1/23/2014

சர்க்கரை நோய்க்காக கூகுள் கான்டாக்ட் லென்ஸ்

google contact lens for diabetesசர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு நோயை கண்காணிக்க ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் தயாரிக்கிறது கூகுள் நிறுவனம்.

நீரிழிவு நோய் தற்போது வளர்ந்து வரும் மிகப்பெரிய நோயாகும். உலகில் பத்தொன்பது நபர்களில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் அன்றாட பிரச்சனைகளில் ஒன்று இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாகும்.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை அளவு அவர்களின் கண்கள், கிட்னி மற்றும் இதயத்தை பாதிக்கும். ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு உடல் திரவங்கள் மூலம் குளுக்கோஸ் அளவை கண்காணிக்கிறார்கள். அதில் ஒன்று நமது “கண்ணீர்”.
ஆனால் கண்ணீரை கண்காணிப்பது சவாலான செயலாகும். நமது கண்ணீர் மூலம் குளுக்கோஸ் அளவை கணக்கிட கண்களில் பொருத்திக் கொள்ளும் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது கூகுள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவான கூகுள் எக்ஸ்.
இந்த லென்ஸில் மிகச்சிறிய மின்னணு சிப் மற்றும் க்ளுக்கோஸ் சென்சார் இருக்கும். ஒவ்வொரு நொடிக்கும் சர்க்கரை அளவை கண்காணித்து, அதிகமானாலோ, குறைந்து போனாலோ அணிந்திருப்பவருக்கு LED லைட் மூலம் தெரிவிக்கும்.
தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இந்த தொழில்நுட்பத்திற்கு கூகுள் நிறுவனம் பல்வேறு துணைகளை எதிர்பார்க்கிறது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com