மொபைலை வைத்துப் பேசலாம் என்பது முந்தைய நிலை. “பேசவும் செய்யலாம்”
என்பது தான் இன்றைய நிலை. இன்றைய மனிதர்களின் ஆறாம் விரல் இந்த மொபைல்
தான். அது இல்லாவிட்டால் ஏதோ ஆளில்லாத தீவில் தத்தளிக்கும் ஆமையைப் போல
தடுமாறி விடுகிறது மனசு. பெயர் இல்லாத மனுஷன் கூட இருக்கலாம், ஆனா போன்
இல்லாத மனுஷன் இருக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு இப்போதைய மொபைல் ஆதிக்கம்
கலிபோர்னியா காட்டுத் தீயாய் பற்றிப் படர்ந்து விட்டது. இதனிடையே இப்போது
சகலரும் பயன் படுத்தும் ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக்
கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்சங்களை
கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன்
‘செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து
பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது
அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.

குறிப்பாக் ‘பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அந்நியர் பயன்படுத்துவதற்கு எதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான முறைகளில் மேற்படி பாதுகாப்பை திறக்க முயற்சித்தால், செல்போன் தானாக தனது டேட்டா அனைத்தையும் அழித்துக்கொள்ளும் வகையில் கட்டமைத்துக் கொள்ளலாம். மொபைல் ட்ராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்… அந்த சிம்கார்டு குறித்த விவரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரச்செய்யுமாறு உள்ளிடலாம்.
இந்நிலையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன செல்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட்கள் உபயோகிக்கும் ரகசிய போன்களை போன்றே உள்ளது எனலாம். இந்த போனில் உள்ள விசேஷம், இதை உரிமையா ளர் மட்டுமே இயக்க முடியும். மற்றவர்கள் இந்த போனை பார்க்க மட்டுமே செய்யலாம். அதை மீறி, அதை இயக்க முயன்றால் உள்ளே இருக்கும் தகவல்கள் அனைத்தையும் இந்த போன், தானாகவே அரூ.த்துவிடும். இரட்டை சிம்முடன் இயங்கும் இந்த போனின் மற்றொரு சிறப்பம்சம், சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம், எல்டிஇ என்று 3 விதமான அலைவரிசைகளிலும் இயங்குவதுதான். இதனால் எந்த நேரத்திலும், சிக்னல் கிடைக்காமல்போக வாய்ப்பில்லை.
மேலும், இதை விரல்ரேகை பதியும் இயந்திரம் மற்றும் செயற்கைகோளுடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆண்டு ஆராய்ச்சியில் உருவான இந்த செல்போனின் விலை விவரம், எப்போது பொதுமக்களுக்கு கிடைக்கும் போன்ற தகவல்களை போயிங் வெளியிடவில்லை. ரகசியங்களை காக்க விரும்பும் அரசு துறைகள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் பணக்காரர்களை குறி வைத்து போயிங் நிறுவனம் இந்த செல்போனை தயாரித்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment