2/22/2014

1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் கொடுத்து வாட்ஸ்அப்பை வாங்கும் பேஸ்புக் !

1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்
ஸ்மார்ட் போனில் மெஸ்ஸேஜ் அனுப்ப பயன்படும் WhatsApp சேவையை 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் (19 பில்லியன் டாலர்) கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்க உள்ளது.இவற்றில் 25000 கோடி ரூபாய் வரை பணமாகவும் மீதி மதிப்பிற்கு பேஸ்புக் பங்குகளையும் கொடுத்து இந்த டீல் முடிய உள்ளது.
சமூக இணையதளங்களில் முதன்மையானதாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய சேவைகளை விலை கொடுத்து வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றது.

இதற்கு முன்பு இன்ஸ்டாகிராம் சேவையை 5000 கோடி ரூபாய்களுக்கு மேல் கொடுத்து வாங்கியது.தற்போது ஸ்மார்ட் போனில் மெஸ்ஸேஜ் அனுப்ப பயன்படுத்தப்படும் WhatsApp சேவையை 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளது.

பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் WhatsApp சேவையை உலகெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாதமும் 45 கோடி பேர் வரை பயன்படுத்துகின்றனர்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com