மனிதனை போன்று தோற்றமளிக்கும் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் நம்மில்
பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த ரோபோக்கள் மனிதர்களுக்கு பயன்படும்
வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப
பணிகளை அவை செய்கின்றன. ஒரு வேலைக்காரன் என்ற நிலையில் உள்ள அவற்றை
தற்போது, பாதுகாப்பு பணி, மருத்துவ சிகிச்சை, உடல் நலம் பேணுதல்,
வழிகாட்டிகள் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப அமைப்பில் உயிரிமருத்துவ
பொறியியல் துறையின் பேராசிரியராக இருப்பவர் சார்லி கெம்ப். இவர், மனிதன்
என்ன செய்கிறானோ அதனை திரும்ப செய்யும் வகையில் ரோபோக்களை வடிவமைக்கும்
முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார். இதனால்
மனிதர்களுக்கு சேவை செய்யும் வேலைக்காரன் என்ற நிலையில் இருந்து சக மனிதன்
என்ற அந்தஸ்திற்கு ரோபோக்கள் உயர்த்தப்படும் என்றும் அதற்கான ஆய்வுகள்
பல்கலை கழகத்தில் நடைபெற்று வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி இதழில்
வெளியிடப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment