வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி
இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும்
உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது
உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ
விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.
தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு
தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும்
இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே
இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும்
வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை
கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க
தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற
சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல்
இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம்.
அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக்
கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள்
இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா
வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ,
வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை.இவ்வாறு கூறியுள்ளார்.
இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும்
விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து
வரும் சேத் ஷோஸ்டாக் என்ர விஞ்ஞானி கூறும் போது வானியல் விஞ்ஞானிகள்
விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை
கண்டறிந்து உள்ளனர்.
கடநத பிப்ரவரி மாதம் இது தொடர்பான கருத்தரங்கம் நாசாவில் நடந்ததாகவும்
அதில் விஞ்ஞானிகள் பல மேம்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும்
தெரிவித்து உள்ளார்.
வேற்றுகிறகவாசிகளை மூன்று வழிகளில் கண்டறியலாம் மேம்பட்ட- அறிவார்ந்த
நாகரீகங்கள் உள்ள பகுதிகளிலும்.சூரிய குடுமபங்கள் மற்றும் செவ்வாய்
ஜுபிடரின் துணைகோள்களான சந்திரன்களி உள்ள உயிரினங்கள் மூலமும், 2018 இல்
நாசா நிறுவ உள்ள மிக அதி நவீன தொலைக்கருவி மூலம் சூரிய குடும்பத்திற்கு
வெளியேயுள்ள கோள்களில் உள்ல நுண்ணுயிர் வாழ்க்கை அறிகுறிகள்
கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment