புற்றுநோய் தாக்கிய நோயாளிகளை ஆதரித்து, அரவணைக்க வேண்டிய பலர் அவர்களை
விலக்கி வைக்கும் நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் அமைப்பு
புற்று நோயாளிகளுக்கான www.insightmatrimony.com என்ற இணை தேடல் வலைத்தளம்
ஒன்றை அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.

கேரள மாநிலம், பத்தானம்திட்டா மாவட்டத்தின் கும்பநாட் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தை சேர்ந்த இளைஞர் குழு அடுத்த (மார்ச்) மாதம் 9-ம் தேதி இந்த வலைத்தளத்தை தொடங்குகிறது. www.insightmatrimony.com என்ற இந்த வலைத்தளத்திற்கான தேவை என்ன? என்பது தொடர்பாக இந்த இளைஞர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நிதின் சாக்கோ தாமஸ் ,”புற்றுநோயுடன் போராடி மீண்ட பிறகும் இந்நோய் தாக்கிய மக்களை நாம் தீண்டத் தகாதவர்கள் போல் ஒதுக்கியே வைக்கிறோம். அவர்களை சராசரி நபர்களாக பார்ப்பதற்கு பதிலாக நோயாளியாகவே கருதி விலகி நிற்கிறோம். நம்முடைய இந்த மனப்பான்மையால் அவர்களின் திருமணம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளும், சராசரி வாழ்க்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன.
இந்த பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாத்து தங்களது வாழ்க்கை துணையை தாங்களே தேர்வு செய்ய உதவும் வகையில் புற்று நோயில் இருந்து மீண்டவர்களுக்காக இந்த புதிய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதி, மதம், பொருளாதார நிலை என்ற எல்லைகளை கடந்து 20 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இதில் இலவசமாக பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான வரன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.எங்கள் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான ‘கீமோ தெராபி’ சிகிச்சை செலவுக்கு நிதியுதவி, வயதான புற்று நோயாளிகளுக்கான நிதியுதவி, புற்றுநோய் தொடர்பான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் போன்றவற்றை செய்யவும் திட்டமிட்டு வருகிறோம்.”என்று அவர் கூறினார்.

Post a Comment