3/03/2014

புகைப்பிடித்தால் ரயிலை நிறுத்தும் கருவி!

ஓடும் ரயிலில் புகைப் பிடிப்பவர்களால் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, ரயில் பெட்டியில் இருக்கும் பயணி யாராவது புகைப்பிடித்தால் உடனடியாக அந்த ரயில் நின்று விடும் வகையிலான தொழில்நுட்பம் விரைவில் முக்கிய அதிவிரைவு ரயில்களில் பொருத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக ராஜ்தானி, சதாப்தி உட்பட 22 விரைவு ரயில்களில் இக்கருவியை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
A commuter smokes inside a passenger train in Jammu
ஓடும் ரயிலில் பயணி சிகரெட் பிடித்தால் உடனடியாக அந்த ரயில் நிறுத்தப்படும் வகையில் ரயில்களில் புகை தடுப்பு கருவி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் ரயிலில் பயணி புகைப்பிடிப்பது கண்டறியப்பட்டு உடனடியாக ரயில் நிறுத்தப்படும். சுமார் 2 அல்லது 3 நிமிடங்களில் ரயில் நிறுத்தப்படும். மேலும் எந்த பெட்டியில் புகைப்பிடிக்கப்பட்டது என்பதையும் காட்டிவிடும். இந்த புகை தடுப்பு கருவி முதற்கட்டமாக 22 ரயில்களில் பொருத்தப்பட இருப்பதாகவும், இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com