3/02/2014

கம்பியூட்டரில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு

இன்றைக்கு கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.
ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.
ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம்

ரொம்ப ஸ்லோவா கம்பியூட்டர் இயங்குகிறது அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது

தவறான கணிப்பாகும். கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.
 
 
புளூ ஸ்கிரீன் ஆட் டெத்

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன. நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.

கம்ப்யூட்டர் தொடங்க மறுக்கிறது
உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா? அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com