2/12/2014

உடலில் இருந்து அகற்றப்பட்ட மனித நுரையீரலை வெளியே பாதுகாக்கும் கருவி

lungஉடலில் இருந்து அகற்றப்பட்ட மனித நுரையீரலை வெளியே பாதுகாக்கும் கருவியை டாக்டர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.
மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குறிப்பிட்ட நேரத்துக்குள் மற்றொருவரின் உடலில் பொருத்துகின்றனர். ஆனால் குறிப்பிட்ட நேரம் தவறிவிட்டால் அகற்றப்பட்ட உடல் உறுப்பு செயல் இழந்து வீணாகிவிடும்.
அப்பிரச்சினைக்கு தீர்வு காண தற்போது அதிநவீன கருவி கண்டபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘உடல் உறுப்பு பாதுகாப்பு கருவி’ என பெயரிடப்பட்டுள்ளது.
பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அக்கருவியில் மனித உடலில் நிலவும் வெப்பநிலை இருக்கும். அது மனித உறுப்புகளை உடலில் இருப்பது போன்று பல மணி நேரம் பாதுகாக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மனித நுரையீரல் இப்பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது. பின்னர் அது மற்றொருவரின் உடலில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இச்சாதனையை அமெரிக்காவின் ‘போனிக்கஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு நிகழ்த்தியுள்ளது. இக்கருவியை மசாசூசெட் மருத்துவ நிறுவனத்தின் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நுரையீரல் மட்டுமின்றி உயிர் காக்கும் இருதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும் பாதுகாக்க முடியும்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com