Showing posts with label தகவல் தொழில்நுட்ப காணொளிகள். Show all posts
Showing posts with label தகவல் தொழில்நுட்ப காணொளிகள். Show all posts

3/06/2014

கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் இரண்டு வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தான் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம்.


ஆனால், இவை இரண்டும் வெவ்வேறான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை இங்கு பார்க்கலாம்.


ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன் இயக்க சாப்ட்வேர் தொகுப்பாகும்.

இது மொபைல் போன் இயங்குவதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம், மிடில்வேர் எனப்படும் அப்ளிகேஷனைத் தொடர்பு படுத்தும் சாப்ட்வேர் மற்றும் முக்கிய, அத்தியாவசியத் தேவைகளுக்கான அப்ளிகேஷன்கள் அடங்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள், இணையத்தில் கிடைக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயர்ந்து கொண்டே போகிறது.

தொடக்கத்தில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, 2003ல் தொடங்கப்பட்ட Android OS Inc என்ற நிறுவனம் உருவாக்கியது. ஆனால், 2005 ஆம் ஆண்டில், கூகுள் இதனை வாங்கியது.

தொடர்ந்து அதன் பல்வேறு பதிப்புகளை உணவுப் பொருட்களின் பெயர்களோடு, ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் வெளியிட்டது. தற்போது அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டது ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆகும்.

டேப்ளட் போன்ற சாதனங்களிலும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் 3.0 (Honeycomb), டேப்ளட் பி.சி.க்கள் இயக்கத்திற்கு மட்டும் என உருவாக்கப்பட்டதாகும்.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது லினக்ஸ் அடிப்படையில் உருவானது. இணைய அப்ளிகேஷன்களுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டதாகும். UBUNTU என அழைக்கப்படும் இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பதிப்பினை ஒட்டி குரோம் ஓ.எஸ். அமைக்கப்பட்டது.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வழக்கமான அப்ளிகேஷன்கள் எதுவும் இருக்காது. இணைய அப்ளிகேஷன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, இதனை இன்ஸ்டால் செய்திடவோ அல்லது அப்டேட் செய்திடவோ தேவை இல்லை.

இணைய அப்ளிகேஷன்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து, அவை சிஸ்டத்தின் இயற்கையான அப்ளிகேஷன்களாக காட்டப்படும். எளிமை, பாதுகாப்பு மற்றும் வேகம் தான், குரோம் சிஸ்டத்தின் அடிப்படை சிறப்பம்சங்களாகும்.

கூகுளின் அன்ரோயிட் - குரோம் இயக்க முறைமைகள்

2/23/2014

உலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம்.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது.
இனிமேல் பாட்னாவின் என்ஐடி கல்வி நிறுவனத்தில் இருந்து தானாபூர் பகுதி வரை கிட்டத்தட்ட 20 கி.மீ பரப்பளவில் வசிக்கும் மக்கள் எவ்வித தடையுமின்றி, வைஃபை வசதியை அனுபவிக்கலாம், எவ்வித கட்டணமும் கிடையாது.
இன்டர்நெட் தகவல் மையத்தை திறந்து வைத்த முதல்வர் நிதிஷ் குமார் இந்த இலவச ‘வைஃபை’ வசதியையும் ஆரம்பித்து வைத்தார்.
பல பகுதிகளில் இந்த ‘வைஃபை’ வசதியை கொண்டு 100 கண்காணிப்பு கமெராக்களை பொருத்தும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய நிதிஷ், ராஜ்கிர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை சீனா தான் முதலிடத்தில் வகித்தது, அதுவும் வெறும் 3.5 கிமீ பரப்பு பகுதிகளில் தான் இலவச ‘வைஃபை’ மண்டலத்தை உருவாக்கியிருந்தது.
இதை விட பல மடங்கு பெரிய அளவில் பீகார் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் வைஃபை மண்டலத்துக்கு உட்பட்ட 11 முக்கிய சாலைகளில் எந்த வாகனம் சென்றாலும், அதன் எண்ணை துல்லியமாக கண்காணிப்பு கமெரா மூலம் பார்க்க முடியும், ஒரு குறிப்பிட்ட வாகனம் எங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணிக்க முடியும்.

உலக சாதனை படைத்த பீகார்

1/26/2014

             

அப்பிள் நிறுவனம் தனது முதலாவது Mac கணனியை அறிமுகம் செய்து நேற்றுடன் 30 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
உலகளாவிய கணனி பாவனையாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற அப்பிளின் ஏனைய தயாரிப்புக்களுக்கு அடித்தளமாக விளங்கிய முதலாவது Mac கணனியான Macintosh 128k ஆனது 24th of January 1984 அன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை 30 வருட முடிவில் தற்போது Apple Mac Pro எனும் கணினியை அறிமுகம் செய்யவுள்ள அந்நிறுவனம் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

முதலாவது Mac கணனியின் 30 வருட பூர்த்தியை கொண்டாடியது அப்பிள் (வீடியோ இணைப்பு)

10/12/2013

Python Tutorial in Tamil 15 More Methods

Python Tutorial in Tamil 14 Intro to Method

Python Tutorial in Tamil 13 Slicing Lists

Python Tutorial in Tamil 12 More List Function

Python Tutorial in Tamil 11 Editing Sequence

Python Tutorial in Tamil 10 Slicing

Python Tutorial in Tamil 9 Sequence & List

Python Tutorial in Tamil 8 Raw Input

Python Tutorial in Tamil 7 More On Strings

Python Tutorial in Tamil 6 Strings

Python Tutorial in Tamil 5 How to Save Your Program

Python Tutorial in Tamil 4 Modules & Function

Python Tutorial in Tamil 3 Varible

Python Tutorial in Tamil 2 Numbers & Math Operators

Python Tutorial in Tamil 1. Introduction

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com