உயிரினங்களில் காணப்படும் இயற்கையான தசைகள் சேதமடையும் போது, அவற்றிற்கு பதிலாக செயற்கையான மாற்றீட்டு தசைகளை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு வெற்றியளித்துள்ளது.
புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் David H. Koch Institute - இல் பணியாற்றும் MIT ஆய்வாளர்களே இந்த செயற்கை மாற்றீட்டு தசையினை உருவாக்கியுள்ளனர்.
இச்செயற்கைத் தசையானது இருவகையான பொலிமர் சேர்வைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது மீள்தன்மை உடை, கட்டமைப்பையும் வழங்குவதற்காக ஒருவகை பொலிமர் சேர்வையும், நீர் போன்ற ஈரலிப்பு தன்மையை உறுஞ்சும்பொருட்டு பிறிதொரு பொலிமர் சேர்வையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment