பென்னி பால்மருக்கு வயது 29. இந்த வயதில் அவருக்கு தூக்கம் வருவதில்
பிரச்சனை ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு அதிகமாக அவரால்
தொடர்ந்து தூங்க முடியவில்லை. இதனால், அவர் அதிக சோர்வுடனும் மற்றும்
உணர்ச்சிகரமாகவும் இருந்ததுடன் உடல்நிலை பலவீனமடைந்தும் காணப்பட்டது.
ரீ-டைமர் கண்ணாடி
இந்நிலையில் அவர் ரீ-டைமர் கண்ணாடியை அணிய ஆரம்பித்தார். கடந்த 6
மாதமாக அதை அணிந்ததன் பலனாக தற்பொழுது அவருக்கு நன்றாக தூக்கம் வருகிறது.
இரவு முழுவதும் தொடர்ந்து தூங்க முடிகிறது. எளிதில் தூக்கம் வருவதுடன்,
நள்ளிரவில் தூக்கம் கலைவது என்ற பிரச்சனையும் ஏற்படவில்லை.
இந்த வகை கண்ணாடிகள் எல்.ஈ.டி. எனப்படும் லேசர் கதிர்களை உமிழும் ஒளியை
கொண்டிருக்கிறது. இது இயற்கையான ஒளி பரவுவது போன்று கண்களில் ஒளியை
தருகிறது. இதனால் உடலின் கடிகார சமச்சீர் தன்மை ஒழுங்குபடுத்தப்படுகிறது.
இந்த கண்ணாடி வெள்ளை நிற பிரேம்களை கொண்டது. அதில் லென்சுகள் இல்லை.
கண்ணாடியின் கீழ் பாகத்தில் சிறிய பச்சை நிற எல்.ஈ.டி. வகை ஒளிக்கற்றைகள்
வெளிவருகின்றன.
பால்மர் கருத்து
இது குறித்து பால்மர் கூறும்போது, எனது வாழ்க்கை நன்றாக மாறுவதற்கு அது
பயனளித்தது என்று கூறுவதில் மிகையில்லை. நான் களைப்பாக இருப்பதோ அல்லது
உணர்ச்சிகரமாக இருப்பதோ தற்பொழுது இல்லை.
அனைவரிடமும் பொறுமையாக இருக்கிறேன். பிறரோடு நன்றாக பழகுவதற்கு ஏற்ற
ஆற்றல் என்னிடம் அதிகமாகவே இருக்கிறது. இன்சோம்னியா எனப்படும் தூக்கத்தை
பாதிக்கும் வியாதியானது தனது உடல்நலனை பாதிக்கும் பிரச்சனையாக இருந்தது.
பள்ளிக்கூடத்தில் பாதிப்பு
இது சிறுமியாக இருக்கும்பொழுதில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனால், அவருக்கு மிக்க ஏமாற்றமும் மற்றும் கோபமும் ஏற்பட்டு வந்துள்ளது.
பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தி கொண்டிருக்கும் பொழுது தூக்கம் வந்துவிடும்.
எனது ஆசிரியருக்கு எனது பாதிப்பு குறித்து புரிந்து கொள்ள முடியாது.
அது எனது நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படுவதையும் பாதித்தது. எனது
வாழ்க்கையில் உண்மையில் அது பாதிப்பை ஏற்படுத்தியது. நாள்தோறும்
மேற்கொள்ளும் பணிகளை பாதித்தது.
இதற்காக தூக்க மாத்திரைகளை எடுத்து கொண்டபோது ஆரம்பத்தில் பலனித்தாலும்,
அதன் பின் அதனை சார்ந்திருக்கும்படியாக அமைந்து விட்டது. எனவே, அதனை
நிறுத்தினேன். இன்சோம்னியா வியாதி மோசமடைந்தது. யோகா மற்றும் தியானம்
போன்ற இயற்கை சார்ந்த விசயங்களையும் மேற்கொண்டேன். இவை அனைத்தும் எனக்கு
தோல்வியையே தந்தன.
ஆனால், ஆஸ்திரேலிய நாட்டின் பிளைண்டர்ஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களால்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த கண்ணாடியானது எனக்கு அதிக பலனை தந்துள்ளதுடன்
வாழ்க்கையையே மாற்றி அமைத்துள்ளது என்றும் பால்மர் கூறுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment