3/06/2014

கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு போன்ற உறுப்புகளை இங்கிலாந்து மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர்.


பிறவியிலேயே சிலர் காது, மூக்கு இன்றி பிறக்கின்றனர். மேலும் விபத்துகளிலும் அவற்றை பறிகொடுக்கின்றனர். அது போன்ற குறை உள்ளவர்கள் இனி கவலைபட தேவையில்லை.

அவர்களுக்காக தற்போது மனித கொழுப்பில் இருந்து மூக்கு, காது போன்ற உறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்டிரீட் மருத்துவமனை மற்றும் யூ.சி.எல்.இன்ஸ்டியூட் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவர்களும் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர்.

மேற்கண்ட உடல் உறுப்புகள் தேவைப்படும் குழந்தைகளின் வயிற்றின் அடிப்பகுதியில் இருந்து சிறிதளவு கொழுப்பு எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

பின்னர் அவற்றை காது மற்றும் மூக்கு போன்ற வடிவங்களாக வளர்த்து, ரசாயன கலவைகளை அதில் சேர்த்து சவ்வு செல்களாக மாற்றிய பிறகு இறுதியில் தோல் பகுதியில் அதை ஒட்டி காதுகள் உருவாக்கப்படுகின்றது. இதே போன்று மூக்குகளும் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ஆய்வில் ஸ்டெம் செல்கள் மூலம் மேலும் பல உறுப்புகள் தயாரிக்க பயன்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com