1/20/2014

பயனுள்ள குரோம் உலாவி...


        

இணைய உலகில் பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை முந்திக் கொண்டு கூகுள் குரோம் வளர்ந்து வருகிறது.
மக்களுக்கு ஏற்றவாறு பல புதிய வசதிகளும் அறிமுகமாகி கொண்டே உள்ளது.
குரோம் உலாவி பற்றி சில பயனுள்ள வசதிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
1. குரோம் உலாவியின் தேடல் பகுதியில், டெக்ஸ்ட் அமைக்கையில், எந்த வகையான டெக்ஸ்ட் அமைக்கப்படலாம் என சிலவற்றைக் காட்டும்.
இந்த வசதியை நீக்கிவிடலாம். ஏனென்றால் பெரும்பாலான இடங்களில் இந்த வசதி பயனற்றதாகவே உள்ளது.
இதற்கு செட்டிங்ஸ் ("Settings") என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய "Settings" டேப் கிடைக்கும். அல்லது chrome://chrome/settings/ எனவும் டைப் செய்து இதனைப் பெறலாம்.
இங்கு "Search" என்பதற்குக் கீழாக உள்ள "Enable Instant for faster searching" என்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
இதனை அடுத்து விண்டோவின் கீழாக உள்ள "Show advanced settings" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
கீழாகச் சென்று, "Privacy" என்ற இடத்தில் உள்ள "Use a prediction service to help complete searches and URLs typed in the address bar" என்பதில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
இவற்றை முடித்த பின்னர், "Settings" டேப்பில் கிளிக் செய்து மூடவும்.

         

2. குரோம் உலாவி, தரவிறக்கம் செய்யப்படும் பைல்களை C:UsersName Downloads என்ற டைரக்டரியில் பதிந்து வைக்கும்.
இதில் Name என்பது, யூசரின் பெயர் ஆகும். இதற்குப் பதிலாக, நாம் தரவிறக்கம் செய்யப்படும் பைல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை வெவ்வேறு டைரக்டரி அல்லது போல்டர்களில் பதிந்து வைக்க விரும்புவோம்.
இவ்வாறு செய்வதற்கு முன்பு கூறியது போல, செட்டிங்ஸ் பக்கம் செல்லவும்.
செட்டிங்ஸ் டேப் திறந்தவுடன், "Show advanced settings என்பதில் கிளிக் செய்திடவும்.
கீழாகச் சென்று "Downloads" என்பதன் கீழே, "Ask where to save each file before downloading" என்பதில் டிக் செய்து அமைக்கவும். முடிந்தவுடன் settings டேப்பில் கிளிக் செய்து மூடவும்.
3. குரோம் உலாவி தொடங்குகையில், எந்த இணையப் பக்கத்துடன் தொடங்க வேண்டும் என்பதனை, இங்கு எப்படி அமைக்கலாம் என்பதனைக் காணலாம்.
இதற்கு முதலில் wrench பட்டனைக் கிளிக் செய்திடவும்.
"Options" தேர்ந்தெடுக்கவும். இப்போது "Options" டேப் காட்டப்படும்.
இனி இடதுபக்கம் உள்ள "Basics" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
"On startup" என்ற பிரிவில், "Open the following pages" என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும்.
குரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும்.
இதற்கு "Add" பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு "Add page" என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com