அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் International CES (Consumer Electronics Show) என்ற பெயரில் சர்வதேச நுகர்வோர் மின்னணுவியல் கண்காட்சி நடக்கும்.
இது மின்னணுவியல், தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தக கண்காட்சி ஆகும். பல
முக்கிய நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகள் பற்றி அறிவிப்பை
வெளியிடும்.
இந்த வருட நிகழ்ச்சி நாளை முதல் பத்தாம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் எதிர்பார்க்கப்படும் புதிய அறிவிப்புகள்:
4k வீடியோ படக்காட்சி
தொலைகாட்சி திரையின் புதிய தொழில்நுட்பமாக Ultra HDTV 2012-ஆம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துல்லிய திரை அளவுடன் கூடிய வீடியோ
படக்காட்சி வசதியை Netflix, Youtube ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்த
வாய்ப்புள்ளது.
அணியக்கூடிய சாதனங்கள்
2013-ஆம் ஆண்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய கண்ணாடி, கைக்கடிகாரம்,
மருத்துவ கையணிகள் போன்ற அணியக்கூடிய சாதனங்கள் பற்றிய அறிவிப்புகள்
வெளியானது. இதில் சாம்சங் கியர் உள்ளிட்ட சில கைக்கடிகாரங்கள் மட்டுமே
கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு சாதனங்கள்
வெளியிடப்படலாம்.
இந்நிகழ்ச்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி தமிழ் நுட்பம் தளத்தில் படிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment