மற்ற
விளையாட்டுகளை விட, வீடியோ விளையாட்டு விளையாடும் போது குழந்தைகளுக்கு
உடலில் நான்கு மடங்கு கலோரிசத்து இழப்பு ஏற்படுகிறது; அதே நேரம், இதய ‘’லப்
டப்’’ துடிப்பும் அதிகரிக்கறது.
ஹாங்காங்
பல்கலைக்கழக் மனித நடவடிக்கைகள் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு
அறிக்கையில் கூறியிருப்பதாவது. வீடியோ விளையாட்டு விளையாடும் குழந்தைகளின்
உடல் நிலை பலவகையில் பாதிக்கபடுகிறது. ஆறு முதல் 12 வயதுவரை உள்ள
குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும்போது, அவர்கள் இதயத் துடிப்பு
அதிகரிக்கறது.
அவர்களின்
உடலில் கலோரி வெப்ப ஆற்றல், வழக்கத்துக்கு மாறாக நான்கு மடங்கு குறைகிறது.
ஐந்து நிமிட நேரம் வீடியோ கேம் விளையாடினாலே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
மற்ற விளையாட்டுகளில் குழந்தைகளுக்கு பாதிப்பும் இல்லை; அதே நிலையில்
அவர்களின் உடல் நலத்திற்கும் உதவுகின்றன.
மற்ற
விளையாட்டுகளில் குழந்தைகளின் கலோரி எரிப்பு வெறும் 0.6 விழக்காடுதான்.
குழந்தைப்பருத்தில் உடல் வளர்ச்சிக்கு உடலில் கலோரி சத்து அதிகமாக தேவை.
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் கலோரி மிக
குறைவாகவே இழப்பு ஏற்படுகின்றது.
வீடியோ
கேம் விளையாடும்போது பதட்டம் அதிகரிக்கிறது; மன அழுத்தம் அதிகமாகிறது.
இதனால் குழந்தைகளின் இதயத் துடிப்பும் இரண்டு மடங்கு மேல் அதிகமாகிறது.
இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Post a Comment