1/26/2014

வீட்டிலிருந்த படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டிலிருந்த படி இணையத்தில் சம்பாதிப்பது எப்படி?
நீங்கள் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புபவரா?. இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற இந்த தகவல்களை தேடி நீங்கள் மிகவும் சோர்ந்திருக்கக் கூடும். உங்களுக்கான சரியான விபரங்களை திரட்டி இங்கே அளித்திருக்கிறேன்.
பெரும்பாலான மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள், ஏன்? பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கூட இத்தகைய ஓய்வு நேர அல்லது பகுதி நேர வேலையை விரும்புகின்றனர், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போகிறது, அல்லது பெரும்பாலான வழிகாட்டுதலுக்கு பணம் முதலிடாக தேவைபடுகிறது, இலவசமாக கிடைக்கும் வழிகாட்டுதல்கள் தவறாகவே இருக்கிறது.அப்படி நாம் பணம் தர தயாராக இருக்கும் பட்சத்தில் கூட சரியான மற்றும் எளிதான வழிகாட்டுதல் இல்லாமல் தான் போகிறது. இவ்வித பிரச்சனைகளுக்கு தீர்வாகவே இந்த பதிவை உருவாக்கியுள்ளேன்.
இணையத்தளத்தில் இருக்கிறது என்பதால் மட்டுமே ஒரு செய்தி உண்மையாகாது?, இங்கு யார் வேண்டுமானாலும் இணைய தளம் (websites) அல்லது வலைப்பூ (Blog) போன்றவற்றை உருவாக்கலாம். இதற்கு கொஞ்சம் நேரம் மட்டுமே செலவாகும். இவ்வாறு நான் கூறுவதற்கு காரணம், நம்மில் பலர் இணையத்தில் வரும் போலியான சில “Online Money Making” விளம்பரங்களை கண்டு ஏமார்ந்து அதை வாங்கி முயற்சி செய்து தோல்வியடைந்து விட்டு முயற்சியை கைவிட்டுவிடுவோம். அதனால் யோசித்து செயல்படுவதே நன்று. இணையத்தில் இருக்கும் அனைத்து “Online Money Making” விளம்பரங்களையும் நான் குறை கூறவில்லை. அவற்றில் சில உபயோகமானதாக தான் இருக்கும், ஆனால் அதுவும் நம்மை பொறுத்தே செயல்படும். அதாவது நம்முடைய முயற்சி மற்றும் செயல்படும் திறன் இவற்றை பொறுத்தே அமைகிறது.
பெரும்பாலும் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், இவ்வாறு வருமானம் ஈட்டுவது சுலபம் என்று நினைகிறார்கள். உண்மை அதுவல்ல. இவ்வாறு இவர்களை நினைக்கவைப்பது ” வீட்டிலிருந்த படி இணையத்தில் Rs.50000/- சம்பாரிக்க “, “வீட்டிலிருந்தபடி ஒரு மணி நேரத்தில் ₨46,845.06 சம்பாதிக்கலாம்” என்ற இதுபோன்ற விளம்பரங்கள் தான். உண்மையில் சொல்ல போனால் நீங்கள் இந்த துறைக்கு (Online Money Making) புதியாவரானால், நாளொன்றுக்கு ஒருமணிநேரம் செலவழித்து ₨468.45 சம்பாதிக்கவே நிறைய நாட்கள் ஆகும். இவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் இதை நன்கு அறிவார்கள்.
என்னை தொடர்பு கொண்ட ஒரு நண்பர், சில Online Money Making விளம்பர பக்கங்களில் வரும் பயனீட்டாளர்கள் உரைகளை (testimonials) பார்த்துவிட்டு அவற்றை பற்றி என்னிடம் கூறி அந்த வழிகாட்டி புத்தகத்தை வாங்கலாமா? (அதன் விலை இந்திய மதிப்பில் 4000 ரூபாய்) என வினவினார். பெரும்பாலும் இந்த பயனீட்டாளர்கள் உரைகள் அனைத்தும் சரியானதாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. அவ்வாறு உண்மை எனினும் அந்த பயனிட்டளர் ஏற்கனவே இணையத்தில் நன்றாக வருமானமீட்டக் கூடியவராக இருப்பார், இந்த புத்தகத்திலுள்ள சில புதிய தகவல்கள் அவருக்கு மேலும் வருமானத்தை உயர்த்திக்கொள்ள உதவியாக இருக்கும். புதிதாக வருபவரை நாம் ஏற்கனவே இணைய தொழிலில் (Online Business) இருபவருடன் ஒப்பிட முடியாது என்பதையும், அவ்வாறு வரும் விளம்பரங்களை தவிர்த்துவிடுமாறும் கூறினேன்.
நான் இந்த பதிவை பதிவதற்கு காரணம், ஒன்றை உங்களுக்கு தெளிவாக கூறவே. இணையமல்லாத மற்ற தொழில் மற்றும் வியாபாரங்களில் குறைந்த நேரத்தில் அதிக வருமானம் ஈட்டுவதற்கு என்று secret இருப்பதுண்டா?. இல்லை அல்லவா?. அதே போல் இணையத்தில் வருமானம் ஈட்டுவதற்கு என்று தனியாக secret எதுவும் இல்லை. இதுவும் ஒரு முழுமையான வியாபாரம்.
அப்படியானால், இணையத்தில் வருமானம் ஈட்டவே முடியாதா? என்று அந்த நண்பர் மட்டுமல்ல, நிங்களும் கேட்பது புரிகிறது. உண்மையில் இந்த பதிவை எழுதுவது இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புவர்களுக்கான ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. மற்ற படி இணையத்தில் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. அதில் குறிப்பிட்டு நான்கு வகையை கூறலாம்.
அவை,
1. உங்களது இணையதளத்தின் மூலம் பணமீட்டுதல்.
2. பொருள்களை உருவாக்குவது மற்றும் விற்பது
3. மற்ற நிறுவனங்களின் பொருட்களை commission க்காக விற்பது
4. மென்பொருள் வேலை மூலம் பணமீட்டுதல்

இவற்றை பற்றிய முழுமையான தகவல்களை இந்த இணையதளத்தின் பகிர்ந்து வருகிறோம், இவ்விணைய தள பக்கங்களை தொடர்ந்து படியுங்கள்.
சரியான வழியில் உங்கள் நேரத்தை செலவு செய்தால், வெற்றி நிச்சயம்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com