அட விடுங்கப்பா இனி பொருட்கள் வாங்கின மாதிரிதான் அதாவது உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும் பொருட்களை கொள்வனவு செய்த உடன் நாம் ஓடர் பண்ண பொருள் இன்னும் வந்து சேரவில்ல என்ற பயம் இருக்க கூடாது அது காலா காலத்தில் வந்து உங்கள் கைக்கு கிடைக்கும் கிடைத்து விடும்.
Electronic Items ஓடர் பண்ணி இருந்தால் பொருள் வந்த பிற்பாடு அதுக்கு அரசாங்கத்தால் வரி செலுத்த வேண்டி இருக்கும் பெரிய தொகை வராது Electronic Items விலையை பொறுத்து வேறுபடும்.
பொருள் கொள்வனவு செய்ய உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய அம்சம் paypal கணக்கு இது இல்லை என்றால் பொருள் கொள்வனவு செய்ய முடியாது ஏன் paypal கணக்கை பரிந்துரை செய்கிறார்கள் என்றால் சில வேலை நீங்கள் நேரடியாக கடன் அட்டை பயன்படுத்தினால் மோசடி செய்யக்கூடும் என்ற பயத்தினால் தான் இந்த paypal என்ற கணக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
paypal கணக்கில் நீங்கள் உங்கள் கடன் அட்டை மட்டும் இல்லாமல் சில வங்கியின் டெபிட் கார்ட்டையும் அனுமதி அளித்துள்ளார்கள் பய்பல் கணக்கு திறந்த பின்னர் உங்கள் கடன் அட்டையோ அல்லது டெபிட் அட்டையோ இணைக்க வேண்டும் என்றால் குறைந்தது இலங்கை ரூபாயில் 300/= பணம் இருக்க வேண்டும் இணைக்கும் கடன்/டெபிட் அட்டையில்....
இணைத்த பிறகு paypal உங்கள் டெபிட்/கடன் அட்டையை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் நான்கு ரகசிய இலக்கத்தை உங்களிடம் கேக்கும் கொடுத்தால் மாத்திரம உங்கள் கார்ட் இணைக்கப்படும் அந்த நான்கு ரகசிய இலக்கத்தை எங்க எடுப்பது உங்கள் டெபிட்/கடன் அட்டைக்கு பின்னால் வங்கியை தொடர்பு கொள்ளக்கூடிய இலக்கம் காணப்படும் தொடர்பு கொண்டு அந்த நான்கு ரகசிய இலக்கத்தை பெற்று உங்கள் கார்ட்டை இணைத்துக்கொள்ளுங்கள் இதக்கு தற்காலிகமாக மேட்குறிப்பிட்ட {LKR 300/=} உங்கள் வங்கிக் கணக்கில் வெட்டி எடுக்கப்படும் இது உங்கள் டெபிட்/கடன் அட்டை தானா என்பதை சோதிப்பதக்கு தான் இந்த நடவடிக்கை பயப்புட வேணாம் ரகசிய இலக்கத்தை கொடுத்து 24 மணித்தியாலங்களில் உங்கள் பணம் வங்கிக்கு திருப்பி வந்து விடும்.
பிறகு என்ன ebay யில் பொருட்களை வாங்க வேண்டியது தான் குறிப்பிட்ட பொருளின் விலை டாலரில் போட்டு இருக்கும் அதை உங்கள் நாட்டு ரூபாய்க்கு கன்வெர்ட் பண்ணி குறிப்பிட்ட பணத்தை வங்கியில் வைப்பு செய்து பொருட்களை கொள்வனவு செய்யுங்கள்.
உங்களுடைய பொருள் 100% உங்கள் கைக்கு கிடைக்கும் ஆனால் ஓன்று அவர்களின் feedback பார்த்துதான் கொள்வனவு செய்ய வேண்டும்.
அதுக்கு முதல் உங்களுக்கு ebay யில் தனியாக கணக்கு திறந்து கொள்ள வேண்டும் அதில் உங்களுடைய paypal கணக்கை இணைத்துக்கொண்ட பின்னர்தான் நீங்கள் பொருட்களை கொளவனவு செய்ய வேண்டும்.
ஸ்ரீ லங்கா நண்பர்கள் கவனத்திக்கு உங்களிடம் HNB,HSBC/Commercial டெபிட் கார்ட் இருந்தால் மாத்திரம paypal ஏற்றுக்கொள்ளும் .
பொருள் உங்கள் கைவசம் கிடைத்தால் பொருள் அனுப்பியவருக்கு மறக்காமல் feedback போடுங்கள் பொருள் கிடைக்க தாமதம் ஏற்பட்டால் அவர்களிடம் தொடர்பு கொண்டு உங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
Post a Comment