2/10/2014

தனது கையடக்க தொலைபேசி பயனாளர்களின் குறுந்தகவல்களை உளவு பார்க்கும் பேஸ்புக்

சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது கையடக்க தொலைபேசி பயனாளர்களின் எஸ். எம். எஸ். மற்றும் எம். எம். எஸ். களை உளவு பார்ப்பதாக பிரபல கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது.

  
கையடக்க தொலைபேசி வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் சாட் என்ற சேவையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எஸ். எம். எஸ். வசதி போன்றே பேஸ்புக்கில் சாட் செய்யும் வசதி அளிக்கப்படுகிறது.

பதிவு செய்த அலைபேசி எண், வலைத்தளத்தில் தங்கி விடுகிறது. அதை அழிப்பதற்குரிய வசதிகள் இல்லை.இந்நிலையில் பேஸ் புக் வலைத்தளம், தனது வாடிக்கையாளர் களின் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல் களையும், கருவியில் உள்ள நாட்காட்டி முதலான தனிப்பட்டத் தகவல்களையும் உளவு பார்ப்பதாக பிரபல இணைய கண்காணிப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு இதுவரை பேஸ்புக் பதில் எதுவும் தரவில்லை.

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட அதன் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடன், உளவு ரகசியங்களை அறிவதற்கு பேஸ்புக் வலைத்தளம் பயன்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com