Digital Camera மூலமோ அல்லது எமது Smart சாதனங்கள் மூலமோ நாம் பிடிக்கும் அழகிய புகைப்படங்களை நேரடியாக முகநூலிலோ அல்லது வேறு சமூக வலை தளங்களிலோ பகிர்ந்து கொள்வது மிகவும் குறைவு. மாறாக நாம் சில மென்பொருள்களை பயன்படுத்தி குறிப்பிட்ட புகைப்படத்தினை மெருகூட்டியே இணையத்தில் பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறு உங்கள் அழகிய புகைப்படங்களுக்கு மேலும் அழகு சேர்த்திட ஏராளமான
மென்பொருள்கள் இருந்தாலும் இணைய மேடையில் இருக்கும் மென்பொருள்களுக்கு
தனிச்சிறப்புண்டு காரணம் நாம் அவற்றினை தரவிறக்கவோ அல்லது எமது கணனியில்
நிருவுவதற்கோ அவசியம் இல்லை என்பதுடன் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும்
எந்த ஒரு கணனியை பயன்படுத்தியும் எமது அழகிய புகைப்படங்களுக்கு மேலும் அழகு
சேர்த்திடலாம்.
இது போன்ற சேவைகளை தரும் இணைய மென்பொருள்களில் PhotoMania எனும் இணைய மென்பொருளானது நான் கண்டவைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு இணைய மென்பொருளாகும்.
சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்த
உதவிடும் இந்த தளம் உங்களில் புகைப்படங்களை பல்வேறு கோணங்களிலும்
அழகுபடுத்திட பெரிதும் உதவுகின்றது.
மேலும் இந்த தளத்தில் நீங்கள் உங்களது புகைப்படங்களை Edit செய்து கொள்ள
எவ்வித கணக்குகளையும் துவங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் நேரடியாக
முகநூலில் பகிர்ந்து கொள்ளவும் வழி வகுக்கின்றது.
குறிப்பிட்ட தளத்தின் மூலம் நீங்களும் உங்கள் புகைப்படங்களை மெருகூட்ட விரும்பினால் கீழுள்ள இணைப்பில் சென்றுதான் பாருங்களேன்.
இது தவிர Stunwall எனும் தளமும் உங்கள் புகைப்படங்களை மெருகூட்டிக்கொள்ள
உதவுகிறது. இது Photo Mania போன்று அதிகம் வசதிகளை கொண்டில்லா விட்டாலும்
ஓரளவு பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
Stunwall தளத்துக்கு செல்ல கீழுள்ள இணைப்பில் செல்க.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Post a Comment