12/03/2013

YouTube வீடியோ கோப்புக்களை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்க சிறந்த இரண்டு வழிகள் ...


                               youtube downloader fo android
Google Play Store இல் Android Smart Phone களுக்காக இலட்சக்கணக்கான  மென்பொருள்கள் கிடைத்தாலும் YouTube தளத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களை தரவிறக்க சிறந்த ஒரு மென் பொருளை நான் இது வரை காணவில்லை
எனவே உங்கள் Android சாதனத்துக்கு YouTube வீடியோ கோப்புக்களை தரவிறக்கசிறந்த இரண்டு முறைகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

முறை 1: உங்கள் Android சாதனத்தில் இருக்கும் இணைய உலாவி மூலம் http://www.keepvid.com எனும் தளத்துக்கு செல்லுங்கள்
Keepvid Mobile
பின் நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோ கோப்பின் URL இனை அந்த தளத்தில் தரப்பட்டுள்ள கட்டத்தில் இட்டு Download Button இனை அலுத்துக.
அவ்வளவு தான்.

முறை 2: இது TubeMate எனும் மென்பொருளை பயன்படுத்தி தரவிறக்கும் முறையாகும்.



இந்த மென்பொருள் Google Play Store இல் இல்லை என்றாலும் இதனை APK வடிவத்தில் தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் நிறுவிக்கொள்ள முடியும்.
இது ஏராளமான வசதிகளை கொண்டுள்ள ஒரு அருமையான மென்பொருளாகும். தரவிறக்க வேகமும் மிகச்சிறப்பாக உள்ளது. இதன் மூலம் YouTube தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பினை தரவிறக்கும் போது அதனை இது பல கூறுகளாக பிரித்து (Multiple Connection) தரவிறக்கி பின் ஒன்று சேர்த்து தருகின்றது. இதனால் ஒரு வீடியோ கோப்பினை தரவிறக்க அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.


இது தரவிறக்க வேக கட்டுப்பாட்டினையும் மேற்கொள்ள உதவுகின்றது. ஆகக்குறைந்த தரவிறக்க வேகம் 2Mbps தொடக்கம் 50Mbps வரை அமைத்திடும் வசதி தரப்படுகின்றது.


                                         mobile video downloader
நீங்கள் தரவிறக்கும் வீடியோ கோப்பினை தரவிறக்கி முடிந்த பின் ஒலி ஒன்றினை எழுப்பும் வகையில் அமைத்திட முடியும்.

மேலும் தரவிறக்கிய பின் சேமிக்க வேண்டிய இடத்தினை நீங்கள் விரும்பும் வகையில் அமைத்திடவும் முடியும்.

குறிப்பிட்ட வீடியோ கோப்பு தரவிறக்குவது தடைப்பட்டால் தடைபட்ட இடத்தில் இருந்து மீண்டும் தரவிறக்கும் வசதியையும் இம்மென்பொருள் தருகிறது இதனை தானியக்கமாக இயங்க செய்யவும் முடியும்.



மேலும் Wi-Fi இணைப்பு கிடக்கும் பட்சத்தில் மாத்திரம் நீங்கள் தரவிறக்க விரும்பினால் அதற்கான வசதியையும் இம்மென்பொருள் கொண்டுள்ளது.

இன்னும் பல ஏராளமான வசதிகளை கொண்டுள்ள இதனை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Click HERE

மேலே தரப்பட்டுள்ள இணைப்பு Zip செய்யப்பட்டுள்ளது எனவே அதனை தரவிறக்கிய பின் Extract செய்து குறிப்பிட்ட APK கோப்பினை பெற்றுக்கொள்க.

மேலும் குறிப்பிட்ட APK கோப்பினை உங்கள் Android சாதனத்தில் நிறுவும் போது ஒருவேளை Install Blocked என செய்தி வந்தால் அது உங்கள் Android Mobile இல் Settings இல் உள்ள ஒரு சிக்கலாகும் அதனை பின்வரும் முறையில் அமைத்த பின் மீண்டும் நிறுவுங்கள்.

Settings சென்று Security என்பதனுள் இருக்கும் Unknown Sources என்பதில் ஒரு Tick அடையாளம் இடுக அவ்வளவு தான்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com