3/07/2014

உலகின் அதி வேக பறக்கும் கார் - அமெரிக்க பொறியாளர்கள் சாதனை

அமெரிக்க பொறியாளர்கள் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.



ஹென்னஸ்சிஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த வெனோம் ஜி.டி என்ற அதிவேக காரை வடிவமைத்துள்ளனர்.


இதன் சோதனை ஓட்டம் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்றது.

ஒரு திசையில் பயணித்த வெனோம் மணிக்கு 431 கி.மீ வேகத்தில் பறக்கும் புகாட்டிசூப்பர் ஸ்போர்ட் காரின் வேகத்தை முறியடித்து சாதனை படைத்துள்ளது.


ஆனால் கின்னஸ் சாதனையில் தொடர்ந்து புகாட்டியே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இரு திசைகளிலும் குறிப்பிட்ட கார் பயணம் செய்ய வேண்டும் என்பது கின்னஸ் சாதனைக்கான விதிமுறையாகும். ஆனால் ஒரு திசையில் மட்டுமே வெனோம் பயணம் செய்துள்ளதால் அது கின்னஸ் சாதனையில் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com