3/14/2014

              

பிரித்தானியாவைச் சேர்ந்த Blocks எனும் நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் மும்முரமாக களமிறங்கியுள்ளது.
இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுவரும் இக்கடிகாரம் GPS வசதியினையும் கொண்டுள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கடிகாரம் தொடர்பான வீடியோ ஒன்றினை Blocks நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விரைவில் உலகை கலக்க வரும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரம் ...

               http://tech.lankasri.com/photos/full/2014/03/iphone_5s_001.jpg
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட் கைப்பேசியான அப்பிளின் iPhone காணப்படுகின்றது.
இந்நிறுவனம் தற்போது iPhone 6 எனும் A8 Processor இனைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியை விரைவில் அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது.
இந்நிலையில் Foxconn குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்காக முன்பதிவு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இதனை ஆரம்பித்து சில நாட்களினுள் 90 மில்லியன் வரையானவர்கள் பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவில் சாதனை படைத்தது iPhone 6

BSNL நிறுவனத்துடன் இணைந்து சாம்பியன் கம்ப்யூட்டர்ஸ் புதிய டேப்ளட் சாதனத்தை வெளியிட்டுள்ளது.


6.5 அங்குலம் திரைய அகலம் கொண்ட இந்த டேப்ளத் பிசியில் ஒரு Dualcore Processor, 32GB வரை micro SD card மூலம் மெமரியை அதிகபடுத்தும்ம வசதி, 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா, முகம் பார்த்து பேசும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள பயன்படும் 2 மெகா பிக்சல் முன்புற கேமரா, 3500mAh பேட்டரி, வைபை, புளூடூத், எட்ஜ், ஜிபிஆர்ஸ், 3ஜி, மைக்ரோ USB ஆகிய வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

ரூபாய் 6,999 விலையில் BSNL Champion DM6513 Tablet அறிமுகம்

               
உடலின் குருதி அமுக்கம், ஒட்சிசன் போன்ற அளவுகளை கண்காணிப்பதற்கு iPhone கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Wello எனப்படும் விசேட சிப் மற்றும் சென்சார்களைக் கொண்ட இந்த iPhone வெளிக் கவரினை Azoi எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றின் மூலம் இதயத்துடிப்பு வீதம், சுவாச வீதம், உடல் வெப்பநிலை, குருதி அமுக்கம், குருதியில் ஒட்சிசனின் மட்டம் போன்றவற்றை நாள்தோறும் இலகுவாக கண்காணிக்க முடியும்.
iPhone 5 மற்றும் iPhone 5S இல் செயற்படக்கூடிய இந்த கவர் ஆனது புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் விலையானது 199 டொலர்கள் ஆகும்.

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தினை விரைவில் வெளியிடவுள்ளது.



பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தில் WiFi Sense தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் 
வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


WiFi Sense தொழில்நுட்பம் பயன்படுத்தும் முறை தொடர்பில் வீடியோ ஒன்று மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

3/13/2014

           http://tech.lankasri.com/photos/full/2014/03/samsung_tab_001.jpg

Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குல அளவும், 2560 x 1600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.3Ghz வேகத்தில் செயற்படவல்ல Quad Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும் புதிய டேப்லட்

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com