மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி
ஸ்டீவ் பாமர் கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஓய்வு பெற்ற பிறகு தற்போது
அவ்விடத்தை நிரப்ப வருகிறார் இந்தியரான சத்யா நடெல்லா.
46
வயதான சத்யா, ஆந்திரா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர். மங்களூரில்
படித்தவரான சத்யா நடெல்லா கடந்த 22 வருடங்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்
பணியாற்றி அந்நிறுவனத்தின் உயர்வுக்கு வித்திட்டு தானும் உயர்ந்தவர்.
இவருக்கு
பிடித்த விளையாட்டு கிரிக்கெட். சிறு வயதில் பல போட்டிகளில் விளையாடியுள்ள
சத்யா, குழுவாக இணைந்து செயல்படுவதையும், வெற்றி பெறுவதையும் அதன் மூலம்
நன்கு கற்றதாக மனம் திறந்தார்.
கற்பதில்
இவருக்கு இருந்த ஆர்வமே இன்றைக்கு இவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு
வந்துள்ளது என நிச்சயமாகக் கூறலாம். “எப்போதுமே எதையாவது
கற்றுக்கொண்டிருப்பது எனக்கு உற்சாகத்தைத் தரும். சின்னதோ பெரியதோ
கவலையில்லை. சும்மா இருக்க பிடிக்காது” என்கிறார் சத்யா.
அதே
போல, எதையும் ஒரே மாதிரியாக செய்வது இவருக்குப் பிடிக்காதாம். மாற்றி,
வித்தியாசமாக செய்ய வேண்டும் என்கிற துடிப்பு இவரிடம் இருந்து கொண்டே
இருக்குமாம்.
“திறமையை
மதிப்பேன். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வேன். எப்போதுமே
ஒரு குடும்பம் போல இணைந்து செயல்படவே விரும்புவேன். அறிவு வேட்கை, ஆர்வம்
எல்லாமே என்னிடம் உண்டு. அதுதான் நான்” எனும் சத்யா, இன்றும் இணையத்தில்
ஏதாவது பயிற்சி திட்டம் இருந்தால் சேர்ந்து படிக்கிறார்.
படிப்பதற்கு
எந்த தகுதியும் தேவையில்லை. ஆர்வம் மட்டுமே போதும். இப்போதும் நியூரோ
சயின்ஸ் தொடர்பான கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயில ஆசையாக உள்ளது” என
தமது கல்வி தாகத்தை வெளிப்படுத்தும் இவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்
தலைமை செயல்முறை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில்
ஆச்சர்யபடுவதற்கொன்றுமில்லை.
Post a Comment