கோள்களை ஆராயும் முதல் விண்கலத்தை இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
இன்று அது விண்ணில் பாய்ந்த நூறாவது நாளாகும். சிவப்பு கோளான செவ்வாய்
கிரகத்தை ஆராய சென்றுள்ள இந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் தனது இலக்கை
அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடநத் நவம்பர் 5ந் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட
இவ்விண்கலத்தின் பயணம் சுமூகமாகவே இருந்து வருகிறது என இந்திய விண்வெளி
ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது 16 மில்லியன் கி.மீ
அப்பால் இந்த விண்கலம் சென்று கொண்டிருக்கின்றது. அவ்விண்கலத்துடனான ஒரு
வழி தகவல் பரிமாற்ற தொடர்பில் 55 விநாடிகள் தாமதமாக செல்வதாக
கூறப்பட்டுள்ளது. இந்த குறைபாட்டை போக்கும் வகையில் அதன் போக்கில்
திருத்தம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் விணகலத்தின் முதல் போக்குவரத்து திருத்தம்
வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இது மட்டுமின்றி வரும் காலங்களில்
விண்கலத்தின் போக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை சரிசெய்யும்
நோக்கில் முறையே ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் போக்கு
திருத்தம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மீதமுள்ள 490 மில்லியன் கிலோ மீட்டரை 210 நாட்கிளில் இந்த விண்கலம் கடந்து தனது இலக்கினை அடையும் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment