அமெரிக்காவின் ஹென்னெஸ்ஸே என்ற நிறுவனம் வெனோம் ஜீ.டி லோட்டஸ் எக்ஸீஜ் என்ற 7 ஆயிரம் சிசி என்ஜின் திறன் கொண்ட காரை வடிவமைத்துள்ளது.
இந்த கார் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
இதற்கு முன்னர் மணிக்கு 431 கி.மீ
வேகத்தில் செல்லக்கூடிய "புகாட்டி வெய்ரோன் சூப்பர் ஸ்போர்ட் காரே' உலகின்
அதிவேக கார் என்ற சாதனையைப் பெற்றிருந்தது.
இதன் சோதனை ஓட்டம் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்றது.
ஒரு திசையில் பயணித்த வெனோம் காரால், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடியவில்லை.
இரு திசைகளிலும் குறிப்பிட்ட கார் பயணம் செய்ய வேண்டும் என்பது கின்னஸ் சாதனைக்கான விதிமுறையாகும்.
ஆனால் ஒரு திசையில் மட்டுமே வெனோம் பயணம் செய்துள்ளதால் அது கின்னஸ் சாதனையில் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.
Post a Comment