சாதாரண Mobile Phone களை பயன்படுத்துபவர்களில் ஏராளமானோர் அதனை விட்டு
விட்டு இன்று சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் Smart Phone களுக்கு நகரத்
தொடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதற்கு காரணம் மலிவு விலைகளில்
கிடைப்பது என்பதனை விட அவற்றில் காணப்படும் கவர்சிகரமான வசதிகளே எனலாம்.
அதிலும் Games, Application என்றால் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
அந்தவகையில் இன்று iOS மற்றும் Android
ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டிருக்கும் Smart Phone களுக்கான கேள்வி
அதீதமாக அதிகரித்திருப்பதுடன் அவற்றின் மூலம் இயக்கப்படும் Games,
Application என்பவற்றுக்கான கேள்வியும் பல மடங்கு அதிகரித்திருப்பதனை
அவதானிக்க முடிகிறது.
எனவே Games,
Application என்பவற்றுக்காக பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமது
தயாரிப்புக்களை இலவசமாகவும், கட்டணத்துடனும் வாசகர்களுக்கு வழங்குகின்றது
என்றாலும் இவற்றுள் மிகவும் பிரபலமாவது மிகச்சிறந்த பண்புகளை கொண்ட
தயாரிப்புக்களே.
விடயம் என்னவெனில் ஏற்கனவே Angry Birds எனும் நாமத்தில் Smart Phone
களினூடாக அனேகரது உள்ளங்களை வென்று விட்ட Rovio Stars Ltd ஆனது Juice Cubes
எனும் இன்னுமொரு புரட்சிகரமான விளையாட்டினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நாம் ஏற்கனவே எமது தளத்தில் அறிமுகப்படுத்திய Candy Crush Sega
இனை ஒத்து காணப்படுகின்றது. இது ஆரம்பத்தில் 30 கட்டங்களுடன்
அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் நேற்றைய தினம் (31-10-2013) மேலும் பல
புதிய கட்டங்களுடன் இது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இதில் 165 க்கும் மேற்பட்ட கட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மிகச்சிறந்த காட்சியமைப்பு மற்றும் ஒலி
அமைப்புக்களையும் கொண்டுள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுடன் சவால் விட்டு
விளையாடும் வகையில் Candy Crush இல் போன்று முகநூலுடன் தொடர்பு
படுத்திக்கொள்ளவும் முடியும்.
நீங்களும் இதனை உங்கள் Android அல்லது iOS சாதனங்களுக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
Juice Cubes for Android ==========>
Download
Juice Cubes for iOS =============>
Download
மேலும் தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள நமது
Facebook பக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள்...பார்வையிட்டதட்கு நன்றி நண்பர்களே மீண்டும் வருக...
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Post a Comment