டிம் பெர்னர்ஸ் லீ |
இணையம் நமக்கு தகவல்களைத் தருகிறது; நாம் வாழும் சமூகத்தை நம்முடன் இணைக்கிறது. வர்த்தகத்தையும், நம் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள அடிப்படைக் கட்ட மைப்பாய் இயங்குகிறது.
நாம் மகிழ்வாக இருக்க, பொழுதினைப் பொறுப்போடும், ரசிப்புத் தன்மையுடனும் கழிக்கத் தேவையானவற்றைத் தருகிறது. இப்படி இன்னும் இந்த பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்.
இது போல இணையத்தினை வடிவமைத்துத் தந்ததன் பின்னணியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இருக்கலாம். இருப்பினும், தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வந்தது சிலரே.
விண்ட் செர்ப் மற்றும் பாப் கான்
இன்று
இணையத்தின் தந்தையர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் தான்
இணையத்தினை முதன்முதலில் வடிவமைத்தவர்கள். அமெரிக்காவில் இயங்கிய
பொறியாளர்கள். கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள். இணையத்தின் கட்டமைப்பான
Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP),
என்பதனை வடிவமைத்தவர்கள்.
டிம் பெர்னர்ஸ் லீ
World Wide Web (WWW) என்னும் கட்டமைப்பை உருவாக்கியவர்.
லினஸ் டோர்வால்ட்ஸ்
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அமெரிக்க சாப்ட்வேர் பொறியாளர். லினக்ஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிற்கு அடிப்படையை அமைத்தவர். யூனிக்ஸ்
சிஸ்டம் குறித்து பல்கலையில் படித்த பின்னர், லினக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பினை
தன் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றவர்.
| லினஸ் டோர்வால்ட்ஸ் |
ராஸ்மஸ் லெர்டோர்ப்
டேனிஷ் நாட்டைச் சேர்ந்த கனடா நாட்டுக் குடிமகன். பொறியாளர். இன்று இணைய
தளங்களில் பயன்படும் PHP ஸ்கிரிப்டிங் மொழியை அதன் வேரிலிருந்து அமைத்துக்
கொடுத்தவர். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இது
பயன்படுத்தப்படுகிறது. பத்து லட்சம் இணைய சர்வர்களை இது இயக்குகிறது. PHP
என்பது முதலில் Personal Home Page என்பதன் சுருக்கமாக இருந்தாலும்,
இப்போது PHP Hypertext Preprocessor என அழைக்கப்படுகிறது
Post a Comment