சர்வதேச நாடுகளில் பெய்யும் மழை அளவை கண்காணிக்க ஜப்பான் புதிய செயற்கை
கோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மழை அளவை மட்டுமின்றி புயல்
ஏற்படுவதையும் கண்காணித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இந்த செயற்கை கோள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதி நவீன
தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கை கோளை ஜப்பான் கியூஷு தீவில் உள்ள
தனேகஷீமா மையத்தில் இருந்து எச்–2ஏ ராக்கெட் மூலம் நேற்று விண்ணில்
செலுத்தியது.
இந்த செயற்கைகோள் மற்ற நாடுகள் ஏற்கனவே அனுப்பிய செயற்கை கோள்களுடன் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment