கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட முதலாவது சாதனத்தை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
Google Nexus 5 எனும் பெயருடன் வெளியாகும் இச்சாதனமானது 4.95 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
இவை தவிர 16GB அல்லது 32GB சேமிப்புக் கொள்ளளவு, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. இவற்றில் 16GB சேமிப்பு கொள்ளளவை கொண்ட சாதனம் 299 டொலர்கள் எனவும் 32GB சேமிப்பு கொள்ளளவைக் கொண்ட சாதனம் 399 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
Post a Comment