1/23/2014

கார்களில் வருகிறது ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்ட் கார்கூகுள் நிறுவனம் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தனது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை கார்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக ஜெனரல் மோட்டார்ஸ் (GM), ஆடி (AUDI), ஹோண்டா (HONDA), ஹ்யூண்டாய் (HYUNDAI) ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களுடனும், சிப் தயாரிக்கும் என்விடியா (NVIDIA) நிறுவனத்துடனும் இணைந்து Open Automotive Alliance என்ற குழுமத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஆண்ட்ராய்ட் அமைப்பை காரை ஓட்டுவதற்கு இடையூறு இல்லாதவாறும், பாதுகாப்பானதுமாக உருவாக்க இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.
சிஈஎஸ் 2014 நிகழ்ச்சியையொட்டி இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது கூகுள். மேலும் இந்த கார்கள் இந்த வருடத்திலேயே விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com