1/05/2014

தகவல் கசிவதைத் தடுக்கும் செப்டிகா

நிறுவனங்களிலிருந்து தகவல் கசிவதை தடுக்கும் பொருட்டு மென்பொருளொன்றை ட்.சி.எஸ். லங்கா நிறுவனம் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டிகா எனப்படும் இப்புரட்சிகரமான மென்பொருளானது தரவுகள் கசிவதை தடுப்பது மட்டுமின்றி பல்வேறு நன்மைகளையும் அதனை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.
 இதன்மூலம் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு தனித்தனி கணினியும் கண்காணிக்கப்படுகின்றது. மேலும், நிறுவனத்தின் ஊழியர்கள் தமது தனிப்பட்ட மின்னஞ்சல், பென்டிரைவ், மடிக்கணினி, கையடக்கத் தொலைப்பேசிகள் மூலம் நிறுவனத்தின் தகவல்களை எடுத்துச் செல்கின்றாரா என செப்டிகா கண்டுபிடிக்கக்கூடியது.
 எனவே, அவ்வாறான தரவு பரிமாற்றம் இடம்பெற்றால் செப்டிகா அது தொடர்பில் நிர்வாகிக்கு அறிய தந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி செய்கின்றது. ஆகவே, செப்டிகா மூலம் நிறுவனங்களின் கணினிகளிலிருந்து தரவுகள் கசிவது ஊடுருவல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை போன்றன குறிப்பிடத்தக்களவு குறைக்கப்படுகின்றன.
 தொடர்ந்து, டிவைஸ் மேனேஞ்மன்ட், டேடா என்கிரிப்சன், எக்டிவிட்டி பிள்டரிங் புளக்கிங் போன்ற பல வசதிகளையும் செப்டிகா வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com