2/06/2014

ஹேப்பி பர்த்டே பேஸ்புக்

சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் பேஸ்புக் இன்று தனது 10வது பிறந்த நாளை இன்று(பிப்ரவரி 4ம் திகதி) கொண்டாடுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.
அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.
இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைத் தாண்டிவிட்டது.
கடந்த 2012-ம் ஆண்டில் பேஸ்புக்கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டொலராக இருந்தது. 2013-ம் ஆண்டில் அதன் வருவாய் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் கடந்த மே மாதம் தனது 30-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக என்னை உயர்த்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com