) அவசியமானதாக இருக்கிறது. இது நிறுவனங்களுக்கும் தெரியும் எனவே தான் அவர்கள் உங்கள் கருத்திற்க்கு தகுந்த சன்மானம் அளிக்க தயாராக உள்ளனர். உங்கள் கருத்துக்களை தெரிவிக்க நீங்கள் தயாரா?.
    சரி, இதை போல் சர்வேக்களில் பங்கெடுக்க நீங்கள் தயாரானதும் உங்கள் முன்னிருக்கும் பெரிய கேள்வி எப்படி அந்த பெரிய நிறுவனங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பி பயன் பெறுவது என்பதாக தான் இருக்கும்.
    அதற்க்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது சரியான இணைய சர்வே நிறுவங்களை தேடி தேர்ந்ந்தெடுப்பது தான்… இதற்க்கு சிறந்த வழி, கருத்துக்களுக்கு அதிகம் பணம் தரும் சர்வே நிறுவனங்களை அடையாளப்படுத்தி காண்பிக்கும் சங்கங்களை (survey clubs) தெரிந்துகொள்வது தான். மேலும் தேடுபொறிகள் (Search engines) உங்களுக்கு சிறந்த சர்வே நிறுவங்களை தேட கை கொடுக்கலாம்.
    சார்வே (survey) மூலம் சம்பாதிக்க விரும்புவோர் கேட்கும் பொதுவான சில கேள்வி பதில்களுடன் :-

    சர்வே (survey) மூலம் எனது கருத்துக்களை தெரிவித்து சம்பாதிப்பது கடினமானதா?
    உண்மையில் இல்லை. உங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்க நேரமும் அதை தொடர்ந்து செய்யும் குணமும் இருந்தால் போதும்.
    இது எப்படி வேலை செய்கிறது?
    நீங்கள் முதலில் சர்வே இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும். பிறகு உங்களது இமெயிலிற்க்கு வரும் சர்வே பற்றிய இமெயிலை படித்து அதிலுள்ள சர்வேவிற்க்கு உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இதை செய்வதன் மூலம் இதிலிருந்து கணிசமான அளவு சம்பாதிக்க முடியும்.
    இதிலிருந்து எவ்வளவு சம்பாதிக்க முடியும்.?
    நீங்கள் மேற்கொள்ளும் ஒரு சர்வே அல்லது சந்தை ஆராய்ச்சிக்கு கிடைக்கப்பெறும் பணத்தை திர்மானிக்க நிறைய காரணிகள் உள்ளன. உதாரணத்திற்க்கு எந்த நாட்டை சேர்ந்தவர் நீங்கள் என்பதை பொறுத்து மற்றும் எந்த சர்வே இணையத்தில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து மற்றும் ஒரு சர்வேக்கு பதில் அளிக்க எடுத்து கொள்ளப்படும் நேரம் எவ்வளவு ஆகும் என்பதை பொறுத்து இவை தீர்மானிக்கப்படுகிறது.
    ஆனால் நான் பார்த்தவரையில் ஒரு சர்வேயிற்க்கு $1 முதல் $10 வரை தரும் நிறுவனங்கள் உள்ளன.
    சர்வே (survey) எப்பொது வேண்டுமானாலும் பூர்த்தி செய்யலாமா?
    நிச்சயமாக. ஆனால் நீங்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும், அது மற்றவர்களும் உங்களுடன் போட்டி போட்டு கொண்டு சர்வேக்களுக்கு பதில் அளித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தான். ஆம், ஒவ்வொரு சர்வேயும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை நுகர்வோரின் கருத்துக்களை கேட்வே விரும்பும். அந்த எண்ணிக்கை முடிவதற்க்குள் உங்கள் சர்வேவிற்கான கருத்தை தெரிவிக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்க.
    இதை தவிர சர்வே கருத்தளிக்க தெரிந்து கொள்ள வேண்டியது?
    சர்வே மூலம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து சம்பாதிக்க ஒரு புதிய இமெயில் கணக்கை தொடங்கி கொள்ளுங்கள். ஏனெனில் சர்வேவிற்காக அனுப்பப்படும் இமெயிலினால் உங்கள் இன்பாக்ஸ் நிரம்ப வாய்ப்புண்டு.
    சரியான சர்வே இணையத்தில் தேர்ந்தெடுப்பது எப்படி?
    நான் முன்பே சொன்னதை போல, கருத்துக்களுக்கு அதிகம் பணம் தரும் சர்வே நிறுவனங்களை அடையாளப்படுத்தி காண்பிக்கும் சங்கங்களை (survey clubs) தெரிந்துகொள்வது தான். மேலும் இணையத்தில் திவிர தேடுதல் (Google Search) உங்களுக்கு சிறந்த சர்வே நிறுவங்களை தேட கை கொடுக்கும்.
    இருப்பினும் நான் தேடியதில் கிடைக்கப்பெற்ற சில இணையதளங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். ஒவ்வொன்றிற்க்கும் அதற்கே உரிய வழிமுறைகளும் பின்பற்றல்களும் உள்ளன. எனவே ஒரு இணைய தளத்தில் சேர்வதற்க்கு முன் அதன் Terms & Condition மற்றும் அவர்களின் Frequently Asked Questions (FAQ) போன்றவற்றை படித்துவிடுங்கள். மேலும் அவர்களை பற்றிய ஆய்வுகளை தேடியந்திரம் (Search Engines) மூலம் தேடி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
    உங்கள் கருத்துக்களை சர்வேவில் தெரிவிப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என்ற இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே comment பகுதில் தெரிவிக்கலாம். ஆனால் அதற்க்கு பணம் கேட்டுவிடாதீர்கள்?!  :)

    உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் சம்பாதிப்பது எப்படி?

     
    Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com